Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: வல்லாதிக்க நாடுகளின் வணிக நெருக்கடி காலப்போக்கில் Sat May 22, 2010 3:14 pm | |
| வல்லாதிக்க நாடுகளின் வணிக நெருக்கடி காலப்போக்கில் ஆயுதமோதலாக வெடிக்குமா?.
தைவானுக்கு 6.4 பில்லியன் டொலர் ஆயுத விற்பனையை அமெரிக்கா அறிவித்துள்ளது. தீவிர எதிர்ப்பை சீனாவிடம் தூண்டியுள்ளதுடன், இரு பெரிய சக்திகளுக்கு இடையே அழுத்தங்களை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. விளைவுகளை பற்றிக் கவலைப்படாமல் இரு புறத்திலும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் உறுதி இராஜதந்திர, அரசியல் உறவுகளில் வெளிப்படையான பிளவு என்னும் தோற்றத்தை எழுப்புகிறது.
அமெரிக்காவை பொறுத்த வரையில், சீனாவிடம் எதிர்ப்பு இருக்கும் என்பதை நன்கு அறிந்தும் ஆயுத விற்பனை பற்றிய முடிவை அறிவித்திருப்பது, பெய்ஜிங்கின் பெருகும் உலகப் பொருளாதார, அரசியல் செல்வாக்கை எதிர்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கையாகும். நியூ யோர்க் டைம்ஸில் அண்மையில் வந்த கட்டுரை ஒபாமா நிர்வாகம் “எதிரியை பின்வாங்க செய்ய தொடங்கிவிட்டது என்று அறிவித்துள்ளது. ஆயுத விற்பனைத் தொகுப்பை அறிவித்த அளவில், அமெரிக்கா “சீனா, தாய்வான், மஞ்சூரியா தாய்வான் ஆகியவற்றின் சட்டபூர்வமான அரசு சீனாதான் என்ற ஒரு சீனா என்ற கொள்கையை 1972 இல் அமெரிக்கா உறுதிப்படுத்திய பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் இராஜதந்திர பிரச்சினையில் மிகுந்த உணர்வு பூர்வ இதயத்தõனத்தை நேரடியாக தாக்கும் விதத்தில் உள்ளது என்றும் அது எழுதியுள்ளது. | |
|