BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசெத்தது போல நடிக்கும் பாம்பு Button10

 

 செத்தது போல நடிக்கும் பாம்பு

Go down 
AuthorMessage
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

செத்தது போல நடிக்கும் பாம்பு Empty
PostSubject: செத்தது போல நடிக்கும் பாம்பு   செத்தது போல நடிக்கும் பாம்பு Icon_minitimeMon Jun 07, 2010 10:41 am

வணக்கம் BTC எமது இதயங்களே!

நாம் எல்லோருக்கும் பாம்பு என்றால் பயம்தான்.பார்த்தால் அடித்து கொல்லாமல் விடமாட்டோம்.ஆனால் பாம்பு மனிதனுக்கு எந்த தீங்கும் செய்வதில்லை.நன்மைதான் செய்கிறது. உணவுப்பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் எலிகளை தீர்த்து கட்டுகிறது.

பொதுவாக பாம்பை கொல்லாமல் விடுவதுதான் இயற்கைக்கு செய்யும் நன்மை. பல்லுரியத்துக்கு பாதுகாப்பு.! இந்த ஆண்டு உலக பல்லுரிய ஆண்டு. நல்ல பாம்பு வந்தால் என்ன செய்வது என்கிறீர்களா. கொல்லாமல் விட்டுவிடுங்கள்.அவ்வளவுதான். நாம் தொந்தரவு செய்தால் மட்டுமே, அல்லது நாம் மிதித்தால் தான், அது நம்மைக் கடிக்கும்.நம்மைத் தேடி வந்து வீட்டுக்குள் வந்து கடிப்பது கிடையாது. நாம்தான், அவைகளின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதால்தான் அவை நம் இடத்திற்கு வருகின்றன. அவைகளுக்கு இந்த நிலைமை. அவைகளின் இடத்தை நாம் பிடித்தால்/ஆக்கிரமிப்பு செய்தால், அவை எந்த கோர்ட்டில் போய் வழக்கு தொடுக்கும். ?

நாம் கதைப்பது போல், எந்த கட்டுவிரியனும் கொம்பேறி மூக்கனும். மனிதன் செத்துவிட்டானா என்று இடுகாடு வரை போய் இருந்து மரத்தில் ஏறிப் பார்ப்பதில்லை. எல்லாம் நம் கட்டுக்கதைதான். அதுபோல எந்த பாம்பு நண்பா டபராவில் உள்ள பாலை உறிஞ்சி குடிக்கிறது..சினிமாவில் தவிர.!. யாராவது அதை நேரில் பார்த்ததுண்டா? அப்புறம் ஏன் நம் மக்கள் பாம்பு புற்றில் பால் ஊற்று கிறார்கள்?.. உண்மையிலேயே அந்த புற்று பாம்பின் புற்று தானா பாம்பு கட்டியதா என்று யாராவது இதுவரை வினா எழுப்பி இருக்கிறீர்களா? அது கரையான் புற்று தான், நண்பா!


பாம்பைப் பற்றி ஏராளமான சுவையான தகவல்கள் உண்டு.. ஒன்றை எடுத்து விடலாமா? நம்ம ஊரில் தண்ணீர் பாம்பு உண்டே அதே போல, ஐரோப்பாவில் உள்ள ஒரு பாம்பு ஐரோப்பிய புல்பாம்பு.இந்த பாம்பு விடத்தன்மை இல்லாதது இது தண்ணீரில் அனாயசமாக நீந்தும். வருடத்தில் நிறைய நாட்கள், குளிர்கால உறக்கத்தை மேற்கொள்ளுகிறது.அதாவது,, அசைவின்றி அப்படியே கிடக்கும், உணவு உண்ணாது, எதுவும் செய்யாது , மூச்சு விடுவதைத்தவிர..! ஆனால் எதிராளியிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள பல அற்புதமான நடவடிக்கைகளை கையாளுகிறது. சிந்தனை திறன் உள்ள மனிதன் போல.. தேர்ந்த நடிகன் போல என்றும் கூட சொல்லலாம்.நீண்ட நேரம் நீருக்குள்ளேயே இருந்து எதிரியிடமிருந்து தப்பிக்க பார்க்கும். சிலசந்தர்ப்பங்களில், தன உடலை முடிந்தவரை உப்பி, பயமுறுத்தப்பார்க்கும்; சிலசமயம் வேகமாய் சீறும்.;.வேறு பல சமயங்களில், பூண்டு அல்லது பெருங்காய மணமுடைய மலத்தை வெளியேற்றி எதிராளியை விரட்ட முயற்சிக்கும். அதுவும் பலிக்க வில்லை என்றால், கடைசியாக ஒரு போர்க்கால தந்திரத்தை .. அஸ்திரத்தை எடுத்து வீசும்..! என்ன என்று யூகித்து உண்மையாகவே பதில்/தகவல் சொல்லும் நண்பருக்கு நான் ஒரு பரிசு தருகிறேன்.. என்ன யுக்தியாக இருக்கும் சொல்லுங்களேன்..!


மூளையை கசக்கி யோசித்து விட்டீர்களா நண்பா? அந்த புல்வெளி பாம்பு செத்தது போல நடிக்குமாம்..! என்ன நம்புகிறீர்களா? உண்மைதாம்பா.. அப்படியே உடம்பை திருப்பி போட்டு, வாயைப் பிளந்து , நாக்கை வெளியில் நீட்டி ,உண்மையாவே செத்துவிட்டது போல, நம்மை யும் மிஞ்சி நடிக்கும் நண்பா ? என்ன நம்ப முடிகிறதா? ஆச்சரியத்தில் மயக்கம் போடவில்லையே..அது மட்டுமில்லை சுமார்15 நிமிடங்கள் அப்படியே கிடைக்குமாம்.எதிராளி பாம்பு செத்துவிட்டது என நம்பி கம்பி நீட்டிவிடும். எப்படி இருக்கிறது கதையல்ல உண்மை;;சம்பவம்.

.. அய்யோ..பா.. பா.. பாம்பு........

நன்றியுடன்......... ப்ரியமுடன்
Back to top Go down
 
செத்தது போல நடிக்கும் பாம்பு
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY :: Education Special-
Jump to: