BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதமிழ் கவிதைகள் - Page 2 Button10

 

 தமிழ் கவிதைகள்

Go down 
Go to page : Previous  1, 2
AuthorMessage
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: இசைத்தீ   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 8:22 pm


இசைத்தீ



காதலைத் தேக்கிய
இதழ்களை உரசியவுடன்
பற்றிக்கொள்கிறது
உனக்கான நெருப்பு

தீண்டுமென் தீத்துளிகளில்
சிலிர்க்கிறாய் இசை மீட்டி
புதுப்புது ராகலயங்களில்...

வாசிப்பின் உச்சத்தில்
கொழுந்து விட்டெரிகிறது
இசைக்கருவி
ஜூவாலைகளின் தகிப்பில்
முனகி உருகி வழியுமுனது இசை
சங்கீதக்காரனின்மேல்
எரிகிறேன் உன்னோடு இசைத்தீயாய்.


Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: பயணம்   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 8:24 pm


பயணம்

வீட்டிற்குள் வேறிடமில்லாததால்
அவன் ஜன்னலோரம் உறங்கத் தொடங்குகிறான்
அதில் சாலை கருமையாக நீண்டு
சக்கரங்கள் ஓயாமல் உருண்டோடுகின்றன
அவன் மூடிய கண்களில்
பாய்ந்து வரும் வெளிச்சம்
பகலைப் போல் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது
தொடர்ச்சியாக எழும் ஓசை
கனமாக மேலேறிச் செல்கையில்
ஒவ்வொரு முறையும்
அவன் நசுங்கிக்கொண்டிருக்கிறான்
முதுகுக்குப் பின்னால் ஒலிப்பான்கள்
அடிக்குரலில் துரத்திக்கொண்டிருக்கின்றன
அவனைச் சாலையின் ஓரங்களுக்கு
தூக்கத்தில் நீளும் சாலையில்
எங்கும் நிற்காமல் களைப்புடன்
அவன் நடந்துகொண்டேயிருக்கிறான்
வாகனங்கள் மௌனமாக ஓடும்
சைகைகளை மொழியாகக் கொண்ட
உலகிலிருப்பதுபோல்
தினமும் கனவு காண்கிறான்
எப்போதாவது தோன்றும் அமைதியில்
திடுக்கிட்டு விழித்துப் பார்க்கையில்
அவன் உயிரோடிருப்பதை நினைத்து
மீண்டும் புரண்டு படுக்கிறான்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: தொலையும் நிமிடங்கள்!   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 8:25 pm


தொலையும் நிமிடங்கள்!

குளிக்கும்போது
கட்டியிருக்கும்
வேட்டியோ துண்டோ
வெங்கடேசு
பயலின் கையில்
வலையாக மாறி
வாரியெடுக்கும்
குளத்து மீன்
குஞ்சுகளை
தூண்டில் முள்ளில்
குரவை மீனை
லாகவமாய்
சிக்கவைக்கின்ற
கலை அறிந்தவன்
கட்ட சரவணன்
விரால் மீன் பிடித்து
வீட்டுக்குத்
திரும்புகையில்
புலி வேட்டைக்காரன் போல்
பெருமையடிப்பான் சங்கரு
ஊர் துறந்து
நிகரம் புகுந்த பிறகு....
தொட்டிமீன் ரசிப்பிலேயே
தொலைகின்றன நிமிடங்கள்
பட்டணத்து மீன்கள்
பழகியிருக்கின்றன
கண்ணாடித் தொட்டியை
கடலாக்கிக் கொள்வதற்கு!
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: எல்லோரிடத்திலும் அன்பு...   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 8:27 pm


எல்லோரிடத்திலும் அன்பு...

காய்கறியும் அரிசியும்
கடனுக்கு வாங்கி
ஆழ்ந்த பசியோடு
அவசர அவசரமாக
வீடு வந்ததும்
சமையல் செய்ய முடியவில்லை....
அடுப்படியில் உறங்கும் பூனையை
எழுப்ப மனமில்லாததால்
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: காதலின் அலட்சியம்   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 8:30 pm


காதலின் அலட்சியம்

இடறி விழும் மனது
நீ செல்லும் பாதைகளில்
எடுத்தாள மறுத்து
தாண்டி செல்கிறாய்!!!

புதிதாய் கனவுகள்
விரியும் பட்டாம்பூச்சியாய்
ரசிக்க மறுத்து
ஒடித்து போகிறாய், கனவு சிறகுகளை!!

சில்வண்டுகள் ரீங்காரமிடுகிறது
சின்ன சின்ன ஆசைகள்
உன்னுடையதுதான் என்று சொன்னால்
சிரித்து மலுப்பி செல்கிறாய்!!!

ஆரவாரமாயும் மனதை
அமைதி படுத்தியும் வழி
எதுவென்றாவது சொல்
இப்படி அலைபாய்ந்து
கொண்டிருக்க எனக்கு
மட்டும் ஆசையா என்ன????

Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: உன்னோடு...!   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 8:32 pm


உன்னோடு...!

* உன்னோடு காலம் முழுவதும்
நான் வாழ்ந்திட நினைத்தேன்...
ஏனோ கால் நிமிடம் கூட
நீ என் அருகில் இல்லை!

* உன் தோளோடு தோள் சேர்த்து
நடந்திட நினைத்தேன்...
ஏனோ உன் கால்போன சுவடுகூட
கண்ணில் தென்படவில்லை!

* உன்னை கண்ணின் மணியாக
காத்திட நினைத்தேன்...
ஏனோ, இமை உதிர்க்கும்
ரோமமாகக் கூட
நீ என்னை கருதிடவில்லை!

* உன் வாழ்க்கைத்
துணையாகிட வேண்டி
மனதில் தினமும் நினைத்தேன்...
ஏனோ, ஒரு வழித் துணையாகக் கூட
நீ என்னை அழைத்திடவில்லை!

* உன் மதிப்பில்
ஆயிரத்தில் ஒருத்தியாக
நான் உயர்ந்திட நினைத்தேன்...
ஏனோ, அந்த ஆயிரத்தில்
ஒருத்தியாகக் கூட
நீ என்னை சேர்த்திடவில்லை!

* உன் அரியணையில் அரசியாகவே
வீற்றிருக்க நினைத்திருந்தேன்...
ஏனோ, ஒரு சேவகியாகக் கூட
நீ என்னை அனுமதிக்கவில்லை!

* உன் தாகம் தீர்த்திடும் கனிரசமாக
நான் மாறிட நினைத்தேன்...
ஏனோ, உன் பாதம்
கழுவும், நீராகக் கூட
நீ என்னை பாவிக்கவில்லை!

* உன் கழுத்தை
அலங்கரிக்கும் ரோஜாவாக
நான் மலர்ந்திட நினைத்தேன்...
ஏனோ, உன் பாதம் மிதிக்கும்
சருகாகக் கூட
நீ என்னை தீண்டிடவில்லை!

* உன் முன் ஒரு சிகரமாகவே ஓங்கி
நிமிர்ந்திட முயன்றேன்...
ஏனோ, சிறு
குன்றாகக் கூட வளராமல்
உதிர்ந்து போனேன்!

* ஒரு காவியமாகவே உன்னுள்
கலந்திட நினைத்தேன்...
ஏனோ, ஒரு ஓவியமாகக் கூட
உன் நின் நிலைக்காமல்
கலைந்து போனேன்!

* உன் சரித்திர நாயகியாய்
திகழ்ந்திட நான்
வியூகம் வகுத்தேன்...
ஏனோ, ஒரு சொல்லாகக் கூட
ஏட்டில் இடம் பெறாது போனேன்!

* உன் கனவிலும் நானே வந்து
உன்னை தழுவிட நினைத்தேன்...
ஏனோ, உன் நினைவில் கூட
சரியாக நில்லாமல்
நழுவிப் போனேன்!

Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: கவிதை   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 8:34 pm


கவிதை

தினமும்
வகுப்பில் வாசிக்கும்
அழகிய கவிதை
வருகைப் பதிவேட்டிலுள்ள
உந்தன் பெயர்
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: நவரத்தினமே   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 8:35 pm

நவரத்தினமே

கார்குழல் தான் கருநீலமோ
மதிமுகம் தான் வைடூரியமோ
பிரகாசிக்கும் கண்கள் தான் வைரமோ
பல்வரிசைதான் முத்துச் சரமோ
செவ்விதழ்கள்தான் பவளமோ
மணிவாய்தான் மாணிக்கமோ

அணிந்த பட்டுதான் மரகதமோ
அலங்காரம் தான் புஷ்பராகமோ
வடித்தெடுத்த சிலைதான் கோமேதகமோ
உன் மெய்தான் பசும்பொன்னோ.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: காலம் மாறும்!   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 8:38 pm


காலம் மாறும்!

தலைவாரி பூச்சூடி உன்னைப் பள்ளிக்கு
அனுப்பி வைத்தாள் உன் அன்னை.
சிலை போல ஏன் அங்கு நின்றாய் நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?
விலை கொடுத்து வாங்கிய திருமணத்தால்
வந்த கணவன் என்பதாலா அல்லது
விலைகொடுத்துப் பள்ளிக்குப் போகும்
மனைவியாகி விட்டோம் என்பதாலா?

காலம் மாறும் கணவனும் மாறுவான்
கவலைப்படாதே கண்மணியே
நாளும் நல்ல நாளாய் மாறும் உன்
மகளும் விலை கொடுக்காமல் போவாள் பள்ளிக்கு
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: நண்பனே   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 9:16 pm

நண்பனே

நீ.....
புறத்தே
முட்களோடு உள்ள
பூக்களைக் கண்டு
மயங்காமல்,
அகத்தே
அடங்கியிருக்கும்
ஆயிரம் ஆயிரம்
திறமைகளை
அகிலத்திற்குக்
காட்டு
முட்கள் கூட
பூக்களாகி
உன்னைத் தேடி
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: கருவறைக் குழந்தை   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 9:17 pm

கருவறைக் குழந்தை

எத்தனை அமாவாசைகள்
உன் பௌர்ணமி முகம் காண
கருவறைக் குழந்தை
தாயிடம்!
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: காதல் உண்டு!   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 9:19 pm

காதல் உண்டு!

காற்றுக்கும் காதல் உண்டு
இலைகளின் மேல்!
நிலவுக்கும் காதல் உண்டு
வானத்தின் மேல்!
பனித்துளிக்கும் காதல் உண்டு!
புற்கள் மேல்!
வண்டுக்கும் காதல் உண்டு
மலர்களின் மேல்!
நண்பர்களுக்கும் காதல் உண்டு
நட்பின் மேல்!
எனக்கும் காதல் உண்டு
தமிழ்த்தாயே உன் மேல்!
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: கலங்காதே......!   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 9:21 pm

கலங்காதே......!

கஷ்டங்களைக் கண்டு
கலங்காதே!
கோடைகாலம்
குளிர்காலம்
எந்தக் காலமுமே
நிரந்தரமல்ல...
மனிதனின்
வாழ்வில் வரும்
கஷ்ட காலமும் தான்......
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: பார்த்துப் போ வெண்புறாவே...!   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 9:22 pm

பார்த்துப் போ வெண்புறாவே...!

சோர்ந்த
நம் சகோதரர்களுக்கு

என்ன கொண்டு போகிறாய் வெண்புறாவே...?

காத்திருக்கிறோம்.

உன் வரவுக்கு வாழ்த்துக்கள்...

கவனம் ...!

சிபி வேடமிட்ட சில நரிகள்.

சதி வலையோடு

காத்திருப்பதாய் கேள்வி

துணைவர முடியவில்லை பார்த்துப் போ...!
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: உணர்வு   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 9:25 pm

உணர்வு

உன் நினைவில் சமிக்கைகள்
என்னில் ஒவ்வொன்றிலும்
ஞாபகப் படுத்துகின்றது
கருப்பு நிற சட்டையிலும்
கால் தடவும் ஓசையிலும்
வாகன உராய்விலும்
தலை திருப்பி என்
தாகம் தீர்த்து கொள்ள வேண்டும் - என

பொய்த்து போவதால்
ஒன்றுமே இல்லாத காலம் - என்னை
ஓங்கி அரைந்தது போல் என் - நினைவுகள்

பாலுணர்வின் பரிணமிகளை பத்திரப்
படுத்தும் இந்த சமிக்கைகள்
மெல்ல மெல்ல என் உச்சத்தில் - ஏறும்
ஒரு முனையில் நின்று அகல
வெளிப்பக்கம் என் விழி அலைகளோடு - பரப்புமாயின்

எனது சமிக்கையின் படலங்கள்
வெடித்து சிதறி
வெற்றிடமாக்கப்படும்
உணர்வு இழந்து தான் ஒன்றும்
இல்லாது , , ,

வீனையின் மீட்டலிலும்,
புல்லாங் குழலின் மூச்சிலும்,
புல் அறுத்து நின்றன என் புலன்கள்.

உலகத்தை விழித்திரையில் மூடிவிட்டு,
கருவிழி ஓடி ஒழிந்து போனது,
- அந்த நேரம்

வெறுத்து நிற்கும் என் மெய்யின் - வேர்கள்
செவியின் திரவம் என்னை பக்குவப்படுத்தி,
காணத்தின் நாணங்களை மட்டும் கேட்கச் செய்யும்.
சத்தமில்லாது ஆடும் என் நாவு,
- என் அணுக்கள்.

பார்வையின் பிரபஞ்சத்தினை மறந்து
ஒலிப் பிரபஞ்சத்தினை திறந்து
- நிற்கும் என் உணர்வுகள்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: காதலின் ஆதி   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 9:27 pm

காதலின் ஆதி

மறந்து பழகுதல்
நட்பில் உச்சம்.
பாலுணர்ந்து
பழகத் தொடங்குதல்
காதலின்
ஆதி....!
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: நட்பு   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 9:29 pm

நட்பு

"நட்பு என்பது
சூரியன் போல்
எல்லா நாளும்
பூரணமாய் இருக்கும்

நட்பு என்பது
கடல் அலை போல்
என்றும்
ஓயாமல் அலைந்து வரும்

நட்பு என்பது
அக்னி போல்
எல்லா மாசுகளையும்
அழித்து விடும்

நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும்
ஓரே மட்டமாய் இருக்கும்

நட்பு என்பது
நிலம் போல்
எல்லாவற்றையும் பொறுமையாய்
தாங்கிக் கொள்ளும்

நட்பு என்பது
காற்றைப் போல்
எல்லா இடத்திலும்
நிறைந்து இருக்கும்
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: தோழியரே...தோழியரே!!   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 9:42 pm

தோழியரே...தோழியரே!!

காலத்தின் கருவறையில்
கால்தடத்தைப் பதிக்க எண்ணும்
கவிஞைகளே(!?)..
நலமா, நீங்கள் நலமா!?

எந்தன் உணர்விற்குள் உறுத்தி நிற்கும்,
உங்கள் உள்ளம் துடைக்க சில கேள்வி!

எம் பண்பாட்டைக் காத்து நிற்க - இது
படை திரட்டும் ஒரு வேள்வி!

"பெண்மொழி" என்று சொல்லி - நீ
பெண்மையைப் படையல் வைப்பதா?

உன்மொழி படித்த பெண்ணே - உன்
எழுத்தைத் தள்ளி வைப்பதா?

காற்றினில் கலையும் மேகத்தை
காலத்தின் கருவறையில் ஏற்றி வைப்பதா?

இலக்கியத்தில் இடம்பிடிக்க - "பெண்மொழி"
இயல்பை நீ இழக்கலாமோ?

வரலாற்றைப் புரட்டிப் பார்...காந்தியோடு,
"கோட்சே"யும் இருப்பதுண்டு
!
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: ஒற்றுமை   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 9:46 pm

ஒற்றுமை

உன்னால் முடியும்
இமயத்தையும் பிளக்க
நீயோ
இந்தியர்களின் ஒற்றுமையைப்
பிளந்து கொண்டிருக்கிறாய்!
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: ஊர்வலம்   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 9:50 pm

ஊர்வலம்

சவ ஊர்வலம்
புடவையாக மாறுகிறது.

செம்மறியாடுகளின்
சவ ஊர்வலம்
கம்பளியாக மாறுகிறது.

ஆடுகளின்
சவ ஊர்வலம்
செருப்பாக மாறுகிறது.

மனிதனின்
சவ ஊர்வலம்
என்னவாக மாறப்போகிறது?
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: சுகம்   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 9:52 pm

சுகம்

உன் விழிகளுக்கு
விருப்பமானது எது?
"நான் விரும்புவது!"
நட்சத்திரங்களே!"
"ஏன்?"
"காதலன் வரும்வரை
எண்ணிக் கொண்டிருப்பதற்கு
அவைதானே
ஏராளமாக இருக்கின்றன!"
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: உழைப்பு   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 9:56 pm

உழைப்பு

மேகத்தின் வியர்வை
கடல் சிப்பிக்குள்
விழுந்து முத்தாகிறது.

உழைப்பாளியின் வியர்வை
காலச் சிப்பிக்குள்
விழுந்து வாழ்வாகிறது.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: எந்த நம்பிக்கையில்   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitimeWed Jun 23, 2010 9:59 pm

எந்த நம்பிக்கையில்

பின்னுகின்றன சிலந்திகள்

இரை
சேகரிக்கின்றன எறும்புகள்

வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் ஜனங்கள்

பெய்யும் மழைக்கேற்ப
விளையும் நிலம்

கவிஞன் சாம்பல் கரைக்க
கங்கையும் காணாது குமரியும் போதாது
Back to top Go down
Sponsored content





தமிழ் கவிதைகள் - Page 2 Empty
PostSubject: Re: தமிழ் கவிதைகள்   தமிழ் கவிதைகள் - Page 2 Icon_minitime

Back to top Go down
 
தமிழ் கவிதைகள்
Back to top 
Page 2 of 2Go to page : Previous  1, 2
 Similar topics
-
» தமிழ் குறுக்கெழுத்து போட்டி - உங்கள் தமிழ் திறமைக்கு சவால். உருவாக்கம் .திரு.கார்த்திகேயன்
» மகிழ்ச்சி கவிதைகள் 1
» ஹைக்கூ(க்) கவிதைகள்
» காதல் கவிதைகள்
» இரு ஹைக்கூ கவிதைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: