BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதகவல் பெட்டி 01 Button10

 

 தகவல் பெட்டி 01

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

தகவல் பெட்டி 01 Empty
PostSubject: தகவல் பெட்டி 01   தகவல் பெட்டி 01 Icon_minitimeSat Jun 26, 2010 4:04 pm

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ‘தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி’ மிகவும் பிரபலம். யூதரான அவர் பிறந்த நாடு ஜெர்மனியாக இருந்தாலும் யூதர்களின் எதிரியான ஹிட்லருக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவரது ஆராய்ச்சிகள் அனைத்துமே அமெரிக்காவில் நடந்தன.

எகிப்தில் வெள்ளைத்தங்கம் என்று அழைக்கப்படுவது பருத்தி.

புத்தரின் தந்தை பெயர் சுத்தோதனர்.

இங்கிலாந்து நாட்டை ஆண்டவர்களில் ஜேன் கிரே (Jane grey) மட்டும்தான் மிக குறுகிய காலம் இருந்தவர். அவர் ராணியாக இருந்தது வெறும் ஒன்பது நாட்களுக்கு மட்டுமே.

ரோல்ட் அமுன்ட்ஸென் (Roald Amundsen) என்பவர்தான் தென்துருவத்தை முதன்முதலில் அடைந்தவர்.

உலக வாணிப நிறுவனத்தின் (WTO) தலைமையகம் அமைந்திருப்பது ஜெனிவாவில்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவின் முதல் வைசிராயாக இருந்தவர் கானிங் பிரபு (Lord canning).

ஒரு அணுகுண்டு தயாரிக்க ஆகும் செலவு தெரியுமா? ஒரு கோடி ரூபாய். ஆனால், அவற்றால் ஏற்படும் இழப்புகள் அதைவிட வெகு அதிகம்.

இந்திய சுதந்திரத்துக்கு புரட்சி பாதையில் போராடியவர் சுபாஷ் சந்திர போஸ் என்பது உங்களுக்குத் தெரியும். அதற்காக அவர் தொடங்கியதுதான் இந்தியன் நேஷனல் ஆர்மி. சுருக்கமாக மி.ழி.கி.

ஸ்பெயின் நாட்டின் பிரபலமான நடனம் ஃப்ளமிங்கோ (Flamingo).

உலகின் மிக உயரமான பறவையான நெருப்புகோழியின் மற்றொரு பெயர் என்ன தெரியுமா? ஒட்டகப் பறவை.

சைடாலஜி (cytology) என்பது செல்களை ஆராயும் விஞ்ஞானப் படிப்பின் பெயராகும்.

முதன்முதலில் கிரகங்களின் சுழற்சியை ஆராய்ந்து கண்டறிந்தவர் கெப்ளர் (Kepler). பாலைவனத்தில் செல்லும்போது மிகக் குறைந்த ஒலியைக்கூட நம்மால் கேட்கமுடியும்.

விசில் அடிப்பது போன்ற ஒலியை உருவாக்கும் ஒரே உயிரினம் டால்பின்.

அகராதியை முதலில் தயாரித்தவர் சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson).

வகுப்பறையில் உங்கள் ஆசிரியரின் கையில் அதிக நேரம் இருக்கும் சாக்பீஸின் வேதிப் பெயர் கால்ஷியம் கார்பனேட் (Calcium carbonate)

இந்தியாவின் தலைநகரான டெல்லியின் பழைய பெயர்- இந்திரப்பிரஸ்தம்.

இறக்கைகளே இல்லாத பறவை ஆஸ்திரேலியாவில் உள்ள கிவி.

யானைகளின் தந்தங்களைப் பார்த்திருப்பீர்கள். அதே போல் தந்தங்கள் உள்ள மற்றொரு உயிரினம் கடலில் வாழும் வால்ரஸ் மட்டுமே. சீனாவின் புனித விலங்காக கருதப்படுவது- பன்றி.

தேன்கூட்டை கலைத்தால் தேனீக்கள் கொட்டும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அவற்றால் ஒரு முறை மட்டுமே கொட்ட முடியும். ஏனெனில், அவை கொட்ட பயன்படுத்தும் கொடுக்குகள் கொட்டியதும் எதிரியின் உடலிலேயே தங்கிவிடும்.

உலகில் இதுவரை அமைக்கப்பட்ட சாம்ராஜ்யங்களில் மிகப்பெரியது மற்றும் மிகவும் பலம்பொருந்தியது செங்கிஸ்கானுடையது. கிழக்கில் சீன கடலில் ஆரம்பித்து மேற்கே கருங்கடல் வரை விரிந்திருந்தது அந்த சாம்ராஜ்யம்.

1918\ல் பரவிய ஃப்ளு காய்ச்சல் மிக கொடூரமானது. இதில் ஆறு கண்டங்களிலும் உலக மக்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பாதிக்கப்பட்டனர். பிரபல கிரிக்கெட் ஆட்டகாரான கபில்தேவின் சுயசரிதையின் பெயர் By Gods-decree. இதன் பொருள் ‘கடவுளின் தீர்ப்புப்படி’.

‘நம்பர் தியரி’யின் தந்தை என்று அழைக்கப்படுவர் பியரி-டி-பெர்மட் (pierre-de-Fermet) ஆனால், இவர் ஒரு வழக்கறிஞர். கணிதம் இவரது பொழுதுபோக்கு மட்டுமே!

உலகில் அதிகமாக திரைப்படங்கள் தயாரிக்கும் நாடு இந்தியா.

********************************************************************
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

தகவல் பெட்டி 01 Empty
PostSubject: தகவல் பெட்டி-02   தகவல் பெட்டி 01 Icon_minitimeSat Jun 26, 2010 4:05 pm

# யூதர்களின் புனித நூலாகக் கருதப்படுவது ‘தோரா’ எனப்படும் நூல்.
# சுனில் காவஸ்கரைத் தெரியாத சுட்டிகளே கிடையாது. அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் தெரியுமா? டைம் டு கால் இட் எ டே (Time to call it a day).
# ஐஸ்கட்டி சாப்பிடும்போது லேசாக கண்வலி வருவதை உணர்ந்திருக்கிறீர்களா?! பல் நரம்புக்கும் கண் நரம்புக்கும் தொடர்பு இருப்பதால்தான் இந்த வலி.
# ஒரு குயர் காகிதம் என்பது இருபத்துநான்கு தாள்கள் அடங்கியது. உலகிலேயே அதிக அளவு காகிதம் உற்பத்தி செய்யும் நாடு கனடா.
# நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் தாகூர்.
# திரவங்களின் அடர்த்தியைக் கண்டுபிடிக்கும் கருவியின் பெயர் ஹைட்ரோமீட்டர்.
# பைபிளை முதன்முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் சீகன் பால்க் ஐயர்
# மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் கிரிகர் மெண்டல் (Gregor Mendel) தாவரவியல்
துறையில் இவரது ‘மரபியல் வாய்ப்பாடு’ மிகவும் பிரபலம்.
# செம்புடன் தகரத்தைக் கலக்கும்போது வெண்கலம் உருவாகிறது.
# விலாங்கு மீனால் மின் அதிர்ச்சியை ஏற்படுத்த முடியும்.
# மிளகு விளைச்சலுக்குப் பழங்காலத்திலிருந்தே புகழ்பெற்ற இடம் கேரளா. பண்டைய காலத்தில் ரோமானியர்களுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தபோது பண்டமாற்று முறையில் தங்கத்தைக் கொடுத்து மிளகு வாங்கிச் சென்றுள்ளனர்.
# செடி | கொடிகள், சூரிய ஒளியைப் பெறுவதற்காகத்தான் மேல் நோக்கி வளர்கின்றன. அவை உணவு தயாரிக்க ஒளி தேவையல்லவா!
# செவ்வந்தியர்கள் என அழைக்கப்படுபவர்கள் அமெரிக்காவின் ஆதி மனிதர்கள். கொலம்பஸ் அமெரிக்காவை ‘இந்தியா’ என்று நினைத்ததால் அவர்களை ‘செவ்விந்தியர்’ என்று அழைத்தார்.
# நிறங்களால் நம் மனதில் மாற்றங்களை உண்டுபண்ண முடியும். சிவப்பு, கோபத்தை உருவாக்கும். பளபளப்பான மஞ்சள் சோம்பலை உண்டு பண்ணும். ஆரஞ்சு நிறத்தால் மகிழ்ச்சியும் மன அமைதியும் கிடைக்கும். முேட்டையில் வெள்ளைக் கரு, மஞ்சள் கரு இரண்டும் இருப்பது உங்களுக்குத் தெரியும். அதில் வெள்ளைக் கரு ஐம்பத்தெட்டு சதவிகிதமும், மஞ்சள் கரு நாற்பத்திரண்டு சதவிகிதமும் இருக்கும்.
# தோட்டக்கலையின் இன்னொரு பெயர் ‘ஆதாம் தொழில்’. ஆதி மனிதனான ஆதாம் இறைவனின் தோட்டமான ஈடனைப் பராமரித்து வந்ததால் இந்தப் பெயர்!
# காமராஜரின் அரசியல் குருவாக கருதப்படுபவர் சத்தியமூர்த்தி.
# பூஞ்சைகள் பற்றி ஆராயும் தாவரவியல் பிரிவின் பெயர் மைக்காலஜி.
# கடல் ஆழத்தைக் கண்டுபிடிக்க உதவும் சாதனம் – சோனார்.
# ‘சி.டி.ஸ்கேன்’ என்பதன் விரிவாக்கம் கம்ப்யூட்டரைஸ்டு டோமோக்ராஃபி ஸ்கேன் (Computerised Tomography Scan)
# ‘கோல்ஃப்’ விளையாட்டு தோன்றியநாடு ஸ்காட்லாந்து.
Back to top Go down
 
தகவல் பெட்டி 01
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தகவல் பெட்டி-03
» இன்று ஒரு தகவல்
» திடுக்கிடும் தகவல்.......
» இன்று ஒரு தகவல்
» இன்று ஒரு தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY :: Education Special-
Jump to: