BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநானும் காதலும் - 1 Button10

 

 நானும் காதலும் - 1

Go down 
AuthorMessage
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

நானும் காதலும் - 1 Empty
PostSubject: நானும் காதலும் - 1   நானும் காதலும் - 1 Icon_minitimeMon Jun 28, 2010 10:14 pm

நானும் காதலும் - 1



மெந்நீலக் கடற்பரப்பின் மீதுலாவும்
தென்றலின் வழியே
நீயனுப்பும் அன்பின் செய்திகளில்
நனைந்துவரும் வண்ணத்துப்பூச்சி
என் வாசல் கடக்கும் தருணம்
அதன் பின்னோடிச் சென்று
செட்டை வருடுகிறேன்
விரல்களில் ஒட்டிக்கொள்கிறது
உன் நேசம்!

அதி குளிர் காலத்தின்
பனிபொழிந்த காலையொத்து
வெண்மை வெடித்துக் கிடக்கிற
இப் பாலைப் பருத்திக்காட்டின்
ஒரு மூலையில் நின்றபடி
உன் பெயரை உரக்கக் கூவுகிறேன்
மெல்லத்தவழும் மேற்காற்றில்
நிறைந்து மிதக்கின்றன
நம் காதலின் பிசிறுகள்!



நானும் காதலும் - 1 Icon_study நானும் காதலும் - 1 Icon_study நானும் காதலும் - 1 Icon_study நானும் காதலும் - 1 Icon_study நானும் காதலும் - 1 Icon_study நானும் காதலும் - 1 Icon_study நானும் காதலும் - 1 Icon_study நானும் காதலும் - 1 Icon_study நானும் காதலும் - 1 Icon_study நானும் காதலும் - 1 Icon_study
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

நானும் காதலும் - 1 Empty
PostSubject: நானும் காதலும் - 2   நானும் காதலும் - 1 Icon_minitimeMon Jun 28, 2010 10:15 pm

நானும் காதலும் - 2






குளிர் காலையின்
மஞ்சள் வானத்தினூடாக எழும்பி நிற்கும்
உன் தேசம் கடந்துவந்த சூரியன்,
மலைச்சரிவின் எங்கும் பரவவிடுகிறது
இதம் நிறைந்த உன் நேசத்தின் வெம்மைகளை..
இரவெல்லாம் பொழிந்த
என் பிரியம் தாங்கிய பனித்துளிகள்
உருகிச் சொட்டுகின்றன இப்பொழுதில்!

பூக்களுடன் செழித்திருக்கும்
இப்பெருவெளியின் புல்வெளியினூடே
முட்டிகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்தபடி
உன்னை நினைத்திருக்கிறேன்
எதிரே தெரியும் மலைப்பாதையில்
தரையிறங்கும் ஆட்டுமந்தையாய்
மென்மையாய் வழிகிறது உன் பாடல்!
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

நானும் காதலும் - 1 Empty
PostSubject: நானும் காதலும் - 3   நானும் காதலும் - 1 Icon_minitimeMon Jun 28, 2010 10:17 pm

கவிதை


நானும் காதலும் - 3


நானும் காதலும் - 1 Love_moon_300
பசுமை போர்த்திய
பள்ளத்தாக்குப் பெருவெளியில்
ஆசுவாசமாய் அமர்ந்து கதைக்கும்
இரு மேக நிழல்களினூடே
பேசுபொருளாயிருக்கிறது
நம் காதல்

இருள் கவிழ்ந்த பின்னிரவில்
நிசப்தத்தைக் கிழித்தபடி
திரைச்சீலை விலக்கியவாறு அறைக்குள் புகும்
சுவர்க்கோழிகளின் சீண்டல் கொக்கரிப்பில்
மீண்டுமாய் பொங்கி வழியத் துவங்குகிறது
விழித்துக்கொண்ட நம் காதல்
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

நானும் காதலும் - 1 Empty
PostSubject: நானும் காதலும் - 4   நானும் காதலும் - 1 Icon_minitimeMon Jun 28, 2010 10:18 pm

கவிதை


நானும் காதலும் - 4



நானும் காதலும் - 1 Rose_254
என் பிம்பம்
என்றுமில்லாத அளவில்
அதிக புன்னகையேந்தியிருக்கிறது

கண்ணாடிக் குடுவையினின்று
எட்டிப்பார்க்கும் ஊதாநிறப் பூக்கள்
கடைசியிதழ் வரையிலும்
மலர்ந்திருக்கின்றன

சுவரில் படர்ந்த அழகுக் கொடியில்
தலையாட்டிக்கொண்டிருக்கிறது
கிளையொன்றின் பிரியம்

அலமாரியின் புல்லாங்குழலின்
வழிந்தபடியிருக்கிறது நேசப் பாடலொன்று

திரைச்சீலையின் மெல்லிய அசைவுகளோடு
நீயும் நிலவும் உட்பிரவேசிக்கும் இப்பொழுதில்
உனையெழுதிய காகிதங்களின் படபடப்பில்
உயிர் பெறுகிறதென் காலம்!
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

நானும் காதலும் - 1 Empty
PostSubject: நானும் காதலும் – 5   நானும் காதலும் - 1 Icon_minitimeMon Jun 28, 2010 10:19 pm

கவிதை


நானும் காதலும் – 5



நானும் காதலும் - 1 Lovers_407
நீ வரைந்த கோலத்தின்
வண்ண மயில்கள் அகவி விடியுமென் காலையில்
பனித்த கூந்தலுடன் தேனீர் கொணர்வாய்
முந்தைய இரவின் மீந்த காதலை இழுத்தணைக்க
மாவிளந்தளிரின் பெயர் சூட்டப்பெறாத
வண்ணத்தினாலான உன் வெட்கம்
காதோரச் சுருள்முடியில் நனைந்து நிற்கும்
பொய்க்கோபம் சிணுங்கி
மார்பில் கைவைத்துத் தள்ளுவதாய் பாவித்தும்
சுற்றிய கரங்களைத் தாண்டாது நிற்குமுனை
மீண்டுமாய்க் குளிக்க வைக்கிற பகற்பொழுதுகள்
சொல்லப்போனால் வெட்கமற்றவையே

முன்னறையில் காய்வெட்டும் அம்மாவின்
தொலைக்காட்சிக் கவனம் அறிந்தவனாகவே
அடுக்களை நுழைவேன் திருட்டுப் பூனையென
வெகு புதிதாய்க் கற்றிருக்கும்
சமையல் கவனத்தில் ஆழ்ந்தவளை
பின்னாலணைக்கப் பதறும் அடுப்பின் நீலச்சுவாலை
செல்லமாய்ச் சலித்து சமையலின் வேகங்குறைத்து
திட்டுவதாய்க் கொஞ்சித் தீர்ப்பாய்; பின்
காய்வெட்டி முடிந்து இங்கிதமாய்
கதைபேசச் சென்றுவிட்ட அம்மாவினை
யாரழைத்து வருவதென குழம்பிச் சிரிப்போம் நாம்
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

நானும் காதலும் - 1 Empty
PostSubject: ஏகாந்தம் திருடிப்போனவள்   நானும் காதலும் - 1 Icon_minitimeMon Jun 28, 2010 10:21 pm

கவிதை


ஏகாந்தம் திருடிப்போனவள்



நானும் காதலும் - 1 Dream_400
தனிமையின் விளிம்பில்
ஏகாந்தம் வாசித்திருந்த சமயம்
பேச்சுத்துணை வேண்டி அவள் வந்தாள்
விரல்நுனிகளுரசி
வண்ணத்துப்பூச்சிகள் பறக்கவிட்டவளும்
கூந்தல் அவிழ்த்து காலத்தைப் புரளவிட்டவளும்
தானேயென்றவளை
ஏனோ எனக்கு சந்தேகிக்கத் தோன்றவில்லை
பலவான தேவதைக்கதைகள் பேசிக்களித்து
இசைப்பாடலுடன் கண்ணயர்ந்தபின்
நடந்தவையெல்லாம் கனவாகவே இருந்த பட்சத்தில்
கண்விழித்துப் பார்க்கிறேன்
எதிர்த்துருவத்தில் யாரோ ஒருவனுடன்
அளவளாகிக் கொண்டிருக்கிறாள்
கையிருக்கும் கனவின் மிச்சங்களை
நிழலைச் சுமந்து சூழும் உருவங்களில்
பொருத்தவியலா இந்நாளில்
என்னில் ஏகாந்தமும் இல்லை
கவிதைகளும் இல்லை..!
Back to top Go down
Sponsored content





நானும் காதலும் - 1 Empty
PostSubject: Re: நானும் காதலும் - 1   நானும் காதலும் - 1 Icon_minitime

Back to top Go down
 
நானும் காதலும் - 1
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அனாதையாய் நானும்
» நானும் கடவுளும்
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» மரணமும் காதலும்
» காதலும் கற்று மற(?!)-1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: