BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசெம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Button10

 

 செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்?

Go down 
3 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Empty
PostSubject: செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்?   செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Icon_minitimeMon Jul 05, 2010 5:23 am

செம்மொழி மாநாட்டுல வேற நல்ல விஷயம் எதுவும் நடந்திருக்கோ இல்லையோ, வெளிநாட்டு தமிழறிஞர்கள் பேசுவதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது (டீவியிலதான்). அதில் அஸ்கோ பர்ப்போலா என்னும் பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் கூறியுள்ள கருத்துக்கள் சிந்துச் சமவெளி நாகரிகத்தைப் பற்றியது. சிந்துச் சமவெளி மக்களின் எழுத்துக்கள் புரிந்து கொள்ளமுடியாத ஒன்றாகவே இதுவரை இருந்து வந்தது. அதனால், அவர்களது மொழி, வாழ்க்கை, வழிபாட்டு முறைகள் சரியாக விளக்கப்படாமல் இருந்தது. ஒரு சாரார், சிந்துச் சமவெளியில் வாழ்ந்தவர்கள் திராவிடர்களே என்று சில ஆதாரங்களைக் காட்டினர். வேறு சிலர் சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கும், திராவிடத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் ஆர்யர், திராவிடர் என்று இரு இனங்கள் கிடையாது, எல்லாமே ஒரே இனம்தான் என்று வாதாடுகிறார்கள். அவர்கள் கருத்துப்படி, ஆர்யர்கள் என்று யாரும் வெளியில் இருந்து வரவில்லை என்பதே (இப்போது புரிந்திருக்குமே இதன் விசமத்தனம்?).

இந்நிலையில் பின்லாந்துப் பேராசிரியர் பர்ப்போலா, செம்மொழி மாநாட்டில் சிந்துச் சமவெளியில் இருந்தது தமிழர்களே என்றும், அவர்கள் பேசியே மொழி தமிழே என்றும் ஆதாரங்களுடன் விளக்குகிறார். இவை உண்மையிலேயே சரியான ஆதாரங்களாக இருக்கும் பட்சத்தில் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டியிருக்கும். பேராசிரியர் பர்ப்போலா என்ன கூறியிருக்கின்றார் என்று முழுமையாகத் தெரிந்து கொள்ள்வதற்கு முன்பே எதிர் வாதம் தொடங்கிவிட்டது. ரிடிஃப் (Rediff) இணையதளத்தில் அதற்குள்ளாகவே டாக்டர் எஸ். கல்யாணராமன் என்பவரிடம் இருந்து பேட்டி எடுத்து போட்டிருக்கிறார்கள். அவரும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு விசம் கக்கி இருக்கிறார். ரிடிஃப், இதற்கு மாற்றுக் கருத்துள்ளவர்கள் யாரையும் பேட்டி எடுத்து வெளியிடுவார்களா என்று தெரியவில்லை. (ரிடிஃபை தொடர்ந்து படித்தவர்கள், அவர்களின் தென்னிந்தியர்களுக்கு எதிரான விசமப் பிரசாரத்தை நன்கு அறிந்திருப்பார்கள்).

இவர்களை விட்டுத்தள்ளுவோம், என்றைக்குமே திருந்தப் போவதில்லை!. என்னுடைய ஆதங்கமெல்லாம், பேராசிரியர் பர்ப்போலாவின் விளக்கங்கள், செம்மொழி மாநாட்டின் ஆரவாரங்களிலும் பாராட்டுரைகளிலும் மறக்கப்பட்டு விடக்கூடாது என்பதே! இதைவைத்துக் கொண்டு மேற்கொண்டு என்னென்ன செய்யலாம் என்று எனக்குத் தோன்றியவற்றை இங்கே எழுதியிருக்கிறேன். இவற்றை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல முடிந்தவர்கள் தயவு செய்து உடனே செய்யுங்கள்.

1. உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையம் ஒன்று நிறுவப்படவேண்டும். அங்கே தொல்லியல் ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி, மற்றும் மொழியியல் ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவாக சோதனைச் சாலைகளும் ஆராய்ச்சியாளர்களும் வேண்டும். மரபணு பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கும் வதிகள் ஏற்படுத்தவேண்டும்.

2. தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள தொல்பொருள்கள் அனைத்தும் மறு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். கார்பன் டேட்டிங் எனப்படும் காலத்தைக் கணக்கிடும் நவீன தொழிநுட்பம் பயன்படுத்தி எந்தக் காலத்தை சேர்ந்தவை என்று அனைத்து வரலாற்றுச் சம்பவங்களும் தெளிவு காணவேண்டும். கார்பன் டேட்டிங் முறையில் கணக்கிடப்படும் கால அளவு துல்லியமாது. வள்ளுவர் எந்தக் காலத்தில் வாழ்ந்தார் என்பதற்கே இன்னும் நம்மிடம் குழப்பங்கள் நிலவுகின்றன.

3. கன்யாகுமரிக்குத் தெற்கே கடலின் அடியில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்யப் படவேண்டும். லெமூரியாக் கண்டம் என்று ஒன்று இருந்ததாகவும் அங்கே தமிழர்கள் வாழ்ந்து வந்தாகவும் பல்வேறு கருத்துக்கள் உலவுகின்றன. சங்கத்தமிழ் இலக்கியங்களில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. முதல் மூன்று தமிழ்ச்சங்கள் அங்குதான் நடந்தன என்றும் குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் இதுகுறைத்து முறையான அறிவியல் ரீதியிலான ஆராய்ச்சிகள் எதுவும் நடந்தாகத்தெரியவில்லை.

4. தமிழ்நாட்டின் மற்ற கடற்கரையோரங்களிலும் கடலிலும் அகழ்வாராய்ச்சி தேவை. பூம்புகார், கடல்கோளினால் அழிந்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கடல்கோள் என்றால் சுனாமியாக இருக்கலாம் என்று நாம் சமீபத்தில்தான் புரிந்து கொண்டோம் (லெமூரியாக் கண்டமும் அதுபோன்ற ஒரு நிகழ்வினால் தான் அழிந்திருக்கவேண்டும்). அதனால், இதுபோன்ற வேறுநிகழ்வுகளினால் பண்டைய தமிழக நகரங்கள் எதுவும் மூழ்கியுள்ளனவா என்று ஆராய வேண்டும்.

5. சிந்துச் சமவெளி நாகரிக, மக்கள், மொழி, வழிபாட்டுமுறைகள் குறித்து மறு ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்.

6. ஆப்பிரிக்கப் பழங்குடி மற்றும் ஆஸ்திரேலியப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுடைய மரபணு, தமிழகத்தைச் சேர்ந்தவருடைய மரபணுவுடன் அப்படியே ஒத்துப் போவதாக சிலவருடங்கள் முன்பு ஆய்வுகள் வெளியாகின (இது குறித்து ஆனந்தவிகடனில் கூட கட்டுரை வெளியாகி இருந்தது). இது தமிழர்கள் மிகப் பழமையான இனத்தை சேர்ந்தவர்கள் என்பதையே சொல்கிறது. இதுகுறித்து மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

இந்த ஆராய்ச்சிகள் நவீனத் தொழிநுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதும், நடுநிலையோடு இருப்பதும் மிக அவசியம். ஆராய்ச்சி முடிவுகள் எப்படி இருந்தாலும் அவை சர்வதேச அறிவியல் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட வேண்டும். ஒருவேளை இதுபோன்ற முயற்சிகள் ஏற்கனவே நடந்துகொண்டிருந்தால், தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

தமிழர்களாகிய நாம் உணர்ச்சிவயப்படுதலை கொஞ்சம் மட்டுப்படுத்திக்கொண்டு அறிவுப்பூர்வமாய் சிந்தித்து இயங்குவோம். அறிவியல் உண்மைகளை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வோம். வெறும் பேச்சுக்களைக் குறைத்து செயலில் இறங்குவோம். செம்மொழி மாநாடு அதற்காவது ஒரு சிறு பொறியாக அமையட்டும்!
Back to top Go down
GoodPayan

GoodPayan


Posts : 167
Points : 235
Join date : 2010-06-30
Age : 39
Location : Chennai

செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Empty
PostSubject: Re: செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்?   செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Icon_minitimeMon Jul 05, 2010 6:10 am

ஆழம் மிகுந்த பலத் தகவல்களை அனாயசமாக தரும் ஓவியாவிற்கு வாழ்த்துக்கள்.

ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க அரசியல்வாதிகளுக்கு அக்கறை வேண்டும். அக்கறை ஏற்படுமளவிற்கு அறிஞர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Empty
PostSubject: Re: செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்?   செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Icon_minitimeMon Jul 05, 2010 7:25 am

செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? 02210

செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Gசெம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Oசெம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Oசெம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Dசெம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? 0செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Pசெம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Aசெம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Iசெம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Yசெம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Aசெம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Nசெம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? 0
Back to top Go down
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Empty
PostSubject: Re: செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்?   செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Icon_minitimeMon Jul 05, 2010 8:19 am

அகம் நானூறு கண்டான் தமிழன்; புறம் நானூறு கண்டான்; காண்பான் மதுரையில் நானூறு கழிவரை; நாய் விற்ற காசு குரைக்காது; நானூறு கழிவரை கட்டி சுற்றிய காசு மட்டும் நாற்றமா அடிக்கும்" என்ற ஒரு நக்கலான கவிதை ஒன்றை, எம்.ஜி.ஆர் மதுரையில் நடத்திய உலக தமிழ் மாநாட்டின் சமயத்தில் படித்தது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. யார் அதை எழுதினார்கள் என்பது தான் நினைவில்லை...அதில் செலவிடப்பட்டதை விட கோவை செம்மொழி மகாநாட்டில் செலவிடப்படும் தொகை பல மடங்குகள் அதிகமானது. இன்னும் பள்ளிக்கூடங்களும் மருத்துவ மனைகளும் இல்லாத எவ்வளவோ ஊர்கள் தமிழகத்தில் இருக்கின்றன என்றும் வாழ வசதியில்லாமல் எவ்வளவோ மக்கள் இன்றும் வாடுகின்றனர் என்றும் பார்க்கும் போது இந்த மாபெரும் செலவை நாம் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.


ஆனால் நவீன அரசியல் என்பது 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இன்று வரை பிரம்மாண்டமான காட்சி அரங்கமைப்புகளை நிகழ்த்துவதில் தான் கண்ணும் கருத்துமாக செயல்படுகிறது. இதையே ஹெபர்மாஸ் எவ்வாறு மக்களுக்காக பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் எழுந்த ஜனநாயக பொதுமன்றம், இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை மக்களுக்கு முன்னே பிரதிநிதித்துவம் செய்து கொள்ளும் ஒரு பிரபுத்துவ அரங்கமாக மாறிவிட்டது என்று விவரிக்கிறார்.

- ப்ரியமுடன்
Back to top Go down
Sponsored content





செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Empty
PostSubject: Re: செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்?   செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்? Icon_minitime

Back to top Go down
 
செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அவன் கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன?
» செம்மொழி மாநாடு பாடல், வரிகளுடன்..
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
» நடந்தது என்ன....?
» உலக செம்மொழி மாநாடு பாடல்[மு.கருணாநிதி]-ஏ.ஆர்.ரகுமான்=Tamil Semmozhi Maanadu Song[M.Karunanithi]-AR Rahman

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: