BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inEnglish Class 27 Button10

 

 English Class 27

Go down 
AuthorMessage
Tom Cruise




Posts : 149
Points : 448
Join date : 2010-06-30
Age : 32
Location : pondicherry

English Class 27 Empty
PostSubject: English Class 27   English Class 27 Icon_minitimeTue Jul 27, 2010 5:07 am

ஆங்கில பாடப் பயிற்சி 27 (English Pronouns)
ஆங்கிலத்தில் பெயர்சொற்கள் என்றால் என்ன என்பதை நாம் கடந்தப் பாடங்களில் கற்றுள்ளோம். இன்று சுட்டுபெயர் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

சுட்டுப்பெயர் என்பது ஒரு பெயரை அல்லது பெயர் சொல்லை குறிப்பிடாமல், அவற்றிற்குப் பதிலாக சுட்டிக்காட்டுவதற்கு பயன்படும் சொற்களே "சுட்டுப்பெயர்" என்றழைக்கப்படுகின்றன.

உதாரணம்:

Sarmilan will come to the class.
சர்மிலன் வருவான் வகுப்பிற்கு

He will come to the class
அவன் வருவான் வகுப்பிற்கு.

முதல் வாக்கியத்தில் “சர்மிலன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர் சொல்லுக்குப் பதிலாக, இரண்டாம் வாக்கியத்தில் “அவன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது “சர்மிலன்” எனும் பெயரை குறிப்பிடாமல் “அவன்” என்று சுட்டிக்காட்டப்படுகின்றது; அதனாலேயே “அவன்” எனும் சொல்லை சுட்டுப்பெயர் என்றழைக்கப் படுகின்றது.

இச் சுட்டுப்பெயர்களை ஆங்கில மொழியில் பல்வேறு பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். அவைகளாவன:

Subject Pronouns
Object Pronouns
Reflexive Pronouns
Possessive Pronouns
Demonstrative Pronouns
Relative Pronouns
Interrogative Pronouns
Indefinite Pronouns

இப்பிரிவுகள் ஒவ்வொன்றினதும் சுட்டுப்பெயர்கள் அதே நிறங்களில் கீழே வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் எடுத்துக்காட்டாக அச்சுட்டுப்பெயர்கள் பயன்படும் வாக்கிய அமைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

Subject Pronouns – எழுவாய் சுட்டுப்பெயர்கள்
------------------------------------------------------------------
ஒரு வாக்கியத்தின் எழுவாயாகப் பயன்படும் சுட்டுப்பெயர்கள்.

I - நான்
You – நீ (ஒருமை)
He - அவன்
She - அவள்
It - அது
We – நாம், நாங்கள்
You - நீங்கள் (பன்மை)
They - அவர்கள், அவைகள்

உதாரணம்:

Kennedy spoke about genocide war in Sri Lanka.
கென்னடி பேசினார் இலங்கையின் இனவழிப்பு போரைப் பற்றி.

He spoke about genocide war in Sri Lanka.
அவர் பேசினார் இலங்கையின் இனவழிப்பு போரைப் பற்றி.

(“Kennedy” எனும் பெயர்சொல்லுக்குப் பதிலாக “He” எனும் சுட்டுப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.)

Object Pronouns – செயப்படுபொருள் சுட்டுப்பெயர்கள்
------------------------------------------------------------------
ஒரு வாக்கியத்தின் செயப்படுபொருளாகப் பயன்படும் சுட்டுப்பெயர்கள்.
me – என்னை
you - உன்னை (பன்மை)
him - அவனை
her – அவளை
it - அதை
us – எங்களை, நம்மை
you - உங்களை (பன்மை)
them - அவர்களை, அவைகளை

உதாரணம்:

I love her
நான் காதலிக்கிறேன் அவளை

Reflexive Pronouns – அனிச்சைச் செயல் சுட்டுப்பெயர்கள்
------------------------------------------------------------------
ஒரு வாக்கியத்தின் எழுவாய் சொல்லை மீண்டும் அனிச்சையாக குறிப்பிடுவதற்கு பயன்படும் சுட்டுப்பெயர்கள்.

myself - நானாகவே
yourself - நீயாகவே
himself - அவனாகவே
herself - அவளாகவே
itself - அதுவாகவே
ourselves – நாங்களாகவே, நாமாகவே
yourselves - நீங்களாகவே
themselves – அவர்களாகவே, அவைகளாகவே

உதாரணம்:

I cut my hair myself.
நான் வெட்டினேன் எனது தலைமயிரை நானாகவே
(நான் எனது தலைமயிரை நானே/நானாகவே வெட்டிக்கொண்டேன்.)

Possessive Pronouns – ஆறாம் வேற்றுமை (உரிமையைக் குறிக்கும்)
------------------------------------------------------------------
இவை உரிமையைக் குறிக்க அல்லது உரிமையை வெளிப்படுத்தப் பயன்படுபவை. இவற்றை சுட்டுப்பெயராக பயன்படுபவைகள் பெயரெச்சமாக பயன்படுபவைகள் என இரண்டு விதமாகப் பார்க்கலாம்.

mine - என்னுடையது
yours - உன்னுடைய
his - அவனுடையது
hers - அவளுடையது
its - அதனுடையது
ours - எங்களுடையது
yours - உங்களுடையது
theirs – அவர்களுடையது, அவைகளுடையது

உதாரணம்:

This house is ours.
இந்த வீடு எங்களுடையது

Adjective – பெயரெச்சம்

பெயரெச்சமாகப் பயன்படுபவைகள்

my – என்னுடைய
your – உன்னுடைய
his – அவனுடைய
her - அவளுடைய
its - அதனுடைய
our – எங்களுடைய
your – உங்களுடைய
their - அவர்களுடைய, அவைகளுடைய

உதாரணம்:

This is our house.
இது எங்களுடைய வீடு.

மேலுள்ள வாக்கியங்கள் Possessive ஆகவும் Adjective ஆகவும் பயன்படும் போதுள்ள வேறுப்பாடுகள்

This is our house. (Adjective)
இது எங்களுடைய வீடு.

This house is ours. (Possessive)
இந்த வீடு எங்களுடையது.

Demonstrative Pronouns – குறிப்பிடுச் சுட்டுப்பெயர்கள்
------------------------------------------------------------------
ஒன்றை அல்லது பலவற்றை குறித்துக்காட்டுவதற்கு அல்லது அடையாளப்படுத்தி பேசுவதற்கு இச்சுட்டுப் பெயர்கள் பயன்படுகின்றன.

This – இது, இந்த (ஒருமை)
That – அது, அந்த (ஒருமை)
These – இவை, இவைகள் (பன்மை)
Those – அவை, அவைகள் (பன்மை)

உதாரணம்:

This book is new but those books are old.
இந்த பொத்தகம் புதியது ஆனால் அப்பொத்தகங்கள் பழையது.

(இவற்றில் book books எனும் பெயர் சொற்களை தவிர்த்து சுட்டுப்பெயர்களை மட்டுமே பயன்படுத்தியும் பேசலாம்.)

This is new but those are old.
இது புதியது ஆனால் அவைகள் பழையது.

Relative Pronouns – உரிச் சுட்டுப்பெயர்கள்
------------------------------------------------------------------
ஒரு வாக்கியத்தின் உற்பிரிவாகவோ அல்லது இரண்டு வாக்கியங்களின் இணைப்புச் சொல்லாகவோ பயன்படுபவைகள்.
who
whom
that
which
whoever
whomever
whichever

உதாரணம்:

I told you about a woman who lives next door.
நான் கூறினேன் ஒரு பெண்ணைப் பற்றி அவள் வசிக்கிறாள் அடுத்த வீட்டில்.

மேலும் இதுப்போன்ற இணைப்புச் சொற்களின் பயன்பாடு பற்றி எதிர்வரும் பாடத்தில் விரிவாகப் பார்ப்போம்.

Interrogative Pronouns – கேள்வி சுட்டுப்பெயர்கள்
------------------------------------------------------------------
இவை கேள்வி கேட்பதற்கு பயன்படுபவைகளாகும்.

Who - யார்
What - என்ன
Where - எங்கே
When - எப்பொழுது
Whom - யாரை
Which - எது
Whoever – யாரெவர்
Whomever - யாரெவரை
Whichever - எதுவாயினும்

உதாரணம்:

Where did you go?
நீ எங்கே போனாய்?

Indefinite Pronouns
------------------------------------------------------------------
ஒரு நபரையோ ஒரு பொருளையோ குறிப்பிட்டு கூறாமால் நிச்சயமற்ற நிலையில் பேசுவதற்கு இச் சுட்டுப்பெயர்கள் பயன்படுகின்றன.

all – எல்லா, முழு
another - இன்னொன்று, இன்னொருவர்
every - எல்லா
any – ஏதாவது ஒன்று
some – சில, கொஞ்சம்
nothing – ஒன்றும் இல்லை (ஒன்றும் இல்லாத நிலை)
several – பல
each – ஒவ்வொரு
many – பலர், பல
few - சில

உதாரணம்:

Each of the members has one vote
ஒவ்வொரு உருப்பினர்களுக்கும் இருக்கிறது ஒரு வாக்கு.

Homework:

இச்சுட்டுப்பெயர்கள் எவ்வாறு, ஏன் பயன்படுத்தப் படுகின்றன என்பது இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்பாடத்தில் அனைத்து சுட்டுப்பெயர்களுக்குமான வாக்கியங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒவ்வொரு வாக்கியங்கள் உதாரணமாக வழங்கியுள்ளோம். அவற்றை பின்பற்றி ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அனைத்து சுட்டுப்பெயர்களுக்கும் வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்யுங்கள்.

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டறிந்துக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun
Posted by HK Arun at Friday, March 27, 2009 0 comments
Labels: English Grammar Lessons, English Pronouns, ஆங்கிலப் பாடம்
Monday, March 16, 2009
Back to top Go down
 
English Class 27
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» English class 9
» English Class 26
» English Class 10
» English Class 11
» English Class 28

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: