BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inடாக்டர் அப்துல் கலாமின் கடிதம். Button10

 

 டாக்டர் அப்துல் கலாமின் கடிதம்.

Go down 
2 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

டாக்டர் அப்துல் கலாமின் கடிதம். Empty
PostSubject: டாக்டர் அப்துல் கலாமின் கடிதம்.   டாக்டர் அப்துல் கலாமின் கடிதம். Icon_minitimeMon Jul 26, 2010 1:02 pm

டாக்டர் அப்துல் கலாமின் கடிதம். M_id_910
ஒவ்வொரு இந்தியனுக்கும் டாக்டர்.அப்துல் கலாமின் கடிதம் என்ற தலைப்பில் பல முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட Email எனக்கும் வந்தது. கடிதத்தின் கடைசியில் அனைவருக்கும் தெரியப்படுத்தவும் என்று கோரிக்கையும் இருந்தது.கேள்விகள் பல என்னைச் செருப்பால் அடித்தன.வாசிக்கும்போது நான் சொல்வது விளங்கும். திரு.கலாம் எழுதியிருக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பகிர்கிறேன். இனி அவரது வார்த்தைகள்:




ஏன் நமது ஆற்றலை அறிந்துகொள்ள மறுக்கிறோம்?

நம்நாடு சிறந்த நாடு. பல வெற்றிச் சரித்திரங்கள் நமக்குச் சொந்தம். இருந்தும் அவற்றை அடையாளம் காண மறுப்பது ஏன்?


Remote Sensing Satellite தொழில்நுட்பத்தில் சிறப்பாக இருக்கிறோம்.


பால் உற்பத்தியில் முதலிடம்.


அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் இரண்டாம் இடம்.

ஒருமுறை இஸ்ரேல் செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தபோது குண்டுவீச்சினால் விளைந்த சேதங்களும், உயிரிழப்புகளும் கண்ணில்பட்டது. ஆனால். முதல்பக்கத்தில், ஐந்து வருடங்களுக்குள் தங்கள் நாட்டை வளப்படுத்திய மனிதரைப் பற்றிய செய்தி இடம்பெற்றிருந்தது. உத்வேகம் தரும் இந்தச் செய்தியால் மற்ற சேதங்கள், உயிர்ப்பலிகள் காணாமல் போயின. நமது நாட்டில் நாம் ஏன் எப்போதும் மரணம், நோய், தீவிரவாதம், குற்றம் இவைகளையே வாசித்துக் கொண்டிருக்கிறோம்?

மற்றொரு கேள்வி: நாம் ஏன் வெளிநாட்டுப் பொருட்களின்மீது அதிக மோகம் கொண்டவர்களாக இருக்கிறோம்? வெளிநாட்டுத் தொலைக்காட்சி, தொழில்நுட்பம், ஆடைகள் இவற்றை அதிகம் விரும்புகிறோம். தன்னம்பிக்கையே சுயமரியாதைக்கான காரணம் என்பதை நாம் உணரவில்லையா?

ஹைதராபாத்தில் இந்தச் சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஒரு சிறுமி என்னிடம் கையெழுத்து கேட்டாள். நான் அவளிடம் உனது இலட்சியம் என்ன என்றேன். அவள், வளர்ந்த இந்தியாவில் வாழ ஆசைப்படுகிறேன்” என்றாள். அவளுக்காக நீங்களும், நாமும் இந்தியாவை வளப்படுத்த வேண்டும். நமது நாடு வளர்ச்சியில் குறைந்ததல்ல; மிகுந்தது என்று நாம் அறிவிக்க வேண்டும்.

பொதுவாக நீங்கள் சொல்வது :

அரசாங்கம் செயலற்றது.


சட்டங்கள் பழமையானது.


மாநகராட்சி குப்பைகளை ஒழுங்காக அள்ளுவதில்லை.


தொலைபேசிகள் சரிவர இயங்குவதில்லை.


ரயில்வே நகைப்புக்குரியது.


நமது விமானசேவை உலகிலேயே மட்டமானது.


கடிதங்கள் உரிய இடத்தை அடைவதில்லை.

நீங்கள் சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள் மேலும் சொல்கிறீர்கள். இவற்றை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன?

சிங்கப்பூர்வாசியாக உங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அங்கு நீங்கள் உங்கள் சிகரெட்துண்டை சாலையில் எறிவதில்லை. அல்லது தெருக்களில் உணவருந்துவதில்லை. மாலை 5 மணி முதல் 8 மணி வரை Orchard Road செல்வதற்கு 5 டாலர் (தோராயமாக 60 ரூபாய்) தருகிறீர்கள். உணவகங்களில் ஒதுக்கப்பட்ட நேரத்தைவிடக் கூடுதல் நேரம் இருந்தால் பார்க்கிங்கில் கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்கள். சிங்கப்பூரில் நீங்கள் எதுவும் சொல்வதில்லை!

உங்களால் முடியுமா? நீங்கள் ரம்ஜான் தினத்தில், துபாயில் தெருக்களில் உணவருந்தத் துணிவதில்லை.

லண்டனில் தொலைபேசித்துறையில் பணிபுரியும் ஊழியருக்கு மாதம் 10 Pound லஞ்சம் தந்து எனது STD / ISD பில்லை வேறொருவருக்கு அனுப்பிவிடு என்று சொல்வதில்லை.

வாஷிங்டனில் 55 KM வேகத்துக்குமேல் சென்று போக்குவரத்துக் காவலரிடம் “நான் யாரென்று தெரியுமா? இன்னாரின் மகன். உனது லஞ்சத்தை வாங்கிக் கொண்டு வழிவிடு” என்று பேசுவதில்லை.

ஆஸ்திரேலியா அல்லது நியூஸிலாந்து கடற்கரைகளில் தேங்காயை அதற்குரிய தொட்டியில் போடாமல் கடற்கரையில் எறிவதில்லை.

ஏன் நீங்கள் டோக்கியோ தெருக்களில் புகையிலைத் துப்புவதில்லை?

பாஸ்டனில் நீங்கள் ஏன் போலிச் சான்றிதழ் வாங்க முயல்வதில்லை?

நாம் அதே ”நீங்களைப்” பற்றித்தான் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

வெளிநாட்டு விதிமுறைகளைப் பின்பற்றும் நீங்கள் சொந்த நாட்டில் செய்வதில்லை.இந்தியாவில் இறங்கியதும் குப்பைகளைத் தெருக்களில் வீசுகிறீர்கள். வெளிநாட்டில் விதிகளை முறையாகப் பின்பற்றி நன்மதிப்புமிக்க குடிமகனாகத் திகழும் நீங்கள் ஏன் நமது இந்தியாவில் அவ்வாறு இருப்பதில்லை?

அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டு பொறுப்புகளை மறந்துவிடுகிறோம். அரசே அனைத்தையும் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். தெருவில் இருக்கும் குப்பையைத் தொட்டியில் போடாமல் அரசே சுத்தம் செய்யக் காத்திருக்கிறோம். கழிவறையை முறையாகப் பயன்படுத்தாமல் ரயில்வே சிறந்த கழிவறை வசதி தரவேண்டும் என்கிறோம்.


பெண்கள் சார்ந்த சமூகப் பிரச்சனைகளில் வரதட்சணையைப் பற்றி நமது வீடுகளில் உரக்கப் பேசிவிட்டு எதிர்மறையாக நடந்து கொள்கிறோம். இந்த அமைப்பை மாற்றப் போவது யார்?


அமைப்பு என்பது என்ன? நம்மைப் பொறுத்தவரை பிறர், அடுத்த வீடுகள், மற்ற நகரங்கள், மற்ற சமுதாயங்கள் மற்றும் அரசாங்கம் என்பது நமது வசதியான கருத்து. ஆனால் நிச்சயமாக நீங்களோ, நானோ அல்ல. சமூகத்திற்கு நமது பங்களிப்பு என்று வரும்போது நாம் நமது குடும்பத்தோடு பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு, எங்கோ தூரதேசத்திலிருந்து தூதுவன் வந்து யாவற்றையும் சரிசெய்வான் என்று நம்புகிறோம். அல்லது நாட்டைவிட்டு ஓடுகிறோம்.


அமெரிக்காவுக்கு ஓடி அவர்கள் அமைப்பைப் புகழ்கிறோம். நியூயார்க் பாதுகாப்பில்லாத போது இங்கிலாந்துக்கு ஓடுகிறோம். இங்கிலாந்தில் வேலைவாய்ப்பில்லாத போது மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பறக்கிறோம். அங்கு போர் துவங்கினால், நம்மைப் பத்திரமாகக் காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கிறோம்.


ஒவ்வொருவரும் நாட்டைப் பழிக்கிறோம். இங்குள்ள அமைப்பை மேம்படுத்த யோசிப்பதில்லை. நமது மனசாட்சி பணத்திடம் அடகு வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள இந்தியர்களே, இந்தக் கட்டுரை நமது மனசாட்சியைச் சோதிப்பதற்கான வாய்ப்பு.


ஜான் கென்னடியின் வார்த்தைகளை இந்தியாவிற்குப் பொருத்துகிறேன்.


'ASK WHAT WE CAN DO FOR INDIA AND DO WHAT HAS TO BE DONE TO MAKE INDIA WHAT AMERICA AND OTHER WESTERN COUNTRIES ARE TODAY'


இந்தியாவிற்கு என்ன தேவையோ அதை நாம் செய்வோம்!


நன்றி,


Dr.அப்துல் கலாம்.
Back to top Go down
GoodPayan

GoodPayan


Posts : 167
Points : 235
Join date : 2010-06-30
Age : 39
Location : Chennai

டாக்டர் அப்துல் கலாமின் கடிதம். Empty
PostSubject: Re: டாக்டர் அப்துல் கலாமின் கடிதம்.   டாக்டர் அப்துல் கலாமின் கடிதம். Icon_minitimeTue Jul 27, 2010 5:22 am

This must be a APJ's words only. Bec no one can say such a responsible words. As Gandhi said, “Be the change you want to see in the world.”
Thanks Lakshana.
Back to top Go down
 
டாக்டர் அப்துல் கலாமின் கடிதம்.
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நைனா வெர்சஸ் டாக்டர் ~~ சிறுகதைகள்
» கிட்னி அறிந்ததும் அறியாததும்..! - டாக்டர். சௌந்தரராஜன்
» ஒரு தந்தையின் கடிதம்:
» காதலாய் ஓர் கடிதம்
»  அமரர் கல்கியின் படைப்புகள் - அலை ஒசை ( 1. தபால்சாவடி )

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: