BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉணவு... மனம்... கவனம்!  Button10

 

 உணவு... மனம்... கவனம்!

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

உணவு... மனம்... கவனம்!  Empty
PostSubject: உணவு... மனம்... கவனம்!    உணவு... மனம்... கவனம்!  Icon_minitimeMon Aug 02, 2010 10:08 am

"ருசியான உணவுகள் என்பதைவிடவும் ஆரோக்கியமான உணவுகள்தான் முக்கியம். அதற்காக தீவிரமான பத்தியம் இருக்கத் தேவை இல்லை. சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டும் மேற்கொண்டால் போதும்!" என்று உணவுப் பழக்கங்கள் பக்கம் கவனம் திருப்புகிறார் டயட்டீஷியன் பூங்கோதை.

"காலை உணவுக்கு புரோட்டீன் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைக் காலையில் சாப்பிடுவது மிகவும் மந்தமான மனநிலையைத் தரும். மதியமும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். 'வெள்ளை நிற' உணவுகளான அரிசிச் சாதம், சர்க்கரை, பால் போன்ற உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு சாலட், மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த உணவுகளை எடுக்கும்போது எல்லாம் உங்களுக்கு மந்த நிலை ஏற்படுகிறதோ அந்த உணவுகளைத் தவிர்ப்பது நலம்.

காபி அருந்துவதைத் தவிர்த்து டீ அருந்தலாம். ஆனால், அதுவும் மிதமிஞ்சிப் போகக் கூடாது. ஆரஞ்சு, தக்காளி போன்ற சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகளை அதிகம் உண்பது மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகளையும் உட்கொள்ளலாம்.

மதியம் சாப்பிட்டவுடன் குட்டித் தூக்கம் போடுவதில் தவறு இல்லை. ஆனால், அதுவே நீண்ட நேரத் தூக்கமாக மாறிவிடக் கூடாது. அவ்வப்போது நடப்பது, சில பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் பகல் நேர மந்தநிலையைச் சமாளிக்கலாம். ஆர்டிஃபீஷியல் கலரிங் உள்ள உணவுகளைத் தவிர்த்து, தண்ணீரை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலமாக மனதை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கலாம். கவனமும் மேம்படும்
Back to top Go down
 
உணவு... மனம்... கவனம்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்
» முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்
» *~*மனம்*~*
» இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு
» ~~ கண்ணாடி மனம்~~®

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: HEALTH & BEAUTY SPECIAL-
Jump to: