BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in-- Tamil Story ~~ இந்த மரம் பரப்பும் வேர்கள்   Button10

 

 -- Tamil Story ~~ இந்த மரம் பரப்பும் வேர்கள்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

-- Tamil Story ~~ இந்த மரம் பரப்பும் வேர்கள்   Empty
PostSubject: -- Tamil Story ~~ இந்த மரம் பரப்பும் வேர்கள்    -- Tamil Story ~~ இந்த மரம் பரப்பும் வேர்கள்   Icon_minitimeSun Apr 17, 2011 3:49 am

-- Tamil Story ~~ இந்த மரம் பரப்பும் வேர்கள்




அந்த ஐந்தாம் வகுப்பு வரையும் மட்டுமே உள்ள அந்த கிறிஸ்தவ பாடசாலையின் பிரார்த்தனை மண்டபம் விளையாட்டு திடல் போல் காட்சியளித்து கொண்டிருக்கிறது.பொடி பெட்டையள் கீயோ மாயோ என்ற இரைச்சல் சத்தத்துடன் ஓடி ஆடி ஏதோ விளையாடி கொண்டு இருக்கின்றனர்.அந்த பெரிய நீண்ட பிரார்த்தனை மண்டபம் தான் வகுப்பறைகளாகவும் பிரார்த்தனை செய்யவும் விளையாடவும் உள்ள இடமாகவும் நேரத்துக்கு ஏற்றவாறும் தேவைக்கு ஏற்றவாறும் உருமாறிக்கொள்ளும்.ஆனால் அவன் மட்டும் தனித்தே இருக்கிறான்.விளையாடும் சிறுவர்கள் அவனை சேர்க்கவுமில்லை,சேர்க்க விரும்பவும் இல்லை, இவனும் தன்னை சேர்க்க சொல்லி கேட்கவும் இல்லை.

இன்னும் சில நேரத்தில் வகுப்பு தொடங்க மணி அடித்துவிடும். தீடிர் என்று அலை அடிச்சு ஓய்ந்த மாதிரி சத்தமும் காணமால் போய் விடும். அந்த நிசப்தம், அந்த பிரார்த்தனை மண்டபத்தின் மேடையிலுள்ள ஆள் உயரமுள்ள சிலுவையில் அறைந்தபடி இருக்கும் யேசு கிறிஸ்து ,அந்த சுவர்களில் வரைந்திருக்கும் ஓவியங்கள் எல்லாம் சேர்ந்து யாரும் இல்லாத தேவாலாயத்தில் இருக்கும் தனிமையை, பயங்கரத்தை, பயத்தை, தருவது போன்ற நிலமையை அங்கு உருவாக்கும்.

வெள்ளை சட்டையும் நீல காற்சட்டையும் எல்லாருக்கும் உரிய பொதுவான யூனிபோம் ஏற்ற தாழ்வற்ற நிலையை உருவாக்க என்று அந்த கிறிஸ்தவ பாடசாலை கூறிகொண்டாலும் வித்தியாசத்தை வலிந்து அழுத்தி காட்டி கொண்டே இருந்தது துணியின் தரத்திலும் ,அழகாக சலவை செய்யப்பட்ட செய்யபடாத அழுக்கான அழுக்கு போகாத கிழிந்த ஒட்டி தைத்த என்ற வகைகளில் அங்குள்ளவர்கள் அணிந்திருந்தமையால்.. வித்தியாசங்கள் தெரியாமல் இருக்க முனைந்தாலும் வித்தியாசம் தெரிந்து கொண்டே இருந்தது.

விளையாடவிடினும் அங்கு விளையாடுபவர்களை கூட பார்த்து ரசிக்கும் மனமின்றி யன்னலூடாக வெளியில் தெரியும் பரந்த ஆகாயத்தை அந்த சிறிய வயதில் பெரிய ஆள் மாதிரி வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.

விளையாட வாயேன்டா கண்ணனின் குரல் கேட்டு மோன நிலை கலைந்தான் ராசன். மாட்டேன் வரலே போ...என்று சொல்வது மாதிரி அவனின் அசைவு மட்டுமே இருந்தது. வார்த்தைகளாக வசனங்களாக வெளியில் வராமால்

இயல்பான இரக்கம் குணமோ என்னவோ தெரியவில்லை காரணம் தெரியாமல் கண்ணன் ராசனில் மிகுந்த நட்புத்துவம் கொண்டான்

கண்ணன் விரும்பினாலும் சாதி என்றால் என்ன என்று கேட்டால் சரியாக விடை அளிக்க தெரியாத இந்த சிறிசுகள் சாதி ஏதோ குறைவு என்று சொல்லி ராசனை நிச்சயம் சேர்க்க மாட்டார்கள்.

கண்ணனுக்கு சிறு வயதில் இயல்பாக இருந்த இந்த பச்சாதாபம் போல..யாரும் தன்னிடம் பரிதாபடவோ பரிதாபத்துக்குரியவனாக ஆகக் கூடாத என்ற மனநிலை இந்த சிறு வயதில் ராசனிடமும் இருந்தது.

ஏதோ குறைந்த ராசனைப் போல உள்ள பொடியள் மூன்று நாலு பேர் வரை இந்த பள்ளிக்கு வாறவை, அவை ஆடிக்கு ஒருக்கா அமவாசைக்கு ஒருக்கா வந்து பிறகு துப்பரவாக வராமல் விட்டுட்டினா. இப்ப ராசன் மட்டும் ஒழுங்காக வாறது வந்தாலும் ராசன் மற்ற பொடி பெட்டையள் நேரத்துக்கு நாளுக்கு நினைத்தபடி வகுப்பில் இடம் மாறி இருப்பது போல் இருப்பதில்லை. எப்பவும் ஒதுக்கபட்ட இடம் போல கடைசி மேசை கடைசி கதிரையிலையே இருந்து கொள்வான். ஆசிரியர்களும் விரும்பியோ விரும்பமாலோ அப்படியே விட்டு விட்டார்கள்

வெறும் அசைவுகளாலை மட்டும் பதில் சொல்லிக்கொண்டிருந்த ராசனிடமிருந்து வார்த்தைகளால் உரிய பதில் வேண்டவோ என்னவோ விளையாட வாயேன்டா என்று தொடர்ந்து மீண்டும் குரல் கொடுத்தான் கண்ணன்

எந்த சலனமற்று பதில் சொல்லாமல் இருந்ததுக்கு காரணம் இரண்டு நாட்களின் முன் அங்கு நடந்த விசயம் காட்சியாய் வந்து பிஞ்சு மனத்தில் வந்து கனத்தது தான வகுப்பில் எல்லாரையும் விட வயதுக்கு மீறிய தோற்றம் அவனது ஊளைச்சதையால் திரண்ட உடம்பை அவனது கால்களே தாங்காமல் கஸ்டப்படும்.அவன் நடக்கும் போது ஒரு மிருகம் அசைந்து வருவது மாதிரித்தான் இருக்கும். அவன் தான் ஜோர்ஜ் காரில் தான் பள்ளிக்கு வருவான். வந்தால் சும்மா இருக்கமாட்டான்.

அளவுக்கு மீறி தீனி கிடைப்பதால் என்னவோ சக பொடி பொட்டையளை வம்புக்கு இழுத்து வேதனைபடுத்தி அதை பார்த்து ரசிக்கும் குருர ரசனை அவனிடம் அந்த சிறிய வயதில் இருந்தது. பெட்டையளின்ரை தலைமயிரை பிடித்து இழுத்து சேட்டை செய்வான் அவர்களின் வேதனையின் உச்சம் கட்டம் வந்து சத்தம் போடும் வரை.இவனது கொடுமை தாங்காமல் நுள்ளுறான் கிள்ளுறான் பொடியள் பெட்டையள் சத்தம் போட்டாலும் வாத்திமாருக்கும் இவன் தான் காரணம் என்று தெரியும் பெரிய இடத்து பொடியன் என்ற படியால் ஒன்றும் சொல்லுவதில்லை.

அன்றும் விரைவாக ஓடி வந்த ஒரு பொடியன் மேல் வேணும் என்று கால் குறஸ் போட சுவரிடம் மோதி மண்டை உடைய விழுந்து இரத்தம் பீறிட்டு மயங்கி விழ பள்ளிக்கூடமே அல்லோலகலப்பட்டது

யார் யார் செய்த்து என்று குரல் டீச்சேர்ஸ் குரல் எழுப்பிகொண்டிருக்க.. யாருமே வாய் திறந்து பதில் சொல்லவும் இல்லை. சொல்லவும் மாட்டார்கள் ஜோர்ஜ்க்கு எதிராக. சிலவேளை யாரும் சொன்னாலும் என்ற பயத்தில் அவனே முந்தி கொண்டு ராசன் தான் செயதான் உரத்த குரலில் பொய் கூறீனான்.

நான் இல்லை டீச்சர் ராசன் வாய் திறந்து சொல்லு முன் அங்கு நின்ற் டீச்சேர்ஸ் அவன் மேல் அங்கு உள்ள கோபத்தை வன்மத்தை அவனில் காட்டி முடித்து விட்டார்கள்.ராசன் அடி வேதனை ஒரு புறம் இருக்க அந்த சிறிய வயதில் வெட்கமும் அவமானமும் அடைந்து கூனி குறுகி நின்றான

அவனுக்கு வெட்கம் இருக்கக்கூடாதா என்ன

காலம் தாழ்த்தி தான் கண்ணனின் குரல் கூட இவனில்லை டீச்சர், ஜோர்ஜ் தான் என கிணத்துக்குள் இருந்து வெளி வருவது போல் சத்தம் மெதுவாக தான் வெளி வந்த்து.

யார் கேட்டார்கள் அதை அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.

அப்பொழுது ஜோர்ஜ் மட்டும் கண்ணனை பார்த்த சுட்டெரிக்கும் பார்வை இருக்கே நீயும் அந்த சாதியாடா என்ற மாதிரி இருந்தது

வகுப்பு தொடங்க இருக்கும் இருக்கும் அந்த குறுகிய நேரத்திற்குக்குள் ஏதோ விளையாடி சந்தோசத்தை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் பொடி பெட்டையள் விளையாடும் சத்தம் அந்த மண்டபத்தை இப்பவும் அதிர வைத்து கொண்டே இருந்தது

சந்தோசமாக இல்லாமல் முரட்டு கோபம் கொப்பளிக்க கண்ணனும் ராசனும் இருந்த பக்கம் வந்த ஜோர்ஜ் இவர்கள் ஏதோ வீபிரீதம் நடக்கபோகுது நினைக்க முன்பே வந்ததும் வராமல் கண்ணனை சுவருடன் சாத்தி குத்து விட்டான் நிலத்தில் விழுந்த கண்ணன் மேல் அடுத்த குத்து ஓங்கவும் வகுப்பு ஆரம்ப மணி அடிக்கவும் சரியாக இருந்தது. தீடிரேன்று அம்மண்டபத்தில் ஏற்பட்ட அமைதியை கிழித்து ஜோர்ஜின் அவலகுரல் தான் பள்ளி மண்டபம் முழுவதும் எதிரொலித்து கொண்டு இருந்தது. ராசன் தன்னுடைய இருக்கின்ற பலம் எல்லாம் ஒன்று சேர்த்து அங்கு உள்ள கதிரையால் மூர்க்கத்தமான தாக்கி கொண்டிருந்தான்.அரசமரமன்றி அது பரப்பும் எந்த வேர்களுமே நாளை அங்கு இருக்காது என்று செல்லும் இளைஞர்களின் ஆக்குரோசம் அங்கு உணர்த்தி கொண்டிருந்தது


அன்று யாரிடமும் அகப்படாமல் ஓடிய ராசன் எப்பவுமே அந்த பள்ளிக்கு திரும்பி வந்ததே இல்லை

இப்ப கண்ணனும் கூட அந்த பள்ளிக்கூடம் போறதே இல்லை ஜந்தாம் வகுப்பு பாஸ் பண்ணின படியால் வேற பள்ளிக்கூடத்துக்கு தான் போறது.

***

அந்த சந்தியிலிருந்து கொஞ்ச தூரம் சென்றவுடன் அந்த முடக்கிலுள்ள வேப்பமரத்துக்கு பக்கத்திலுள்ள ஒழங்கைக்குளால் தான் ராசனின் ஆட்கள் போவார்கள் வருவார்கள் எப்பதாவது கண்ணில் ராசன் தட்டு படுவான் என்று ஏக்கத்துடன் அதால் சந்திக்கு போய் வரும் பொழுது தேடுவான் வருடங்களாக ஒரு நாளும் ராசன் அகப்பட்டதில்லை.

அந்த ஊராய் இருந்த போதும் ஒரு நாளும் அதுக்குள் கண்ணன் போனதில்லை உதுக்காலை நிறைய சனங்கள் போய் வருகுதுகள் உதுக்களை இவ்வளவு சனம் எப்படி இருக்குதுகள் என்று யோசிக்க வைக்கும். சிங்கம், புலி வாழும் இடம் போல அதுக்குளை போனால் பிரச்சனை என்று பெரிசுகள் பயப்படுத்தி வைச்சிருக்குதுகள். அது மட்டமல்ல சந்தி கடையில் வெளியில் தொங்கும் கறள் பிடித்த மூக்கு பேணிகளே சாட்சியாக பறைசாற்றி கொண்டிருக்கிறது இந்த பெரிசுகளின் கற்கால மனித விலங்குகளின் மனோபாவத்தை கண்ணன் வீட்டு பின்புறத்தில் கொஞ்சம் வெயில் தணிந்தால் காணும் வீட்டிலுள்ள பெரிசுகள் அக்கம் பக்கம் உள்ள விண்ணானம் கதைக்கிறதுகு என்றே அலையிற கொஞ்ச பேரல்லாம் கூடி ஒரு சட்டமன்ற விவாதமே வைப்பினம்.

அதிலை வாற ஆளிலை சுருட்டுவும கையும் திரியிற சுப்பர் இருக்கிறார் எல்லோ..பேப்பரிலை இருக்கிற ஒரு வரி விடாமல் வாசிப்பர், முசுப்பாத்தி என்ன என்றால் வீரகேசரி பேப்பரில் கடைசி பக்கத்திலை என்ன அச்சகம் என்ன இடத்தில் என்று இருக்கின்ற கிராண்ட்பாஸ் கொழும்பு என்று இருக்கிற வரை வாசிப்பார் என்றால் பாருங்கோவன்.அதோடை அவருக்கு தெரிந்த செயதியை அரப்பன் இருப்பன் வைச்சு மெருகூட்டி யாருக்கும் சொல்லாட்டி சாப்பாடு சமிபாடு அடையாத மாதிரி திரிவார். யாருக்கும் சொன்னப்பிறகு தான் சுருட்டை உள்ளுக்கு இழுத்து வெளியில் புகையை விட்டு வருகிற சுகத்தை அதிலை காண்பார்.

இன்றைக்கும் சுப்பர் அடிச்சு பிடிச்சு செய்தியோடை வந்திருந்தார்

ஊரிலை சாதி சண்டையாம் ஒருதருக்கு ஒருதர் வெட்டி சாயத்து இரண்டு பக்கமும் ஆட்கள் செத்து போட்டினமாம் என்று பதை பதைக்க சொல்லிக கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் ராசனின் நினைப்பு வந்து போனது அவனுக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கையோ வெளியில் போக இருந்த கண்ணனுக்கு சொல்லி கேட்டுது வீட்டுக்குள்ளிலிருந்து.. இப்ப கொஞ்ச நாளைக்கு சந்தி பக்கம் போகாதை அப்பு என்று.

இப்படி சொட்டண்டு என்று பயப்பட்டுக்கொண்டு ஒரு சின்ன கீறல் விழாமல் வாழ்வு அசைய வேணும் என்று விரும்பும் இந்த நடுத்தர வர்க்கம் என்னண்டு இவ்வளவு காலமும் இவங்களை அடக்கி வைச்சிருந்திச்சுது என்று ஒரு பக்கம் ஆச்சரியம் கொண்டான்.

இரண்டு மூன்று நாட்களாக யாரும் வீட்டை விட்டு வெளிக்கிட்டதில்லை.

இரவு பகலாக ஜீப் ஓடிய படியே இருந்தது ஏதோ பெரிய களேபரம் நடந்தாய்பட்டது. என்ன என்று தெரியவில்லை

விடிய அதுவும் சுப்பர் வந்து தான் விசயம் தெரியும்

சந்தியிலுள்ள கடைகளுக்கு எல்லாம் போடுறதுக்கு என்று நாட்டு பெற்றோல் பாம் செய்து டவுன் பக்கத்திருந்திலிருந்து கொண்டு வந்து அவையின்ரை அதுக்குள்ளை பாதுகாப்பாக தாட்டு வைக்க முயற்சி செயதவையாம். அந்த நேரம் அமுக்கத்தில் வெடித்து அந்த இடத்தில் மூன்று பேர் சரியாம் என்று சொல்லி நீண்ட மூச்சுவிட்டார் ஒருவகை சந்தோசத்துடன்

நீங்களும் அவங்களை தண்ணி அள்ளவிட மாட்டியள் அவங்கடை குடிக்கிற அள்ளுற கிணத்துக்குள்ளை கழிவு ஓயிலை போட்டால் அவங்களும் எவ்வளவு நாளைக்கு பொறுப்பாங்கள். அது தான் உந்த வேலை செய்ய வேலை வெளிக்கிட்டருக்கிறாங்கள் பிழைச்சு போச்சு போலை என்று அங்கு நின்ற இன்னோரு பெரிசு சுப்பருக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தது

செத்தவரகளில் ஒருவ்ர் ராசனின் தகப்பன் என்று கண்ணன் ஏதோ முறையில் அறிந்து கொண்டான் பின் இப்படி ஒரு போராட்டங்களும் சண்டைகளும் சச்சரவுகள் நடந்ததின் அசுமாத்தமும தெரியாமல் காலமும் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தது

****

சனங்களின் முகத்தில் எல்லாரிடமும் கலவர பீதி.சிங்கள பகுதியில் இன கலவரமாம் என்று ஐம்பத்து எட்டில் நடந்ததை வெறும் கதைகளாக கேட்ட புதிய இளம் சமுதாயம் இப்பொழுது நிஜ செய்தி கண்டு இன தெரியாத உணர்வில் சந்தியிலே றோட்டு கரையோரங்களில் மர நிழலில் என்ன எப்படி என்ற ஆவலில் ஒருதருக்கு ஒருதர் தெரிந்த தெரியாதவற்றை இனம் தெரியாத உணர்வுடன் பரிமாறிக் கொண்டிருக்கின்றனர் . அதே மாதிரி அந்த ஒழுங்கை போகும் தொடக்கத்தில் இருக்கும் பெரிய விசாலாமாய் பரந்து ஜாம்பவான் மாதிரி நிமிர்ந்து நிற்கும் அந்த வேப்ப மர நிழலிலும் இளைஞர்கள் ,முதியவர்கள் என்று சிறு குழுவாகவும் பெருவட்டமாகவும் கூடி விவாதித்து கொண்டிருக்கின்றனர்.

வேப்ப மரத்தடியிலிருந்து பக்கவாட்டாக பார்த்தால் அந்த சந்தி பஸ் நிலையம் வடிவாக தெரியும்.

பஸ் தட்டி வான் ,போன்றவற்றிலிருந்து ஆட்கள் நிறைய இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் அநேகம் பேரை பல காலம் காணமாயால் என்னவோ புதியவர்களாகவும் புதிய முகங்களாகவும் தெரிந்து கொண்டிருந்தனர்.

கட்டைக்கை பெனியன், வாரி மேவி இழுத்து ஒழுங்காக வாரப்பட்ட தலைமயிர், உடல் உழைப்பிலாய் உரமான கைகள் ,தோள்கள் உடைய அந்த கூட்டத்தில் நின்ற ஒருவன் அங்கு இளைஞர்கள் சகிதம் விவாதித்து கொண்டிருந்த கண்ணனை பார்த்து சிரித்தான். சிரித்தவன் புதியவன் மாதிரி கண்ணனுக்கு முதல் தோன்றினாலும் அவன் தனக்கு புதியவன் அல்லாத இவ்வளவு காலமும் தேடிய தனது பால்ய நண்பன் ராசன் என்று விளங்கி கொள்ள சிறிது நேரம் காலம் எடுத்தது.

கண்ணனுக்கும் அவனைக் கண்ட சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலைமை இன கலவரம் நடந்த சூழலில் கலவரம் படிந்த நேரம்

என்றாலும் ராசன் வாழும் பகுதியில் சாதிய முரண்பாடை பயனபடுத்தி சிலரை புத்த மத்த்துக்கு மாத்தி சிங்கள பள்ளிக்கூடமும் இயங்கி ஒரு புத்த பிக்குவும் அந்த ஒழுங்கையால் சில காலமாக போய் வருவது வழக்கம்.

அந்த கூட்டத்திலும் இந்த இனக்கலவரச்சூழலில் இந்த மண்ணில் அந்த சிறிதாக வளர்த்தவிட்ட சிங்கள பேரினவாத ஆக்கிரமிசின்னமாக வளர்ந்து கொண்டு இருக்கின்ற அரசமர சுவடை இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற ஆக்கிரோசத்தில் தான் அந்த இளைஞர்கள் இப்ப விவாதித்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் கண்ணன் உறுதியாக இருந்தான். நீண்ட கால சாதிய அடக்குமுறையால் மதம் மாறினவர்கள் அவர்களுக்கு நிலமையை உணர்த்திதான் அவர்களின் சம்மதத்துடன் செய்ய வேண்டும் என்பதில் கண்ணன் ராசனை சைகையால் சமிகிஞ்சை காட்டினான் அங்காலை தனிய வரும் படி

இருவரும் சிறிய மெளனத்தின் பின் அன்னியோன்யமானவர்கள் போல் கதைப்பது கண்டு அங்கு குழுமியவரின் பார்வை எல்லாம் இவர்கள் பக்கமே திரும்பியது.

அந்நேரம் பார்த்து அந்த ஒழுங்கையால் வழமையாக வாற மாதிரி அந்த புத்தபிக்கு ஒரு குடையுடன் வெளியில் வந்து தார் றோட்டில் ஏறினார். இப்பொழது அங்கு குழுமி இருந்தவர்களின் பார்வை எல்லாம் அந்த புத்த பிக்குவின் பக்கம் திரும்பியது. சிலர் கூக்குரலிட்டு விசில் அடிக்கவும் செய்தனர்.

அந்த பிக்குவின் முகத்தை பார்த்தால் தியானம் செய்யிறவனின் முகத்தில் தவிழும் பவிய்யம் சிறிது இல்லாமல் இருந்தது.அதற்கு பதிலாக முகத்தில் கொலை வெறி தாண்டவம் ஆடியது

ராசனுடன் கதைக்கும் போது கண்ணனுக்கு ஆச்சரியமாக இருந்தது ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியவன் அழகாக இப்படி அரசியல் விவாதம் செய்யிறான் என்று.

இந்த சாதிய முரண்பாட்டை பயன்படுத்தி அந்த ஒழங்கைகுள் நுழைந்து முரண்பாட்டை வளர்த்தவர்கள் மூன்று வகையானர் புத்த பிக்கு ,வெறும் சிறுபான்மை துவேசம் கதைத்து அந்த வெப்பத்தில் குளிர் காயும் சாதி மகாசபை, சில ஓட்டும் பொறுக்கும் இடதுசாரிகள், ஓட்டுபொறுக்காத இடதுசாரிகள்

இந்த இடதுசாரிகள் இவர்கள் நேரத்துக்கு ஏற்றவாறு மாஸ்கோ, பீகீங் என்று இப்ப புதிசாய் அல்பேனியா என்று ஏதோ அந்த ஒழுங்கைக்குள் காட்டி கொண்டிருக்கிறார்கள்.

அதனால் அந்த தத்துவ பிழம்பாய் உருவாகி இருப்பதால் ராசன் நல்லா கதைக்க பழக்கி இருக்கிறாங்கள் நல்லா கதைக்கிறான். அந்த அளவில் கொஞ்சம் அவர்களை பாராட்டலாம்.

ஆனால் இந்த ஒழுங்கைக்குள் புகுந்த மூன்றும் வகையினரும் சிங்கள-தமிழ் தேசிய இனபிரச்சனையில் பிழையான் எதிரியை அவர்களுக்கு சுட்டி காட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர்.

கண்ணனினதும் ராசனினினதும் விவாதம் தொடர்ந்து கொண்டிருந்துது. வேப்ப மரத்தின் நிழல் இப்பொழது இடம் மாறி இருந்தது. அவர்கள் வெகு நேரம் விவாதித்தை உணர்த்தியது.

அந்நேரம் ஒழுங்கையால் ஒரு மோட்டர் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது. சாதிய எதிர்ப்பை வைத்து பணம் கண்டு சமாதன நீதவான் ஆகினவர் அதில் வந்து கொண்டிருந்தார்.

சகலரது பார்வையம் இவரையை நோக்கியது இவரைப் பற்றிய தமாஸ் என்னவென்றால் சாதிய எதிர்ப்பை மட்டுமே அரசியலை வைத்து அதன் மூலம் பணம் கண்டு அந்த பணமூலம் ஓர் அறிப்பை செய்தது தான்

தனது மகளை ஆரும் உயர் சாதியுலுள்ள ஒருவன் மணம் செய்தால் இரண்டு லட்சம் வழங்குவேன் இவர் தண்டரோ போட்டதை நினைத்து சிரித்து கொண்டான். இவன் சிரிப்பதை கண்ட என்ன பலமாய் மனதில் சிரிக்கிறாய் என கேட்டான் ராசன்

இப்ப கதைக்க கூறீனாய், எங்கட வலி உனக்கு புரியாது என்று .அதை ஒரு அளவுக்கு ஒத்து கொள்ளுறன் ,ஆனால் உந்த மோட்டர் சைக்கிளில் போறவர் பணத்தை காட்டி சாதிக்கு குடமுழுக்கு செய்து உயர் சாதியாகணும் என்று நினைப்பதை பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டான் கண்ணன்.

ராசனின் தொடர்ந்த மெளனம் தான் இருந்தது இராமநாதன், சேனநாயக்கா ஆக்கள் விரும்பினாலும் சேர நினைச்சாலும் இப்ப சேர இயலாது அது போல நீயும் லொக்கு பண்டா கூட சேர நினைச்சாலும் ஒன்று சேர இயலாது, அதோடை அந்த லொக்கு பண்டாவுக்கு கூட இந்த இனப்பிரச்சனை தீராமால் சுபீட்சம் இல்லை அவ்வளவுக்கு பேரினவாதம் மேலோங்கி இருக்கிறது என்று அழுத்தமாக கூறினான்.

மெளனத்தை கலைத்து ராசன் ஏதோ கூற வர இடைமறித்து கண்ணன் கூறினான் இந்த பேரினவாத்த்தின் கொடுமை வலுத்து உன் வீட்டு கோடிக்குள்ளும் வரும் அப்பொழது இவ்வளவு நேரம் நீ கதைத்த சாதியம் பெரிசகளின் வீட்டு கோடிக்குள்ளை அல்லது அவர்களின் சுவாமி அறையின் டிரங் பட்டியில் தான் இருக்கும். உந்த பெரிசுகளுக்கு இந்த சாதியத்தை ஒடுக்குமுறை செய்யிற ஆயுதமாக இனிமேல் பயன்படுத்த இயலாத அளவுக்கு வலு இழந்து விடும். வேணும் என்றால் ஒரு தற்பாதுக்காப்பாக ஒரு அடையாளமாக பாவிக்க முனைவினம் இருந்து பார் என்று முடித்தான் கண்ணன்.

ஒரு தட்டி வான் கலவரத்தில் பாதிக்கபட்டவர்களை இறக்கி கொண்டி இருந்தது அதில் தென்னிலங்கையில் கடை வியாபரம் செய்யப் போன உயர் சாதியை சேர்ந்தவரும் இறங்கி கொண்டிருந்தார் கட்டு காயங்களுடன். அதே நேரம் பஞ்சத்துக்கு பிழைக்க போன தாழ்ந்த சாதி என்று சொல்லப்படுவரும் கட்டு காயங்களுடன் இறங்கி கொண்டிருந்தார்

இதையும் கண்டாப்போல் வேறு விவாதம் தேவை இல்லை நினத்தார்கள் என்னவோ

கண்ணன் அந்த ஒழங்கைக்குள் நுழைகிறான் வாழ்நாளில் முதன் முறையாக ராசனுடன் கைகோர்த்தபடி இளைஞர் சகிதம் ஆக்கிரமிப்பு சின்னமாக அதுக்குள் வளர்ந்து கொண்டிருக்கின்ற அரசமரத்தை துவம்சம் செய்யும் நோக்கில்












Back to top Go down
 
-- Tamil Story ~~ இந்த மரம் பரப்பும் வேர்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
»  ~~ Tamil Story ~~ டி.என்.ஏ
» ~~ Tamil Story ~~ மரு
» == Tamil Story ~~ பு ற ப் பா டு
» ~~ Tamil story ~~ மிருகாதிபத்தியம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: