BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு Button10

 

 உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு Empty
PostSubject: உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு   உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு Icon_minitimeMon Jun 20, 2011 3:01 am

உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு


உலகம் போராடிக்கொண்டே இருக்கிறது. அதாவது உலகில் எங்காவது ஒரு மூளையில் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிற‌து.

ஆனால் எல்லா போராட்டங்களுமே உலகின் கவனத்தை ஈர்ப்பத்தில்லை. சில இருட்டடிப்பு செய்யப்படுகின்ற‌ன. சில மறைக்கப்படுகின்றன. பல அலட்சியப்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றை மீறி ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம், கிளர்ச்சி என மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கொண்டு தான் இருக்கின்றன.

நாளிதழ்களும், செய்தி தளங்களும் இந்த போராட்டங்களை பதிவு செய்து கொண்டு தான் இருக்கின்றன. போர்க்குணம் கொண்டவர்கள் அதாவது போராட்டத்தில் ஆர்வம் உள்ளவர்களும், போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புகிறவர்களும் போராட்ட செய்திகளை தேடிப்பிடித்து படித்தும் வருகின்றனர்.

ஆனால் போராட்ட செய்திகளை எல்லாம் ஒரே இடத்தில் காணவேண்டும் என நினைத்தால் அதற்கான வழி இதுவரை இல்லை. போராட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் தளங்களாக தேடிச்செல்ல வேண்டும்.

இந்த குறையை போக்கும் வகையில் உலகப் போராட்டங்களை ஒரே இடத்தில் தரும் தளமாக வேர்ல்டு அட் புரடஸ்ட் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கிளர்ச்சிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் உலகில் அதற்கேற்ப உலகில் எங்கெல்லாம் போராட்டம் நடக்கின்றனவோ அந்த போராட்ட செய்திகளை தொகுத்தளிக்கிற‌து.

போராட்ட செய்திகளை பலவிதமாக தெரிந்து கொள்ளலாம். முகப்பு பக்கத்தின் மேலேயே சமீபத்திய போராட்ட செய்திகள் செய்தி வரிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. அதன் கீழே உலக வரைபடம் போராட்ட வரைபடமாக விரிகிறது.

வரைபடத்தில் எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் அந்த நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டங்கள் தொடர்பான‌ செய்திகள் வருகின்ற‌ன. போராட்டம் எங்கு தீவிரமாக நடைபெறுகின்றன‌ என்பதை உடனடியாக‌ உணரக்கூடிய வகியில் வரைபடத்தில் நாடுகளுக்கான வண்ணம் அங்கு நடைபெறும் போராட்டங்க‌ளின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் தீட்டப்பட்டுள்ளன.

அதன்படி போராட்டங்கள் நடைபெறும் நாடுகள் சிவப்பு வண்ணத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. போராட்டங்கள் அதிகமாகும் போது சிவப்பின் அடர்த்தியும் கூடுகிறது. வரைபடத்தை சின்னதக்கியும் பெரிதாக்கியும் பார்க்கும் வசதியும் உள்ளது. அதே போல கீழே வந்தால் அங்குள்ல ஸ்லைடர் வசதியை கொண்டு பழைய போராட்டங்க‌ளை திகதி வாரியாக பார்க்கலாம்.

போராட்டத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு இந்த தளம் பேரூதவியாக இருக்கும். ஆய்வு நோக்கிலும் இந்த தளம் பயன்படும். மனித உரிமை ஆர்வலர்கள் அரசுகள் பொய் சொல்கின்றனவா என்று கண்காணிக்கவும் இந்த தளத்தை பய‌ன்ப‌டுத்த‌லாம்.

இப்போதைக்கு போராட்டங்கள் பற்றி நாளிதழ்களிலும் செய்தி தளங்களிலும் வெளியாகும் செய்திகளே இங்கு தொகுத்தளிக்கப்படுகின்றன. இருட்டடிப்பு செய்யப்படும் போராட்டங்கள் பற்றி அறிய வாய்ப்பில்லை.

எனவே போராட்ட விவரங்களை இணையவாசிகள் சம‌ர்பிக்க வாய்ப்பளித்தால் மேலும் சிற‌ப்பாக இருக்கும். அதே போல போராட்டங்கள் தொடர்பான் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பதிவுகள் கூட தொகுத்தளிக்கப்படலாம். எகிப்திலும், அரபு நாடுகளிலும் நடைபெற்ற மக்கள் கிள‌ர்ச்சி டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் தானே உயிர் பெற்றன.


இணையதள முகவரி
Back to top Go down
 
உலகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஹிட்லர்- சில சுவாரசியமான தகவல்களை பகிரலாமா.. GoodPayan
» உலகத்தில் உள்ள தொங்குபாலங்களில் சிறப்பானவை
» "உலகத்தில் நடக்கும் எல்லாம் வேடிக்கை தான்... உனக்கு அது நேரும் வரை"
» இலங்கையை பற்றிய தகவல்கள்
» உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்.

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY-
Jump to: