BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கண்ணாடி மனம்~~® Button10

 

 ~~ கண்ணாடி மனம்~~®

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கண்ணாடி மனம்~~® Empty
PostSubject: ~~ கண்ணாடி மனம்~~®   ~~ கண்ணாடி மனம்~~® Icon_minitimeTue Nov 29, 2011 9:33 am

கண்ணாடி மனம்




* எதையேனும்
மறைத்தல் என்பது
பொய்மையின் இயல்பு!

* பிறர் அறியாமல்
செய்ய விரும்புவது
எப்போதும்
நல்லவையாய் இருப்பதில்லை!

* வெளிப்படையாக
செய்வதற்கில்லை
ஒருபோதும்...
குற்றங்களையும்
துரோகங்களையும்!

* களவாடத்தான்
கண்மறைக்கும் இருளும்
சுயமுகத்தை மறைக்கவே
முகமூடி நிழலும்
தேவையாகிறது இங்கே!

* மறைந்து திரியும் காதலும்
மணம் முடித்த பிறகே
ஊரறிய வலம் வருகிறது!

* ஒளி ஊடுருவும்
கண்ணாடி போல
ரகசியம் அறியாதது
அல்லது
அறிய வேண்டிய
தேவையும் இல்லாதது
உண்மையும், அன்பும்
மன்னித்தலும்!

* ரசம் பூசப்படாத
கண்ணாடியில்
உன் முகத்தை
பார்க்க இயலாதுதான்!

* ஆனால்,
அதற்கான
அவசியமும் இருக்காது...
எதிர்படும்
முகங்களோடு
பரஸ்பரம் பார்வையை
பரிமாற முடியும்
என்பதால்!












Back to top Go down
 
~~ கண்ணாடி மனம்~~®
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~குழந்தை மனம்~~
» அன்பின் கண்ணாடி
» ~~ Tamil Story ~~ கண்ணாடி உலகம்
» *~*மனம்*~*
» தாய் மனம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: