arun. Administrator
Posts : 2039 Points : 6412 Join date : 2010-06-22
| Subject: ~~ மூன்றெழுத்து~~ Fri Dec 02, 2011 4:04 am | |
| மூன்றெழுத்து தி.மு.க., தமாஷ்:
மூன்றெழுத்தின் தலையெழுத்து!
கடந்த, உள்ளாட்சித் தேர்தலின் போது, தி.மு.க., பிரசாரத்தில், "அண்ணா' என்பது மூன்றெழுத்து, "அறிவு' என்பது மூன்றெழுத்து' என்ற கேசட்டை ஒலிபரப்பியதை கேட்டேன். அதையும், கட்சியின் இன்றைய நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.எப்படியெல்லாம் பேசி, வளர்ந்த கட்சி? இன்றோ, "உறவு' என்ற மூன்றெழுத்தில் சிக்கி, "ஆட்சி' என்ற மூன்றெழுத்தில் ஏறி, "ஊழல்' என்ற மூன்றெழுத் தில் விழுந்து, "பணம்' என்ற மூன்றெழுத்தை வாரிக் குவித்தது.பின், "ஜெயில்' என்ற மூன்றெழுத்தில் சிக்கி, "கம்பி' என்ற மூன்றெழுத் தை எண்ணி, "பெயில்' என்ற மூன்றெழுத்துக்காக ஏங்கி, "டில்லி' என்ற மூன்றெழுத்தில் தங்கி, "சோனியா' என்ற மூன்றெழுத்தை சந்தித்து, "கருணை' என்ற மூன்றெழுத்து மனு போடும்படி ஆகிவிட்ட நிலையை எண்ணி, வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.எப்படி இருந்த தி.மு.க., இன்று கடைசியாக, "குஷ்பு' என்ற மூன்றெழுத்தை நம்பவேண்டிய நிலையை கண்டு, தி.மு.க., உறுப்பினராக இல்லாத எனக்கே இவ்வளவு துக்கமென்றால், உண்மையான தி.மு.க.,வினரின் மனநிலை எப்படி இருக்கும்? | |
|