BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inலட்சியம்... Button10

Share
 

 லட்சியம்...

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 37

லட்சியம்... Empty
PostSubject: லட்சியம்...   லட்சியம்... Icon_minitimeSat Feb 25, 2012 7:28 am

உலகம் முழுக்க,தனக்கு தானே பெயர் சூட்டி கொண்ட ஒரே மிருகம் மனிதன் மட்டும்
தான்,சிலர் தங்களை மன்னர்கள் எனவும்,விவசாயிகள் எனவும்,தொழிலாளர்கள் எனவும்
கூறிக்கொண்டார்கள்,
மேலும்,தனக்கென தனித்தனியே ஒரு பெயரும் கொண்டிருந்தார்கள்.
இவர்களிடையே,தன் பெயரே தெரியாத மனிதன் ஒருவன் இருக்கிறான்,
நிஜமாகவே, பெயர் என்றால் என்னவென அவனுக்கு தெரியாது.
நிச்சயமாக ஏதேனும் கோவில் மண்டபத்திலோ,குகை வடிவிலான வீட்டில் தான் பிறந்திருக்க வேண்டும்,
பிறகு பெற்றெடுத்தவர்கள் யார் ?,அவர்கள் எங்கே ?,
யாருக்கு தெரியும் பெயர் கூட தெரியாதவனுக்கு இவையெல்லாம் தெரித்திருக்க வாய்ப்பில்லையே.
அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவன் படுத்துறங்கும் கோவில் குளத்தின் படிக்கட்டுகள்,கூடுதலாக நிச்சல் அடிக்கவும் பழகி இருந்தான்,
அடிக்கடி குளத்தில் தவறி விழும் போதெல்லாம் அவனை காப்பாற்ற தேவைப்பட்டதால்.
இப்படியும் ஒரு மனிதனா என வியந்தால் !,ஆம் நிச்சம் மனிதன் தான்,
ஏனெனில் அவனுக்கும் பசிக்கிறது,மனிதர்களை போல தான் அவனும் உண்கிறான்.
நிறைய சமயங்களில் ,தானே முன்வந்து அவனுக்கு உணவு இடுகிறார்கள்,
ஒரு நாள் யாரும் உணவு தரவில்லை.
அருகிலிருக்கும் கடையில் தன் கையை நீட்டுகிறான் வழக்கம் போல,
வெகு நேரம் ஆயினும் யாரும் அவனை சட்டை செய்யவில்லை,எனில் உணவு கிடைக்காது
என அவன் புரிந்து கொள்வதற்குள் அவன் கைகளை பிடுத்து தள்ளி விடுகிறார்
கடைக்காரர்.
பசிக்கும் நேரத்தில் எதிர்பாரததை பெறுவது இதுவே முதல் தடவை,
என்ன செய்வதென அறியாதவனாய் சற்று தொலைவு நடக்கிறான்.தன் பசியை போக்கியே ஆக வேண்டும், முதல் முறையாக உணவு தேடி செல்கிறான்,
அது அந்த கோவிலின் முன் பக்கம் தான் ஆயினும் இந்த நாள் வரை அங்கே சென்றதே இல்லை.
நல்ல வேலை,அங்கே தானமிட்டு கொண்டிருந்தார்கள்,பெயர் தெரியாத இந்த மனிதனை தவிர தானம் பெற தகுதியானவர் யார்?,
தன் இரு கைகளிலும் தானம் பெறுகிறான்,போதவில்லை மிண்டும் தன் கைகளை
நீட்டுகிறான்.ஒருமுறை,இறுமுறையாயின் சரி மிண்டும் மிண்டும் தானமிடுவதற்கு
அவர்கள் என்ன பரமபிதாக்களா?,
அவன் கைகளை பிடித்து தள்ளி விடுகிறார்கள்.
பரவாயில்லை,பசி அடங்கி விட்டது,தன் பழைய இருக்கையை தேடி அலைபவனிடம்,
"என்ன சாப்பாடு வேணுமா" எனக்கேட்கிறார் ஒருவர்,அவனால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை,
அவன் முக பாவனையை கொண்டு,பிறவி ஊமை எனக்கருதி,சைகை செய்து காண்பிக்கிறார்,
புரிந்தும்,புரியாதது போல தலையாட்டுகிறான்.
"அதோ பாரு ஒரு குதிரைவண்டி போகுதா அதுல தான் சாப்பாடு இருக்கு"என்கிறார் அவர்.
அடுத்த முறை பசிக்கையில் அதை உண்ணலாம் எனும் நோக்கில்,வண்டியை விரட்டி ஓடுகிறான்,
அதன் வேகத்திற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது எனும் உண்மையை உணரும் முன்னரே,அந்த வேகம் அவனை தடுக்கி விழச்செய்கிறது,
முகம் முழுக்க ரத்தக்காயம் ஆயினும் அவன் பார்வையெல்லாம் வண்டியையே
நோக்கியிருந்தது,அது ஒரு நேரான சாலை என்பதால்,அந்த வண்டி நுழையும் வீட்டினை
அவனால் காண முடிகிறது,தூரத்தில் இருந்து பார்கையில் அது விடு போல
தெரிந்தாலும்,அருகில் சென்றதும் அது அரண்மனையாக மாறிப்போனது,
அரண்மனைக்குள் காரணமின்றி யாரும் நுழைய மாட்டார்கள்,ஒருவேளை அவன் முகத்தில் பயம் காட்டியிருந்தால்,
யாரேனும் அவனை சந்தேகிக்கும் வாய்ப்பு உண்டு,தான் செய்யவிருக்கும் பயங்கரம் அறியாதவன் முகத்தில் பயம் எப்படி இருக்கும்.
காவலாளிகள் உடையணிவதை காண்கிறான்,அவன் அணிந்துள்ள உடையோ ஆங்காங்கே கிழிந்து
கிடக்கிறது எனவே காவலாளிகள் உடையை இவனும் அணிகிறான்,அணைவரும் ஆயுதம்
ஏந்துகிறார்கள் ஆகையால் அவனும் ஏந்துகிறான்,இப்படியே சுற்றி
திரிகையில்,அந்தக்குதிரை வண்டி ஏந்தி சென்ற ஜாடிகள் அவன் கண்ணில்
படுகிறது,அதில் முழுக்க தங்கக்காசுகள்,தன் மனம் நிறைய அள்ளிக்கொண்டு,பழைய
இடத்தை தேடி செல்கிறான்,சௌகரியமாக அதில் அமர்ந்தவாறு அக்காசுகளை மென்று
பார்க்கிறான்,கடித்து பார்கிறான்,விழுங்கி பார்கிறான்,முடியவில்லை இதனை
உண்ண முடியாது என முடிவு செய்து அதை தூக்கி எறிவதற்குள் காவலாளிகள் படை
அவனை சுற்றி வளைத்துக்கொண்டது அரசனுடைய பார்வையில் குற்றவாளியாக
நிறுத்தப்படுகிறான்,
மிகுந்த கோபம் கொண்டிருந்த அரசன் இவன் முகத்தை பார்த்ததும்,திட்டமிட்டு
திருடவில்லை என உணர்கிறார்,ஆயினும் தன் கோபம் அடங்கும் பொருட்டு நிறைய
கேள்விகள் எழுப்புகிறார்,
அத்தனை கேள்விகளுக்கும் மௌனமே பதிலாய் இருக்கிறது,அரசன் முன்னிலையில்
அம்மௌனம் அவமறியதையானது.ஆனாலும் அவனுக்கு அவமதிக்கவும் தெரியவில்லை ஆகையாலே
அவன் மனநோயாளி என முடிவு செய்யப்படுகிறது.
மனநலக்காப்பகம் ரம்மியமான சுழல் நிறைந்தது,காற்றோட்டமான அறைகள்,நிறைவான உணவு,நிம்மதியான படுக்கை வசதி.
இத்தனையும் கொண்டவன்,கனவுகளில் ஆழ்கிறான் அக்கனவுகள் மனித இயல்புகளுக்கு
அப்பாற்ப்பட்டது,அக்கனவுகள் லட்சியமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Back to top Go down
View user profile
 
லட்சியம்...
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: