BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inதியாகம்... Button10

Share
 

 தியாகம்...

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 37

தியாகம்... Empty
PostSubject: தியாகம்...   தியாகம்... Icon_minitimeSat Feb 25, 2012 7:38 am

அன்று மாலை மக்கள் வேகமாக பார்க்ல இருந்து வெளியேறிட்டு
இருந்தாங்க. மண்ணோட வாசனை காத்தோட கலந்து பார்க் சுற்றிலும் அடித்தது,
இன்னும் 15 நிமிஷத்ல மழை வர மாதிரி இருக்கு.. பின்னாடி இருந்த
பென்ச்ல ஒரு வயதானவர் அவரோட குட்டிபேரன் சொல்ற கதைய கேட்டுகிட்டே
தினதந்திய புரட்டிக்கிட்டு இருந்தாரு , ஒரு காதல் ஜோடி தங்களோட
எதிர்காலத்த பத்தி பேசிகிட்டே நடந்து போனாங்க , ஸ்கூல் பசங்க
ஊஞ்சலிலும் , சறுக்கு மரதிளையும் ஏறி விளையாடிக்கிட்டு இருந்தாங்க ,
காலேஜ் பசங்க சினிமாவையும் கிரிக்கெட்டையும் பத்தி பேசிகிட்டே
ஷுட்ட்லே கார்க்கும் , வால்லி பாலும் விளையாட்ரங்க ..

இவங்க எல்லாம் ரொம்ப சந்தோஷமா அவங்க வாழ்க்கைய வாழ்ற மாதிரி
தோணுது ஏனென்றால் நா அப்ப சந்தோஷமா இல்ல ... நான் ஒரு மிலிடரில
சோல்ஜரா இருக்கேன் .. இப்போ 15 நாள் லீவுக்கு திருவன்மியுர்ல இருக்க
என்னோட அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கேன் ... போன மாசம் என்னோட
friendu terrorist கூட நடந்த சண்டைல தன்னோட எடது கால இளந்துட்டான்
..

சென்னைக்கு ட்ரைன்ல நானும் அவனும் வந்து இறங்குனபோது அங்க
ரயில்வே ச்டடிஒன்ல ஒருத்தர்கூட அவன தூக்கிட்டு போக ஹெல்ப் பன்னல ..
இவளா நாளா நாம யாருக்காக உயிரகுடுது போரடுநோம்னு எங்க ரெண்டு
பேருக்கும் தோனுச்சு ..

ஒரு மிலிடரி காரனுக்கு தேவையானது ரிட்டயர்ட் ஆன பிறகு பென்சனோ
., ரிசர்வேசனோ இல்ல ஒவ்வொருத்தரும் எதிர்பார்க்கிறது இந்த மக்கள்
நம்மளோட தியாகத்த அங்கீகரிக்கனும்னுதான் .. ஆனா அவங்களுக்கு
மிஞ்சுவதெல்லாம் அலட்சியமும் அவமனமும்தான் ..

இன்னைக்கி காலைல டிவி ல வேர்ல்ட் கப் வின் பண்ணவங்கள மக்கள்
எப்படி சந்தோஷமா வரவேற்றாங்கனு பாத்தேன் எந்த விதத்துல ஒரு மிலிடரி
காரன் கிரிக்கெட் விளயாடரவனையும் , சினிமா ஸ்டாரையும் விட கொறஞ்சு
போய்ட்டோம்?

நாங்க எங்களுக்கு நீங்க சிலை வைக்க சொல்லல .. ஆனா மதவங்குளுக்கு
குடுகின்ற அதே அங்கீகாரத எங்களுக்கும் குடுக்க சொல்லிதான்
கேக்குறோம் .. இந்தியால எத்தன பேருக்கு நம நாட்டோட மிலிடரி தளபதியோட
பெயர் தெரியும்? .. வேர்ல்ட் கப் வின் பண்ணவங்களுக்கு
ஒவ்வொருத்தருக்கும் ஒரு கோடி தரான்களாம் ,

ட்ரைன்ல எந்த ஊருக்கு போனாலும் இலவசமாம் ஆனால் அவுங்க யாருமே
ட்ரெயின்ள்ளலாம் போகவேமட்டாங்க ... ஆன என்னோட friend நாட்டுக்காக
தன்னோட காலையே கொடுத்திருக்கான் அனா அவனுக்கு இந்தியா கொடுக்தது
அவமானம் , அலட்சியம் , பென்சன் என்கிற பேருல மாசம் மாசம் கொஞ்சம் பணம்
..

நாங்க மட்டும் அங்க நாட்டுக்காக போரடலைன்னா இவங்கெல்லாம் மேட்ச்
பாக்கமுடியுமா சினிமா பாக்கமுடியுமா .. எந்த அரசியல்வாதியோ இல்ல
சினிமா ஸ்டாரோ தன்னோட பையனை மில்ட்டிரிக்கு அனுப்புறாங்களா ..
உசுரு குடுக்கிறவன் எல்லாம் ஏழையும் மிடில் க்ளாசும் தான்.

இந்த சுயனலவதிங்களுக்காகவே நாம போராடனும் நினைக்கும்போது ஒரு
மிலிடரி காரனாக என் கண்ணிலும் தண்ணீர் தேங்க தொடங்கியது .. என்
கண்ணில் இருந்து கண்ணீர் கிழே விழுவதற்கும் மழை கொட்ட ஆரம்பித்ததும்
சரியாக இருந்தது ..

இந்த உண்மைகள் எல்லா மிலிட்டரி காரன்களுக்கும் தெரியும் ,
தெரிந்தும் அவர்கள் தங்களுடைய பெற்றோரையும் ,மனைவியையும் ,
குழந்தையையும் பிரிந்து நாட்டுக்காக உயிரை தியாகம் செய்கிறோமேன்றால்
அதற்குக் கரணம் நாம் பிறந்த நாட்டுக்கு தியாகம் செய்வதும் , பெற்ற
தாய்க்கு சேவை செய்ய வேண்டியதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்
.........................................................................................

மழை மேலும் அதிகமானதால் காய்ச்சல் வந்து விட கூடாது என நினைத்து
அருகில் இருந்த கடையில் மழைக்காக ஒதுங்கி நின்றேன்
......................, ஏனென்றால் நாளைக்கு நான் மறுபடியும் மிலிடரி
கேம்புக்கு செல்லவேண்டும் .............
Back to top Go down
View user profile
 
தியாகம்...
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: