BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதிரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... Button10

 

 திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 42

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... Empty
PostSubject: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....   திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... Icon_minitimeFri Mar 01, 2013 2:54 am

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
> வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
> சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
> என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது
> காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு
கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
> சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
> கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
> பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
> சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
> அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
> பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
> கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
> குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
> மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
> கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
> அழுவதும்... அணைப்பதும்...
> கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
> இடைகிள்ளி... நகை சொல்லி...
> அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
> இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
> எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...
> என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?
> கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
> 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
> 4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
> 2 வருடமொருமுறை கணவன் ...
> நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
> இது வரமா ..? சாபமா...?
> அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
> கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
> நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
> நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
> திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
> விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
> தேவை அறிந்து... சேவை புரிந்து...
> உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
> தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
> வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
> இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
> இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
> பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!
> தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
> எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
> இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
> விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
> பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
> நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
> அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
> விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
> பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
> பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!
> வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்
> ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
> உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
> விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...
> கிழித்துவிடு!
> விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
Back to top Go down
 
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
» திரும்பி வந்துவிடு என் கணவா...!
» வா.. நீ.. வந்துவிடு
» மறக்காமல் வந்துவிடு என் ம(ர)ணத்திற்கு..
» கடன் நெருக்கடியிலிருந்து துபாய் வேர்ல்டை காப்பாற்ற புதிய திட்டம்!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: