BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஇதுதான் காதலா? Button10

 

 இதுதான் காதலா?

Go down 
AuthorMessage
vasulav

vasulav


Posts : 117
Points : 332
Join date : 2010-03-13
Age : 40
Location : Singapore

இதுதான் காதலா? Empty
PostSubject: இதுதான் காதலா?   இதுதான் காதலா? Icon_minitimeMon Mar 29, 2010 8:06 am

ஆயிரம் கோடியில் பெண்ணினம் பார்க்கிறேன்
உன் முகம் தெரியுதடி இதுதான் காதலா?
கொலுசொலி கேட்கையில் உன் வரவு அறிகிறேன்
என் ஜீவன் நாடுதடி இதுதான் காதலா?

உன் கூந்தல் பூவொன்று மண்மீது சாய்ந்தாலே
என் கரம் தாங்குதடி இதுதான் காதலா?
நீ பதித்த தடத்தினிலே என் பாதம் வைத்தேனே
என் மேனி சுடுகுதடி இதுதான் காதலா?

'நீயின்றி நானில்லை நீதானே என் ஜீவன்
என் சுவாசம் சொல்கிறதே"
இரவும் தூங்கவே தலையணை சாய்ந்தேனே
நீ தூக்கத்தை பறித்தாயே இதுதான் காதலா?

நிலவுடன் பேசவே தனிமையில் நடந்தேனே
நீ நிழலிலே வந்தாயே இதுதான் காதலா?
தென்றலை காண்கையில் வார்த்தைகள் பேசவே
கவிதையாக மாறியதே இதுதான் காதலா?

நெஞ்சம் வாடினால் உன்நினைவுகள் சேரவே
மனசும் துளிர்த்ததே இதுதான் காதலா?
'வாழ்ந்தாலும் உன்னோடு பிரிந்தாலும் மண்ணோடு
என் ஜீவன் சொல்கிறதே"
Back to top Go down
 
இதுதான் காதலா?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இதுதான் காதலா?
» நட்பா? காதலா?
» நட்பா? காதலா? நட்பா? காதலா?
» நீங்கள் கொண்டுள்ளது காதலா? இனக்கவர்ச்சியா?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: