BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகமல் எஃபெக்ட்! Button10

 

 கமல் எஃபெக்ட்!

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

கமல் எஃபெக்ட்! Empty
PostSubject: கமல் எஃபெக்ட்!   கமல் எஃபெக்ட்! Icon_minitimeMon Mar 29, 2010 3:46 pm

கமல் எஃபெக்ட்! Kamal_10* 1978ல் கமல்ஹாசன் சிகப்பு ரோஜாக்களில் நடித்தார். சைக்கோ கொலைக்காரன் வேடம். ஓராண்டு கழித்து ‘சைக்கோ ராமன்' என்பவர் பிடிபட்டார். தமிழகத்தில் பெண்களை குறிவைத்து நடத்தப்படும் சைக்கோ கொலைகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட பெருமை சைக்கோ ராமனையே சேரும்.

* 1988ல் கமல் வேலையில்லாத இளைஞனாக ‘சத்யா' திரைப்படத்தில் நடித்தார். வேலையில்லாத இளைஞர்களை அரசியல்வாதிகள் தங்கள் சுயநலங்களுக்கு இரையாக்குவதை தோலுரித்துக் காட்டிய படம் அது. 89-90களில் இந்திய இளைஞர்கள் பலரும் அதே பிரச்சினையை சந்தித்தார்கள். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் கூந்தல் விரித்து ஆடியது.

* 1992ல் தேவர்மகன். சாதிமோதல் குறித்த சூடான படம். 93ல் தென்மாவட்டங்களில் படத்தில் சித்தரிக்கப்பட்ட பல காட்சிகள் நிஜமானது.

* 1994ல் மகாநதி. பைனான்ஸ் நிறுவனங்கள் அப்பாவிகளை ஏமாற்றுவது குறித்த கதை. 1996ல் பைனான்ஸ் நிறுவனங்களின் பித்தலாட்டம் வெட்டவெளிச்சமானது.

* இந்து-முஸ்லிம் பிரிவினை மற்றும் வன்முறைகளை அப்பட்டமாக காட்சிகளாக்கிய ஹேராம் 2000ஆம் ஆண்டில் வெளிவந்தது. படத்தில் இடம்பெற்ற காட்சிகள் இரு ஆண்டுகள் கழித்து குஜராத்தில் ‘லைவ்' ஆனது.

* 2003 ஏப்ரல் 14ல் அன்பே சிவம் வெளியானது. ‘சுனாமி வரும்' என்று கமல் வசனம் பேசினார் (வசனம் : மதன்). அச்சொல்லே தமிழர்களுக்கு புதியது. 2004 டிசம்பரில் நிஜமாகவே வந்து தொலைத்தது.

* 2006ல் வேட்டையாடு விளையாடு. இரட்டை சைக்கோ கொலையாளிகள் குறித்த த்ரில்லர். படம் வெளிவந்து மூன்று மாதங்கள் கழித்து நொய்டா இரட்டை கொலையர்கள் மொகிந்தர் மற்றும் சதிஷ் பிடிபட்டார்கள்.

- சுற்றில் வந்த சுவாரஸ்யமான மின்னஞ்சலின் தமிழாக்கம். எப்படியெல்லாம் யோசிக்கிறானுங்கப்பா என்று மலைக்க வைக்கிறது இல்லையா?
Back to top Go down
 
கமல் எஃபெக்ட்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சர்வதேச தரத்துடன் படங்கள் தயாரிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம்: கமல் - ஷாருக்கான் பங்கேற்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS-
Jump to: