BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபாரத நாடு பாரதியார் Button10

 

 பாரத நாடு பாரதியார்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

பாரத நாடு பாரதியார் Empty
PostSubject: பாரத நாடு பாரதியார்   பாரத நாடு பாரதியார் Icon_minitimeThu Apr 01, 2010 1:01 am

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு

சரணங்கள்

ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே,
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே,
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

நன்மையி லேயுடல் வன்மையிலே - செல்வப்
பன்மையி லேமறத் தன்மையிலே,
பொன்மயி லொத்திடு மாதர்தங் கற்பின்
புகழினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

ஆக்கத்தி லேதொழி லூக்கத்திலே - புய
வீக்கத்தி லேயுயர் நோக்கத்திலே,
காக்கத் திறல்கொண்ட மல்லர்தஞ் சேனைக்
கடலினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

வண்மையி லேயுளத் திண்மையிலே - மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே,
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)


ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றற்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபய னீந்திடுங் காலி
யினத்தினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)

தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
யீட்டத்தி லேபயி ரூட்டத்திலே
தேட்டத்தி லேயடங் காத நிதியின்
சிறப்பினி லேயுயர் நாடு - இந்தப் (பாரு)
Back to top Go down
http://wwww.myacn.eu
 
பாரத நாடு பாரதியார்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மனமே பாரதியார்
» YENAKKU PIDITHA BHARATHI KAVITHAIGAL...............
» பாரத ரத்னா விருது பெற்றோர்
» நான் பாரதியார்
» தெளிவு பாரதியார்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: