BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉலகத்தை நோக்கி வினவுதல் பாரதியார் Button10

 

 உலகத்தை நோக்கி வினவுதல் பாரதியார்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

உலகத்தை நோக்கி வினவுதல் பாரதியார் Empty
PostSubject: உலகத்தை நோக்கி வினவுதல் பாரதியார்   உலகத்தை நோக்கி வினவுதல் பாரதியார் Icon_minitimeThu Apr 01, 2010 1:02 am

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? - பலதோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? - உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானலினீரோ? - வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? - இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே யொருநினைவுங் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? - அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை போய்யாமோ?- இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே - நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே யுறுதிகண்டோம், காண்பதல்லா லுறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்திக் காட்சி நித்தியமாம்.
Back to top Go down
http://wwww.myacn.eu
 
உலகத்தை நோக்கி வினவுதல் பாரதியார்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வீடு நோக்கி ஓடிவந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» பாரத நாடு பாரதியார்
» நான் பாரதியார்
» தெளிவு பாரதியார்
» மனமே பாரதியார்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: