BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inமழைக்காலப் பூக்கள் வைரமுத்து Button10

 

 மழைக்காலப் பூக்கள் வைரமுத்து

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

மழைக்காலப் பூக்கள் வைரமுத்து Empty
PostSubject: மழைக்காலப் பூக்கள் வைரமுத்து   மழைக்காலப் பூக்கள் வைரமுத்து Icon_minitimeThu Apr 01, 2010 1:11 pm

அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்

நனைந்து கொண்டே
நடக்கின்றோம்

ஒரு மரம்

அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது

இருந்தும்
அந்த
ஒழுகுங் குடையின்கீழ்
ஒதுங்கினோம்

அந்த மரம்
தான் எழுதிவைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்புக்கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது

இலைகள்
தண்ணீர்க்காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன

சில நீர்த்திவலைகள்
உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப்பாதையில்
ஓடிக்கொண்டிருந்தன

அந்தி மழைக்கு நன்றி

ஈரச்சுவாசம்
நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது.

ஆயினும் - நான்
என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்

நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது.

எவ்வளவோ பேச எண்ணினோம்

ஆனால்
வார்த்தைகள்
ஊலீவலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடவி விட்டிருந்தது

உன்முகப்பூவில்
பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்துளிகள்
பட்டுத்தெறித்தன

உனக்குப்
பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை
எடுத்து நீட்டினேன்

அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்

நான் கேட்டேன்
இந்தக் கைக்குட்டையை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக்கூடாதா?

நீ சிரித்தாய்
அப்போது
மழை
என் இருதயத்துக்குள் பெய்தது.

அது ஒரு
காலம் கண்ணே

கார்க்காலம்.
Back to top Go down
http://wwww.myacn.eu
 
மழைக்காலப் பூக்கள் வைரமுத்து
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தமிழ் கவிதைகள்
» மருந்தாகும் பூக்கள்
» கோடுகளும் சித்திரங்களே வைரமுத்து
» நட்பு வைரமுத்து
» அலைகள் வைரமுத்து

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: