BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபிரகாசமான வாழ்வுக்கு திட்டமிடுவது எப்படி? Button10

 

 பிரகாசமான வாழ்வுக்கு திட்டமிடுவது எப்படி?

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

பிரகாசமான வாழ்வுக்கு திட்டமிடுவது எப்படி? Empty
PostSubject: பிரகாசமான வாழ்வுக்கு திட்டமிடுவது எப்படி?   பிரகாசமான வாழ்வுக்கு திட்டமிடுவது எப்படி? Icon_minitimeSun Apr 04, 2010 1:06 pm

எதிர்காலத்தை பற்றிய கனவு எல்லோருக்குமே இருக்கிறது. அத்தனை கனவுகளையும் நனவாக்கிட அடிப்படையாக ஸ்திரமான வேலை தேவை. இன்றைய நிலையில் வேலைச்சூழல் வேகமாக மாறி வருகிறது. அதற்கேற்ப நாம் திட்டமிட்டால்தான் நிரந்தர வேலையைப் பெற்று நிம்மதியாக வாழ முடியும். வேலை சார்ந்த திட்டமிடுதல் பற்றி இந்த கட்டுரையில் விளக்குகிறார் திருச்சி மண்டல வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குனர் ப.சுரேஷ்குமார்.

எப்படியும் நல்ல பணிவாய்ப்பை பெற வேண்டும் என்றே பலரும் எண்ணுகின்றனர். தொடர்ந்து அனுபவத்தையும், கல்வித் தகுதியையும் பெருக்கிக் கொண்டு பணியையும், சமூக அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணி செயல்படுவது யதார்த்தமே. ஆனால் நன்கு திட்டமிட்டு தங்களது பணிவாய்ப்பை உயர்த்திக் கொள்பவர்கள் வெகு சிலரே.

வேலை (Duty) என்பதற்கும் 'கேரியர்' (Career) என்பதற்கும் வித்தியாசமுண்டு. 'வேலை' என்பது ஒரே மாதிரியாக எப்போதும் பணியாற்றுவது. மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் 'கேரியர்' என்றால், தொடர்ந்து பணிச்சூழலுக்கேற்ப தகுதிப்படுத்திக் கொண்டு தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளுதல் என்று கூறலாம். திட்டமிட்டு செயல்பட்டால்தான் 'வேலை' என்ற நிலையிலிருந்து 'கேரியர்' என்ற அளவிற்கு உயர்த்திக் கொள்ள முடியும்.

திட்டமிடுதல் என்பது குறுகிய கால அளவை கொண்டதாகவும் அமையும். தொலைநோக்குடன் நீண்டகாலத்தை கருத்தில் கொண்டதாகவும் அமையலாம்.

குறுகிய கால கேரியருக்கு திட்டமிடுதல் :

குறுகிய கால திட்டமிடுதல் என்பது யதார்த்தமாக அடையக்கூடிய இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு செயல்படுவதாகும். இது குறிப்பிட்ட கால வரையறைக்கு உட்பட்டது. ஓராண்டுக்குமேல் சில ஆண்டுகள் வரை. அதிகபட்சமாக ஐந்தாண்டுகள் வரை என்று கணக்கில் கொள்ளலாம். கால அளவு என்பது வேலை தேடுபவர் பெற விரும்பும் வேலை, அவரது படிப்பு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

திட்டமிடும்போது பின்பற்ற வேண்டியவை :

இப்போது நீங்கள் மேற்கொள்ளும் பணி உங்களுக்கு மனநிறைவை அளிக்கின்றதா? மனமகிழ்ச்சி அளிக்கின்றதா? எதிர்கால வாழ்வை சீரிய முறையில் அமைத்துக் கொள்ள போதுமானதுதானா? என்று அறிய முயலுங்கள். மாற்றம் தேவை என்றால் அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுங்கள்.

நீங்கள் விரும்புவதையும், விரும்பாதவற்றையும் இனங்கண்டு ஆராயுங்கள். எத்தகைய செயல்பாடுகளை விரும்புகின்றீர்கள்? எத்தகையவற்றை தவிர்க்க விரும்புகின்றீர்கள்? என்று அறிந்து அவற்றை பட்டியலிடுங்கள். இப்போது நீங்கள் ஆற்றும் பணியில் உங்களுக்கு பிடித்த அம்சம் எது? பிடிக்காதது எது? என்று ஒப்பிட்டு பாருங்கள். பிடிக்காத அம்சங்கள் அதிகம் இருந்தால் பணிமாற்றம் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

சிலர் மழை பெய்யும்போது அதில் விரும்பி நடக்க முனைவார்கள். சிலரோ, `அய்யோ மழையில் நனைந்து விட்டோமே!' என்று கருதுவார்கள். விரும்பி நனைவது என்பது இனிமையான அனுபவம் என்று கருதுவது அவரவரின் விருப்பத்தைப் பொறுத்தது. இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் மனம் விரும்பி ஈடுபட்ட அனுபவங்களை தொகுத்தால் அவற்றின் அடிப்படையில் தாங்கள் விரும்பும் பணி வாய்ப்பை இனம் காண முடியும்.

உங்களது திறமை, குறைபாடு ஆகியவற்றை வேலையளிப்பவரின் கண்ணோட்டத்தில் இனம் கண்டுகொள்ளப் பழகுங்கள். உங்களிடமுள்ள சில திறமைகள் வேலை அளிப்பவருக்கு பயன்படாது போகும்போது அவற்றை அவர்கள் முக்கியமாக கருத மாட்டார்கள். வேலைக்கான திறன்கள், தனிமனித குணநலன்கள், கல்வி, பயிற்சி, தொழில் சார்ந்த அறிவு என்று உங்களது திறன் தொகுப்புகளை நீங்களே மதிப்பீடு செய்யுங்கள்.

வெற்றி என்பதற்கு பொதுவான அளவுகோல் என்று ஒன்று இல்லை. பொருள் சேர்ப்பது வெற்றியா? அதிகமான அதிகாரத்தை கையில் வைத்திருப்பது வெற்றியா? பிறரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வெற்றியா? மன அமைதியுடன் செயல்படுவது வெற்றியா? என்று அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

உங்களது ஆளுமைப் பண்புகளை ஆராயுங்கள். கூச்ச சுபாவமுடையவரா? சகஜமாக பழகும் மனோபாவம் கொண்டவரா? என்று உங்களது இயல்பான குணநலன்களை அறிய முயலுங்கள்.

நீங்கள் அடைய வேண்டும் என்று கனவு காணும் வேலை எது என்பது உங்களுக்குத் தெரியும். பள்ளிப்பருவத்தில் கட்டுரை எழுதும்போது அதை வெளிப்படுத்தி இருப்பீர்கள். இப்போதும் அதே வேலைதான் உங்களது கனவா? என்று ஆராயுங்கள். இப்போது வேறு சில பணி சார்ந்த செயல்பாடுகளில் விருப்பம் ஏற்பட்டால் அவற்றை ஆராயுங்கள். எதிர்மறை எண்ணங்களை விலக்கிவிட்டு ஆராயும்போது உங்களது விருப்பம் சார்ந்த பணியை ஓரளவு இனம் காண முடியும்.

இப்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு அடைய வேண்டிய இலக்கு, அடைந்துள்ள நிலை ஆகியவற்றை வரையறுத்துக் கொண்டு அதற்கேற்ப திட்டமிடுங்கள்.

எதிர்காலத்தை திட்டமிடுதலின் பல்வேறு நிலைகள்:

பல்வேறு பணிவாய்ப்புக்களை ஆராய்ந்து எதை தேர்வு செய்வது? என்ற குழப்பம் ஏற்படும். இந்தநேரத்தில்தான் மிகவும் ஆழமாக யோசனை செய்து ஒன்று அல்லது இரண்டு வாய்ப்புக்களை தேர்வு செய்ய வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட வாய்ப்புக்கள் பற்றிய தகவல்களை சேகரியுங்கள். வல்லுனர்களின் ஆலோசனைகளை கேளுங் கள். ஏற்கனவேஅந் தப்பிரிவில் பணியாற்றுபவர்களின் கருத்துக்களை கேளுங்கள். நீங்கள் பெரிதும் விரும்பும் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.

நீங்கள் விரும்பும் பணிவாய்ப்பைப் பெற எத்தகைய கல்வித்தகுதி, பயிற்சி, அனுபவம் தேவை என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள். ஏற்கனவே நீங்கள் பெற்றுள்ள கல்வித் தகுதியையும், பெறவேண்டிய தகுதியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். குறுகிய காலத்தில் தேவையான தகுதியை பெற முடியுமா? என்று ஆராயுங்கள்.

முடியுமென்றால் காலவரையறையை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அதன்படி கல்வித்தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். தேவையான பயிற்சியையும், அனுபவத்தையும் பெற முயற்சி செய்யுங்கள். பொருளாதார சூழலையும் கருத்தில் கொண்டு அதன்படி திட்டமிட்டால் இலக்கை எளிதில் அடையலாம்.
Back to top Go down
 
பிரகாசமான வாழ்வுக்கு திட்டமிடுவது எப்படி?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~இது எப்படி இருக்கு?~~
» ~~ பூமி எப்படி அழியும்?~~
» கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
» ~~ புயல் எப்படி உருவாகிறது?~~
» அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: