BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதயிர் இட்லி Button10

 

 தயிர் இட்லி

Go down 
AuthorMessage
KUTTY_MA

KUTTY_MA


Posts : 40
Points : 105
Join date : 2010-03-14
Age : 36
Location : srilanka

தயிர் இட்லி Empty
PostSubject: தயிர் இட்லி   தயிர் இட்லி Icon_minitimeSun Mar 14, 2010 9:15 am

தயிர் வடையை விரும்பி சாப்பிடுபவர்கள் இனி தயிர் இட்லியையும் சாப்பிடலாம். இது போல வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் யாருக்குத் தான் பிடிக்காது.

என்ன தேவை?

இட்லி மாவு - 2 கப்
புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன்
ஓமப்பொடி - 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிதளவு

அரைக்க:

தேங்காய் துருவல் - 3
பச்சை மிளகாய் - 4
முந்திரிப்பருப்பு - 6

தாளிக்க:

கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

எப்படி செய்வது?

* மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள்.

* அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.

* அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள்.

* பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் தூவி பரிமாறலாம். அல்லது வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம்.

* இந்த இட்லிக்கு உப்பு காரம் தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்
Back to top Go down
 
தயிர் இட்லி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தயிர் உருளை
» கீமா இட்லி .
» ஸ்டஃப்டு இட்லி
» ஜவ்வரிசி இட்லி
» ~~ ஜவ்வரிசி இட்லி ~~

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: