BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதாயுமானவர் (சிறுகதை) Button10

 

 தாயுமானவர் (சிறுகதை)

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

தாயுமானவர் (சிறுகதை) Empty
PostSubject: தாயுமானவர் (சிறுகதை)   தாயுமானவர் (சிறுகதை) Icon_minitimeThu Apr 15, 2010 11:53 pm

தாயுமானவர் (சிறுகதை)


எஸ்றாவிற்கு திருமணமாகி ஓராண்டாகிறது. பிறந்த உடனேயே தன் தாயைப் பறிகொடுத்தவள், தன் அன்புத் தகப்பனாரின் அன்பான அறவனைப்பில் வளர்ந்தவள். தற்போது கருவுற்றிருந்தாள், தன் குழந்தையை வயிற்றில் சுமப்பதும், அது அசையும் போது ஆனந்தம் அடைவதுமாக அதன் முகத்தைக் காண நாட்களை எண்னிக் கொண்டிருந்தாள்.

இப்படி நாட்கள் நகர்ந்த நிலையில், ஒரு நாள் தன்னைப் பெற்றெடுத்த தாயின் நினைவு அவளுக்கு வந்தது. தன் கனவனிடம் சொல்லி தன் தகப்பனாரிடம் தன் தாய் குறித்து அறிந்து கொள்ள தன் கனவனோடு தன் அப்பாவைகான புறப்பட்டாள்.

அப்பா தன் இனிய மகள் கருவுற்றிருப்பதையும், அவள் மகிழ்ச்சியுடன் இருப்பதையும் அறிந்து சொல்லனா மகிழ்ச்சியடைந்தார். நல விசாரிப்புக்குப் பின் நீண்ட நாட்களுக்குப் பின் தன் அப்பாவின் கைகளால் சமைக்கப்பட்ட உணவை அவரது கையால் பரிமாறி சாப்பிட்ட அந்த மதிய வேளை எஸ்றாவை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.


இப்படிப்பட்ட சந்தோசமான வேளையில் தன் தகப்பனாரிடம், தன் தாய் குறித்து அறிந்து கொள்ளும் வேட்கையை தன் தகப்பனாரிடம் வெளிப்படுத்தினாள்.


தன் மகள் முதன் முறையாக தன் தாய் குறித்து விசாரிப்பதை அறிந்த அப்பா மிகவும் அக மகிழ்ந்தார். தன் அன்பு மகளுக்கு தாயில்லா குறை தெரியாமலேயே வளர்த்த வேண்டும் என்று சிறு வயதிலேயே மனைவியை இழந்திருந்தாலும், மறுமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர் அவர்.

புன்முறுவலோடு "மகளே உன் தாய் உனக்காக ஒரு கடிதம் எழுதி வைத்திருக்கிறார். அவர் இறக்கும் முன்பு எழுதிய கடிதம் அது. அந்தக் கடிதத்தை உனக்குக் கொடுக்கிறேன். அதை நீ படித்துப் பார் அது உன் மீது அவருக்கு எத்தனை பிரியம் என்று உனக்கு தெரிவிக்கும்". என்று சொன்னார்.

இதைக்கேட்ட உடனே எஸ்றாவிற்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. "இப்போதே கொடுங்கள் நான் படிக்க ஆவலாக இருக்கிறேன்". என்று சொன்னாள்.

எஸ்றாவின் அப்பா அலமாறியைத் திறந்து தன் அன்புக்குரிய மனைவியின் பைபிளை எடுத்து, அதினுள் வைக்கப்பட்டிருந்த பழைய பழுப்பேறிய ஒரு தாளை வெளியே எடுத்தார். அதை எடுக்கும் போதே அவருடைய கண்கள் பணித்தன. மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் காணப்பட்டார். அந்த வெளியே வந்து தன் அன்பு மகளிடம் அந்த கடிதத்தை நீட்டினார்.

தன் தாய் எனக்கு என்ன சொல்லியிருப்பார் என்று அறிந்து கொள்ளவும், தன் வாழ் நாளில் முதன் முறையாக தன் தாயோடு பேசுவதை அறிந்தும், மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் காண்ப்பட்டாள்.

பின்பு தன் கனவரோடு இனைந்து அந்தக் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள். எஸ்றாவிற்கு அவளது தாய் எழுதிய கடிதம்:

என் அன்பு குழந்தை, உன் அம்மா ஸ்வீட்டி எழுதும் கடிதம். நீ ஆணோ பெண்னோ எனக்குத் தெரியாது, உன் முகம் பார்க்க ஆவலாகக் காத்திருந்தேன். ஆனால் மருத்துவர்கள் நம் இருவரில் ஒருவர்தான் உயிர் வாழ முடியும் என்று சொல்லிவிட்டார்கள். நீ வாழ என்னை மாய்த்துக் கொள்ளத் தயாராகிவிட்டேன். உனக்காக நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன். ஆம் அந்தப் பெயர் எஸ்றா, இன்னும் சில நாட்கள் தான் என் வயிற்றிலிருந்து உன்னை எடுப்பார்கள். ஆனால் உன்னை நான் பார்ர்க முடியாது என்று எண்னி கொஞ்சம் வருத்தமடைகிறேன். ஆனாலும் நான் உன்னை மறந்தாலும் என் நேசர் உன்னை மறப்பதில்லை என்று சொல்லியிருக்கிறார்(ஏசாயா 49:15). நான் இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சொல்லுகிறேன். என்னால் உனக்காக உயிரை மாத்திரமே கொடுக்க முடிந்தது. ஆனால் அவரோ உனக்காக தன் ஜீவனையும், இரத்தத்தையும் கொடுத்திருக்கிறார். நீ இனி பிறந்து செய்யப் போகிற பாவங்களுக்காக அவர் தண்டனையை அனுபவித்து விட்டார். அவரது பொறுப்பில் உன்னை விட்டுவிட்டுச் செல்கிறேன்.

என்னை விடவும் அவர் உன்னை நேசிக்கிறார். உனக்காக அவர் பரலோக இராஜ்ஜியத்தில் ஸ்தலத்தை உண்டாக்கி வைத்து வைத்திருக்கிறார். அவர் உன்னைக் காத்துக்கொள்வார். நான் அவருடனே கூட பரலோகத்தில் வசிக்கச் செல்லவிருக்கிறேன். அதை நினைத்து நான் அகமகிழ்கிறேன்.

நீ தாயாகவோ அல்லது தகப்பனாகவோ ஆக ஆயத்தப்படும் போது இந்தக் கடிதத்தை உனக்குத் தரச்சொல்லி உன் அப்பாவிற்குக் கட்டளை கொடுத்திருக்கிறேன். இதை வாசிக்கும் நீ தாயாக, அல்லது தகப்பனாக, இருக்கிறாய். அதற்காக உன்னை வாழ்த்துகிறேன்.

நீ பிறந்த நாள் முதல் இந்நாள் வரை உனக்கு கொடுக்கப்பட்டவைகள் யாவும் இயேசு கிறிஸ்துவினாலேயே உனக்குக் கொடுக்கப்பட்டது. அதற்காக அவருக்கு நன்றி செலுத்து. ஒருவேளை இன்று வரை அவரிடம் நீ திரும்பாமல் இருப்பாயானால் இன்றே மனம் திரும்பு.

இந்த உலகத் தாயும் தகப்பனும், மற்ற உறவுகளும் நீ நன்றாக இருந்தால் தான் உன்னை நேசிப்பார்கள். ஆனால் அவரோ "நீ எந்த நிலையில் இருந்தாலும் நேசிப்பேன்" என்று சொல்லியிருக்கிறார். உன் வாழ்வில் எத்தனை கடினமான சூழ்நிலை வந்தாலும் அவரே உனக்கு அடைக்கலமாக இருந்தால், அவர் உன்னை இக்கட்டுக்கு விலக்கிக்காப்பார்.

அவரே உனக்கு நிரந்தரமான உறவு அவரே உனக்கு தாயுமானவர்.

இப்படிக்கு
உன் முகம் கான முடியாமல் போன உன் அம்மா
ஸ்வீட்டி


இதைப் படித்து முடித்ததும், தாயின் அன்பை கருவுற்றிருக்கும் என்னால் உணர முடிகிறது. இந்த அன்பை விடவும் மேலான அன்பு இயேசுவின் அன்பா என்று வியந்தாள். அன்றுவரை இயேசு கிற்ஸ்துவின் இரட்சிப்பை உதாசீனமாய் நினைத்துக் கொண்டிருந்த எஸ்றா முதன் முறையாக இரட்சிப்பின் அனுபவத்தை உணர்ந்தாள்.


அந்த கண நேரத்தில் அவள் தன் வாழ்வை ஒப்புக்கொடுத்தாள், அப்போது பரிசுத்த ஆவியானவர் எஸ்றாவை அளவில்லாமல் நிறப்பினார். அதனால் அவள் வயிற்றில் வளர்ந்த கரு மகிழ்ச்சியால் துள்ளிற்று.

"சரி நேரம் ஆகிவிட்டது நாம் கிளம்பலாம்". என்று கனவன் சொல்ல, அப்போது எஸ்றாவின் அப்பா, "நாளை பெரிய வெள்ளி, ஈஸ்டர் வரை இங்கேயே இருந்துவிட்டுச் செல்லுங்கள்" என்று சொன்னார். அவர்களும் சம்மதித்தனர்.


தன் வாழ் நாளில் முதல் முறையாக புனித வெள்ளியை உணர்வுப் பூர்வமாக அறிந்து கொண்டாள் எஸ்றா.


சில மாதங்களிலேயே எஸ்றா ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றாள், அதற்கு தன் தாயின் பெயரான ஸ்வீட்டி என்று வைத்தார்கள்.



study study study study study study study study santa santa santa santa santa santa study study study study study study
Back to top Go down
http://wwww.myacn.eu
 
தாயுமானவர் (சிறுகதை)
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சிறுகதை ~~ 5E
» சிறுகதை
» இது கதை அல்ல ~~ சிறுகதை
» லுங்கி ~~ சிறுகதை
»  சிறுகதை ~~ முரண் நகை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: