BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகளை கட்டும் கணவன் – மனைவி கலாட்டா Button10

 

 களை கட்டும் கணவன் – மனைவி கலாட்டா

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

களை கட்டும் கணவன் – மனைவி கலாட்டா Empty
PostSubject: களை கட்டும் கணவன் – மனைவி கலாட்டா   களை கட்டும் கணவன் – மனைவி கலாட்டா Icon_minitimeWed May 05, 2010 4:21 pm

கணவனும், மனைவியும் இப்படி இருந்தா வீட்டுல களை கட்டும்தானே!!

வாரத்தில் இரண்டு நாட்கள் நாங்கள் ஹோட்டலுக்குச் செல்கிறோம் - நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிட.

ஆமாம், நான் ஒரு ஹோட்டலுக்கும், அவள் ஒரு ஹோட்டலுக்கும்!

*****

நாங்கள் தனி மெத்தையில் படுக்கிறோம். நான் படுக்கை அறையில்; அவள் ஹாலில்.

*****

நான் அவளைப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். ஆனால் என்ன செய்ய?! அவள்தான் திரும்பி வந்து வந்துவிடுகிறாளே!

*****

நான் என் மனைவியிடம் கேட்டேன். "உன்னை நம் கல்யாண நாளுக்கு எங்கே அழைத்துப் போக வேண்டும்?“

அவள் சொன்னாள். "இது வரை போகாத இடத்துக்கு"

அதனால் அவளை சமையலறைக்கு போகச் சொல்லிவிட்டேன்!

*****

நான் எப்போதும் அவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பேன்.

இல்லாவிட்டால், கடைக்குள் நுழைந்துவிடுவாள் - ஏதாவது வாங்குவதற்காக!

*****

எங்கள் வீட்டில் அவள் உபயோகத்திற்கு எலெக்ட்ரிக் குக்கர், எலெக்ட்ரிக் மிக்சி, கிரைண்டர் எல்லாம் இருக்கிறது. "வீட்டில் எல்லாம் 'ஒரே சாமானாக' இருக்கிறது; உட்காரவே இடமில்லை" என்று அவள் குறைபட்டுக் கொண்டாள்.

அதனால் அவள் பிறந்த நாளுக்கு 'எலெக்ட்ரிக் நாற்காலி' வாங்கலாம் என்றிருக்கிறேன்.

*****

என்னுடைய மனைவி தனது கார் சரியாக ஓடவில்லை. கார்பரேட்டரில் தண்ணீர் புகுந்து விட்டது என்றாள். போய்ப் பார்த்தேன்.

ஆம்.. கார் ஏரிக்குள் மிதந்து கொண்டிருந்தது!

*****

குப்பை லாரி கிளம்பிவிட்டது அப்போதுதான் என் மனைவி வேகமாகச் சென்றாள், குப்பையைக் கொட்ட. அந்த டிரைவரிடம் " நான் ரொம்ப லேட்டா? என்று கேட்டாள்.

அவர் சொன்னார். "பரவாயில்லை, உள்ளே குதித்து விடுங்கள்."

*****

"உன்னுடைய ஐம்பதாவது கல்யாண நாளை எப்படிக் கொண்டாடப் போகிறாய்?" என்று நண்பர்கள் கேட்டார்கள்.

இருபத்தைந்தாவது கல்யாண நாளன்று கல்கத்தாவிற்குச் சென்றோம். இப்போது வேண்டுமானால் அவளை அங்கிருந்து அழைத்து வரலா
ம்" என்றேன்.
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

களை கட்டும் கணவன் – மனைவி கலாட்டா Empty
PostSubject: பெண்களும் கம்ப்யூட்டர்களும்!   களை கட்டும் கணவன் – மனைவி கலாட்டா Icon_minitimeWed May 05, 2010 4:22 pm


பெண்களை கம்ப்யூட்டர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யாரோ கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு இணையத்தில் பறக்கவிட, அது நம் கண்ணில் மாட்டியதும் 'யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற' மொழியாக்கம் செய்துவிட்டோம்... . இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே. பெண்கள் ஆண்களை விட அனேக விஷயங்களில் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பது வேறு விஷயம்!

1)இரண்டுமே அதிகம் செலவு பிடிக்கிற சமாச்சாரங்கள், எதிர்பார்த்ததை விட.

2)கம்ப்யூட்டரும் சரி, பெண்ணும் சரி.. நீங்கள் நினைப்பது போல் நடப்பதில்லை.

3)கொஞ்சம் பழகிய பிறகு, “சரி! போ” என்று விட்டு விட முடியாது.

4)ரொம்பப் பழகிய பிறகு, ஒன்று போதாதோ என்று உங்களை சிந்திக்க வைப்பதில்தான் எத்தனை ஒற்றுமை!

5)சில கம்ப்யூட்டர்கள் சில பெண்களைப் போல நிறைய பேருக்கு சேவை செய்யும்.

6)சரியாக அணுகத் தெரிந்தால், உங்கள் விரல்களாலே அற்புதங்கள் நிகழ்த்தலாம், இரண்டிலும்.

7)ஒரு பதினைந்து நிமிடங்கள் நீங்கள் ‘கண்டு கொள்ளவில்லை’ என்றால் இருவருமே ‘OFF’ ஆகி விடுவார்கள்.

Coolதிடீரென்று தடங்கல் ஏற்பட்டால், முந்தைய நிலைக்கு மறுபடி மீள்வது ரொம்பக் கடினம்.

9)நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரிதான் எல்லாம் நடக்கப்போகிறது என்று நீங்கள் உறுதியாக நம்பும்போது இருவருமே ‘ரூட்’ மாறி
விடுவார்கள்.

10)எப்பவுமே எதிர்பாராத முடிவுகளைத் தருவார்கள் என்று மட்டும் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

11)அடுத்தவன் கம்ப்யூட்டரைப் பார்க்கும் போது ‘அடடா! நமக்கு அது போல இல்லையே!’ என்று தோன்றும். அடுத்தவன் மனைவியைப் பார்க்கும் போதும் டிட்டோ.

12)எவ்வளவுதான் மேம்படுத்தினாலும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கே போய்
விடுவார்கள்.
Back to top Go down
 
களை கட்டும் கணவன் – மனைவி கலாட்டா
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க ...
» எஸ்.எம்.எஸ்.கலாட்டா
» ஆகாயத்தில் தொட்டில் கட்டும்......
» ஐ.பி.எல் கலாட்டா முழுவதும் கற்பனையே...
» கணவன் வீட்டில் வாழப்போற பொண்ணே!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: JOKES & FUNNY VIDEO CLIPS :: Jokes-
Jump to: