BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் Button10

 

 கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் Empty
PostSubject: கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல்   கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் Icon_minitimeThu May 20, 2010 3:17 pm

கல்லா? கதையா..? கற்பனையா...? தேட வேண்டும் என்ற இயற்கை உந்துதலைத் தூண்டியவர் நாச்சியார் கோயில் கருடர். கல்லால் வடிவு பெற்றவர். இவரிடம் என்ன விசேடம்?

திருவிழா நாட்களில் உற்சவராக வெளியே அழைத்து வரும்போது, கோயிலுக்கு வெளியே தூரம் அதிகரிக்க அதிகரிக்க எடை கூடி விடுகிறார். அதாவது முதலில் நான்கு பேரால் தூக்க முடிந்தால் பின்பு 8, 16, 32 என்று அவரைத் தூக்கத் தேவையான ஆட்களின் பலம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

அறிவியல் அடிப்படையில் இது சாத்தியமா என்று தேட ஆரம்பித்த போது, பகுத்தறிவும் படித்துத் தேடுதலும் பல இருட்டு மூலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டின.

கருடருக்கு உயிருண்டா? அது நிரந்தரமா அல்லது பண்டிகை போன்ற விசேட நாட்களில் மட்டும் வந்து போய் விடுமா? கீழ் நோக்கியே தாக்கும் இயல்புடைய புவி ஈர்ப்பு விசை, கோயிலுக்குள் மட்டும் மேல் நோக்கித் தூக்குகிறதா? கல் விசேடத் தன்மையுடையதா அல்லது இதுவெல்லாம் ஆன்மீகர்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருக்கும் கதையா என்றெல்லாம் யோசித்துக் குழம்பிப் பின் ஒரு கட்டத்தில் அது மறந்தே போய்விட்டது.

ஒரு நாள் காலையில், செய்தித்தாளில் உச்ச நீதி மன்ற உத்திரவு ஒன்றைப் படிக்க நேர்ந்த போது கல் புராண நினைவுகள் மீண்டும் கிளர்ந்தெழுந்தன. மலைகளில் உள்ள பாறைகளில் வண்ணம் பூசி விளம்பரம் செய்வதைத் தடை செய்திருந்தார்கள் நீதியரசர்கள். காரணம், அவ்வாறு பூசப்படும் வண்ணக் கலவை, பாறைகளினூடே இருக்கும் நுண்துளைகளை அடைத்து விடுவதால்-பாறைத்துகள்களிடையே இருக்க வேண்டிய கட்டிப்பிடிச் சக்தியை வலுவிழக்கச் செய்து, காலப்போக்கில் பாறையைத் தானாகவே மூச்சுத்திணறி நொறுங்கி இறக்க வைத்து விடுமென்ற அறிவியல் வாதத்தை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்திருந்தார்கள்.

வண்ணக் கலவைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? வண்ணக் கலவை இரு துகள்களை இணைத்துப் பிடித்து, இயற்கையாகவே உள்ள கட்டிப் பிடிச் சக்தியோடு கூடி இறுக்கத்தை மேலும் வலுவாக்க வேண்டுமல்லவா? அல்லது, நுண்துளைகளில் நுழைந்து வரும் காற்று, நுண்துளைகளைப் பருக்கச் செய்து, கட்டிப்பிடிச் சக்தியை பலவீனப்படுத்த வேண்டுமல்லவா? இவை இரண்டுமல்லாமல் மாறி நடப்பது கல்லுக்கும் உயிருண்டு என்று காட்டுவது போல உள்ளதே?

மதன் தன்னுடைய "வந்தார்கள் வென்றார்கள்" என்ற கட்டுரைத் தொடரில் ஒரு சிந்திக்கத் தூண்டும் சரித்திர நிகழ்ச்சியை விவரிக்கிறார். அது அவருடைய வர்ணனையிலேயே………

"டிசம்பர் 1025. ஒவ்வொரு நாளும் இருமுறை கடலிலிருந்து ஒரு பெரும் அலை கிளம்பி, முன்னேறி சற்றே தொலைவிலிருக்கும் ஆலயப் படிக்கட்டுகளைத் தொட்டுத் திரும்பும். லட்சக்கணக்கானோர் தினம் வழிபடும் சோமநாதர் ஆலயம். கர்ப்பக்கிரகத்தில் மிதக்கும் சிவலிங்கம் அமைந்த அற்புதம்.

…………… கர்ப்பக்கிரகத்தில் ஒளி வீசிக்கொண்டு அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த லிங்கத்தைப் பார்த்துப் பிரமித்துப் போனான் கஜனி. பின் ஆச்சரியத்துடன் பக்கத்திலிருந்த வீரனின் ஈட்டியை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். ஈட்டியை லிங்கத்தைச் சுற்றி நாலாபுரமும் சழற்றிப் பார்த்தான். கஜனியின் கண்களிலுள்ள வியப்பு மெல்ல அகன்று வெறி புகுந்தது.

"பலே..! சாமர்த்தியமாகத்தான் அமைத்திருக்கிறார்கள்..! மேலே கூரையிலும் பக்கவாட்டிலும் உள்ள அந்தக் கற்களை அகற்றித் தள்ளுங்கள்... இது ஏதோ காந்த சக்தியின் வேலை..!" என்று கஜனி ஆணையிட, வீரர்கள் உடனே செயல் பட்டனர். சுற்றிலும் கற்கள் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டன. லிங்கம் மெள்ள அசைந்தது. பிறகு கீழே இறங்கி இறங்கி.. ‘தொப்’பென்று வீழ்ந்தது.

இந்த நிகழ்ச்சி நடந்தது உண்மைதான் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி கூற வருவது என்ன.. என்பதைப் பிறகு விவாதிப்போம். இப்போது இதன் தொடர்ச்சியாக இதுபோன்ற வேறொரு செவி வழிக் கதையைப் பார்ப்போம்..

இது இலண்டனுக்கு அருகிலுள்ள ரோல் ரைட் (ROLL RIGHT) கல் சின்னங்கள் பற்றியது. வரையறுக்க முடியாத காலத்தில் இனமறியப்படாதவர்களால் நிறுவப்பட்டதாகக் கருதப்படுபவை இவை.. முன்னொரு காலத்தில் பாலங்கட்ட உதவும் என்று இச்சின்னங்களின் கற்களைத் தனித்தனியாகப் பெயர்த்தெடுத்து, வெகுதூரம் எடுத்துச் சென்று நட்டு வைத்தார்கள். ஏகமாகக் கனத்த ஒவ்வொரு கல்லையும் யானைகள் மற்றும் குதிரைகளின்மூலம் கட்டி இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.

மாலைப் பொழுதில் நிமிர்த்தி நட்டு வைக்கப்படும் ஒவ்வொரு கல்லும் காலையில் தரையில் விழுந்து கிடக்கும். ஒவ்வொரு முறை நிமிர்த்தி வைக்கும் போதும் இதே நிகழ்ச்சி தொடர்ந்தது. வெறுத்துப் போனவர்கள் ’இது பேயோ பிசாசோ’ என்று மிரண்டு போய், கற்களை எடுத்த இடத்திலேயே வைத்துவிட முடிவு செய்து, அந்த திசை நோக்கி நகர்த்த ஆரம்பித்தார்கள். என்ன ஆச்சரியம்? பத்து நபர்களைக் கொண்டு நகர்த்தி வந்த அந்தக் கல்லை இப்போது ஒருவராலேயே திரும்ப வைக்க முடிந்தது.

கல் கருடரின் கதையை ஒத்திருக்கும் இக்கதையைப் பதிவு செய்திருப்பவர் ஒன்றும் சாதாரண ஆளல்ல. Signs of Gods? ,Chariots of the Gods? ,Return to the stars,The gold of the Gods, In search of the Gods, Miracle of the Gods, According to the Evidence போன்ற வரலாற்று ஆராய்ச்சிக் குவியல்களைப் படைத்த சுவிஸ் நாட்டு எழுத்தாளர் எரிக்வான் டானிக்கன் என்பவர்தான் இந்தப் படைப்பின் ரகசியத்தையும் வெளிக்கொணர்ந்து உள்ளார்.
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் Empty
PostSubject: Re: கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல்   கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் Icon_minitimeThu May 20, 2010 3:19 pm

வெளிக்கிரக மனிதர்களே பிற்காலத்தில் நம்மவர்களால் கடவுளர்களாக வர்ணம் பூசப்பட்டார்கள் என்ற கருத்தை எரிக்வான் தன்னுடைய Path ways to the Gods என்ற புத்தகத்தில் முன்வைத்துள்ளார்.

சாதாரண கல்லுக்குள்ளும் மறைந்திருக்கும் ஒரு அனுமாஷ்ய சக்தியைப் பற்றிப் புராதன மற்றும் நடப்பு உதாரணங்களுடன் விவாதிக்கிறார் எரிக்வான். முதலாவதாக பைபிள். கல்லைத் தலையணையாகக் கொண்டு உறங்கிய ஜேகோபு, கல் மூலம் ஆண்டவர் தமக்குச் செய்தியளித்ததாகக் கூறுகிறார்.(Genesis 28.12. et seq). அந்தக் கல்லைத் தூண் போல நட்டு எண்ணையிட்டு வழிபட்டதாக விவிலியம் கூறுகிறது (Genesis 28.16 et seq)

“நம்புங்கள்.. இக்கல்லே நமக்கு எதிராகச் சாட்சி சொல்லும். நம் தவறுகளை ஆண்டவரிடம் எடுத்துக் காட்டும். Be hold, this stone shall be a witness against us - for it has heard all. The words of the Lord which he spoke to us, therefore it shall be a witness against you (Jesua 24,26 et seq)” என்று
உரத்துக் கூறுகிறார் ஜேகோபு.

இரண்டு, மூன்றாவதாகக் கிரேக்கப் புராணக் கதைகள்.

சைபெல்(CYBELLE) என்கிற பூமித்தாய், தன்னுடைய கிரேக்கக் குழந்தைகளுக்கு, பேசும் கற்களின் மூலம் எதிர்காலத்தைக் கணித்துச் சொன்னதாகவும், அதை சிரியன் கடற்கரையிலிருந்த சக தேவதை LAO DICAEA அதே போன்று அமைப்புள்ள வேறொரு கல் மூலம் கேட்டு சிரியர்களுக்குச் சொன்னதாக ஒரு கதை உண்டு.

டெல்பி நகரில் PYTHIA என்ற பெண், முட்டை வடிவக் கல்லை முகர்ந்து பார்த்து, நடந்தது மற்றும் நடக்கப் போகும் எதிர்கால நிகழ்ச்சிகளைச் சொல்லி வந்ததாக இன்னொரு கதை உண்டு.
இதுவல்லாமல், MOHAMMED-IBN-AL-CHATIB தன்னுடைய BOOK OF IDOLS என்ற பதிவுப் புத்தகத்தில் தெரிவித்திருந்த அதிசயக் கற்களைப் பற்றியும் எரிக்வான் எழுதுகிறார்.

ஆண்டவனால் மனிதனுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட காஃபா என்றும், HAJAR-AL-ASWARD என்றும் தொழப்படும் மெக்காவில் உள்ள கறுப்புக் கல்லின் தென் கிழக்குச் சுவற்றிலுள்ள மூலையில் 1-1\2 மீட்டர் உயரத்தில் இந்தக் கற்கள் புதைக்கப்பட்டுள்ளன.

தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையேனும் காஃபாவைத் தொட்டுத் தொழவேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லீமின் லட்சியமாகும். இந்த லட்சியம் காலம்காலமாக உள்ள ஒரு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

தொடப்படும் காஃபா, தொடுபவருடைய உணர்வுகளை ஆண்டவரிடம் எடுத்துச்சென்று பதிவு செய்துவிட்டு, ஆண்டவருடைய ஆசிகளைத் தொடுபவர்க்கு எடுத்து வந்து கொடுப்பதாக நம்பிக்கை.

மேற்கூறிய கதைகளும் நம்பிக்கைகளும் தெரிவிக்க முயல்வது என்ன?

கல் பேசுமா? கல் கேட்குமா..? அப்படியென்றால் கல்லுக்கு உயிருண்டா? என்பது போன்ற வினாக்களுடன் எரிக்வான் ஆராய்ச்சியைத் தொடர்ந்த இடம், தென் பசிபிக் தீவுகளில் உள்ள கிரிபால்டி தீவு.

50,000 மக்கள் தொகையுடன் வாழ்ந்த பழங்கதையை மறந்து புகை நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கும இத்தீவின் பல பழங்கால அதிசயங்களில் ஒன்று -“மரணவெளி” என்று உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படும், 14 மீட்டர் விட்டமுள்ள வெட்ட வெளியாகும்.

இந்த இடம் சுற்றிலும் பசுமையான தாவரங்களால் சூழப்பட்டிருந்தாலும், இந்த இடத்துக்குள் மட்டும் எந்தத் தாவரமும் உயிர் தழைக்க முடியவில்லை. இதை நோக்கி இடுப்பை வளைத்து வளரப் பார்த்த மரங்களும் ,பேயைக் கண்ட மனிதனைப் போல, முதுகை வளைத்துக் கொண்டு எதிர்த்திசை முகம் பார்க்க அத்திசை நோக்கியே கரம் நீட்டிக் கொண்டிருந்தன.

உள்ளூர்ப் பெரியவர்கள் “இது ஆவிகளின் வேலை” என்றார்கள். வட்டத்தினுள் 5.1 மீட்டர் பக்க நீளமுள்ள சதுரத்தின் மூலைகளில் மற்றும் பக்கங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், 2.6 மீட்டர் உயரமும் 1.44 மீட்டர் அகலமுமுள்ள கல் சின்னங்களின் அமைப்பு, ஆவிகளின் பேச்சு மேடை என்றார்கள்.

வட்டத்தினுள் நுழைந்து பேச்சுக்கு இடையூறு செய்து அடிபட்டு இறந்தவர்களின் கணக்குச் சொன்னார்கள். ஒட்டுக் கேட்பது போல மேலே பறந்து இறந்து விழுந்த பறவைகளின் எண்ணிக்கையைச் சொல்லி மாய்ந்தார்கள். எரிக்வான் தன்னுடைய தேடுதலைத் தொடர்கிறார்.

அவர் தன்னுடைய ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட அனுமானங்களை அடுத்த வாரம் காணலாம்.
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் Empty
PostSubject: Re: கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல்   கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் Icon_minitimeThu May 20, 2010 3:21 pm

எரிக்வான் தன்னுடைய ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட அனுமானங்கள்...

1. நாம் நம்முடைய அறிவியலை - நீளம், அகலம், உயரம், நேரம் என்ற கட்டங்களுக்குள் சட்டமிட்டுப் படித்தாலும், வரையறுக்க முடியாத நேரம்(INFINITE TIME) என்ற அளவையைக் கைக்கொள்ளாததால் கடவுளைப் படைத்த கடவுள் யார் என்ற கேள்விக்கு இன்னமும் விடை காண முடியாதவர்களாகவே இருக்கிறோம்.

2. மனமும், சடமும் (MATTER) பிரிக்க இயலாதவாறு பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளன என்று ஃபிரான்சு விஞ்ஞானி சாரோன் (JEAN E.CHARON) அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

3. நீரில் மிதந்து கொண்டிருக்கும் நீர்க்குமிழிபோல அண்டத்திலுள்ள கருங்குழி( BLACK HOLE) தன்னை நோக்கிவரும் அனைத்துத் தகவல்களையும் ஈர்த்துக் கொண்டு வெளிவிடாமல் தேக்கி வைத்துக்கொள்கிறது. இதனுள் நேரம், அண்டத்தின் நேரத்திற்கு எதிராகவும் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் மீண்டும் முதலிலிருந்தே ஆரம்பிக்கும் சுழற்சித் தன்மை வாய்ந்ததாகவும் இயங்குகிறது. இது கவர்ந்திழுத்துக் கண்ட அனைத்துத் தகவல்களும்(INFORMATIONS) அழிவில்லாமல் யுக யுகங்களாகக் காக்கப்பட்டுவருகின்றன.

4. உலகில் முதலில் தோன்றியது ஹைடிரஜன் அல்ல. மின் அணுவேயாகும். அனாதியான இதுவே மனத்திலும் சடத்திலும் ஊடுறுவி நிலை பெற்ற ஒன்று. நிமிடத்திற்கு 10 (23) மடங்கு சுருங்கி விரியும் எல்லா மின்னணுக்களுமே கருங்குழியின் குணாதிசயங்களை அச்செடுத்தவை. தன்னருகில் வரும் தகவல்களை ஈர்த்துத் தன்னுள்ளே அடக்கிக்கொள்பவை. அதாவது, அனாதி காலம் தொட்டுத் தற்போதைய நிமிடம்வரையிலுள்ள தகவல்களைத் தன்னுள்ளே அல்லது தங்களுக்குள்ளேயே அழிவில்லாமல் அடக்கிக் கொண்டிருப்பவை.

5. எங்கும் நிறைந்திருக்கும் மின்னணுக்கள் அண்டத்தில் நடந்த, நடக்கப்போகின்ற அனைத்துத் தகவல்களையும், மனித மூளைக்கு ஒரு இணைப்பின்மூலம் தெரிவித்தபடியே உள்ளன.

6. ஏதேனும் ஒரு மனித மூளையில், ஏதேனும் ஒரு மின்னணு.. ஏதேனும் ஒரு காரணத்தால் சூடாகி விரிவடைந்து உள்ளேயுள்ள தகவல்களைச் சிந்தும்போது அம்மனிதன் அபாரமான சக்தி பெற்றவனாகிறான். கடந்த காலத்தைப் பிசிறில்லாமல் பார்க்கிறான். ஐன்ஸ்டீன் போல இயற்கை மறைத்து வைத்திருக்கும் ரகசியங்களைப் பக்கத்திலிருந்து பார்ப்பது போல அறிந்து கொள்கின்றான்.

7. மனிதர்கள் மற்றும் கல், மரங்கள் ஆகிய அனைத்தும் இந்த மின்னணுக்களைச் சுமந்து செல்லும் மூட்டை தூக்கிகளாகவே உள்ளன. மாக்ஸ் பிளாங்க் அறிந்து சொன்னது போல, பார்க்க(மட்டும்) முடியாத ஒரு மகாசக்தியே நம்முடைய ஒவ்வொரு செயலையும் தீர்மானிக்கிறது.

டேனிக்கன் தன்னுடைய செயல்முறை ஆய்வைத் தொடர்கிறார்.

1. கல் சின்னங்கள் உருவாக்கப் பயன்பட்ட கற்கள் சிறப்புத் தன்மை வாய்ந்தவை. தண்ணீர்பட்டதும் நீல நிறமாகி விடும்.

2. 2800 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த மாதிரியான அமைப்புகள் இங்கிலாந்து, ஸ்காடலாந்து, அயர்லாந்து பகுதிகளில் மட்டும் 900 உள்ளன. இந்தியாவில் பிரம்மபுத்திரா நதிக்கரையிலும் இவை போன்றவை அமைந்துள்ளன.

3. காலையில் சூரிய உதயத்திற்கு முன் கற்களுக்கிடையில் எந்த அதிர்வும் இருப்பதில்லை. நடுப்பகலில் வெயில் ஏற, ஏற... கற்களுக்கிடையில் மின் அதிர்வுகள் பலப்பட்டு சூரிய அஸ்தமனத்தின்போது ஓய்ந்து போகின்றன. இடைநேரத்தில் இடையில் யாரேனும் நுழைந்து விட்டால் முற்றிலுமாக மறைந்து போய் விடுகின்றன. மறுபடியும் அதே நாளில் தோன்றுவதில்லை.

டேனிக்கன் தன்னுடைய ஆய்வின் முத்தாய்ப்பாக ஒரு ஆய்வுக்குரிய சர்ச்சைகளைத் தொடங்கி வைக்கிறார்.

முதலாவது, கற்கள் பற்றியது. சில விசேஷமான கற்கள் தங்களுக்குள் சம்பாஷித்துக் கொள்கின்றன. இந்த பாஷனைகளின் தொடர்ச்சி அண்டத்துக்குள் சென்று விடுகிறது. அல்லது இந்த பாஷனை அண்டத்தில் ஓரிடத்தில் தொடங்கி பூமியின் கற்களுக்குள் மீண்டும் வந்து முடிவதாகவும் இருக்கலாம்.

இரண்டாவது, மின்னணுக்கள் பற்றியது. கடத்தப்பபட்ட ஒருவனின் மூளையிலுள்ள ஒவ்வொரு மின்னணுவும் தகவல்கள் நிரம்பியவையாக -கடத்தியவன் யார் கடத்திய இடம் எது.. போன்ற செய்திகள் உள்ளதாக இருக்கும். இவ்வகை மின்னணுக்கள் அதிர்வடைந்து தகவல்களைச் சிந்தும்போது, தகவல்கள் இதர மின்னணுக்களால் அண்டம் முழுதும் பரவுகின்றன. ஏதேனும ஒரு வகையில் (மாந்தரீக முறை உட்பட) இத்தகவல்கள் அடங்கிய மின்னணுக்கள் மட்டும் (பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பாலும்) வடிகட்டி எடுக்கப்பட்டு தேடுபவருடைய மூளையில் உரச வைக்கப்படுமேயானால், கடத்தல் நிகழ்ச்சி திரைப்படம் போல வினாடி நேரத்தில் வெளிச்சமாக சாத்தியக்கூறுகள் தெரிகின்றன.

இதன் தொடர்ச்சியாக நம் உள்ளூர் நிகழ்ச்சிகள் சிலவற்றைத் தொடர்புபடுத்திப் பார்ப்போம்.

முதலாவதாக, இந்துக்களின் விக்கிரக வழிபாடு. விக்கிரகத்தின் முன் வழிபடும் ஒரு பக்தனின் நிலை என்ன? பக்தனின் உணர்ச்சிகள், வேண்டுகோள்கள் போன்ற தகவல்களடங்கிய (மூளையிலுள்ள) மின்னணு உணர்வுகளால் தகிர்ப்படைந்து, தகவல்களைச் சிந்தும்போது, எதிரிலுள்ள (கல்)விக்கிரகத்துடன் மின் தொடர்பை ஏற்படுத்துமா? அவ்வாறான ஒரு மின்தாக்கை வாங்கிக் கொள்ளும் விக்கிரகம் அதை அண்டத்தில் ஏதேனும் ஒரு இடத்திற்கு அனுப்புமா? இதே முறையில் அண்டத்தின் அந்த ஒரு இடத்திலிருந்து அனுப்பப்படும் தகவலை பக்தனுக்குக் கொடுக்குமா..?

இந்த இடத்தில் இடைச்செருகலாக, 22.4.2007 தேதியிட்ட தினமலர் நாளிதழின் செய்தியைப் பார்ப்போம்.
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் Empty
PostSubject: Re: கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல்   கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் Icon_minitimeThu May 20, 2010 3:25 pm

காவிரிக்கரையிலுள்ள ஊஞ்சலூர் புரவிப்பாளையம் கிராமம். ஊர்த் தெய்வம் பகவதிஅம்மன். பக்தையான தேவாயம்மாளின் கனவில் தோன்றிய பகவதி அம்மன், "உன் விருப்பப்படி உன் குடும்பத்தில் பெண் குழந்தையாக நீரில் தோன்றுவேன்.." என்று கூறி மறைந்தாள்.

பதினைந்து வருடம் ஓடியது. தேவாயம்மாளின் ஒரே மகனுக்கும் பத்தொன்பது வயதாகி விட்டது. இனி பெண் குழந்தை பிறப்பது எப்போது?

எனினும் நம்பிக்கையிழக்காமல் அந்தக் குடும்பம் காத்திருக்கிறது!

ஒரு நாள் இரவு நடராசன்-சாந்தி தம்பதியரின் குடும்பத் தோட்டக் கிணற்றில் ஏதோ விழுந்தது போன்ற சப்தம். மஞ்சள் துணியால சுற்றப்பட்டு மூழ்கிக் கொண்டிருந்த அது ஒரு பத்து நாட்களே ஆன பெண் குழந்தை."

பதினைந்து வருடத்திற்குப் பிறகு நடக்கப் போகும் ஒரு நிகழ்ச்சி தேவாயம்மாளுக்குத் தெரிந்தது எப்படி? அவர் வழிபட்ட பகவதி அம்மன் விக்கிரகம் காரணமாக இருக்குமா? இப்படியான உறுத்தல்களுடன் மேலும் கற்களைப் பற்றித் தேடுவோம்.

6.6.2007 தினமலர் செய்தியைப் பார்ப்போம்.

எழுதப் படிக்கத் தெரியாத 3 வயதுச் சிறுவன். ஒரு நாள் பகவத்கீதை புத்தகத்தைத் திறந்து, தன் தாய் மொழியல்லாத சமஸ்கிருதத்தில் சுலோகம் படிக்க ஆரம்பிக்கிறான். இது எப்படி சாத்தியம்..?

கற்களிலுள்ள(குறிப்பாகக் கருங்கற்கள்) சக்தியைப் பற்றி அறிந்து உணர்வுப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் நம் முன்னோர்கள். தங்கள் வழிபாட்டுத் தலங்களில் விக்கிரகங்களாகக் கருங்கற்களைப் பயன்படுத்தினார்கள். ஏன்?

1. கருங்கற்களுக்கு உலோகத்தைவிட வலிமை அதிகம்.

2. அண்டத்திலுள்ள எவ்வித சக்தியையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவை

3. பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கியவை ( நிலம்-பாறைச் செடி, நீர்- பாறை ஊற்று, காற்று - காற்று இருப்பதால் கல்லுக்குள் வசிக்கும் தேரை. நெருப்பு- இரண்டு கற்கள் உரசும்போது வெளிப்படுவது. ஆகாயம், அண்டம் போல எவ்வித சப்தத்தையும் உறிஞ்சிக் கொண்டு திருப்பித் தருகிறது)

என்று காரணப்படுத்தியுள்ளார்கள்.

இந்திரனின் கோபத்தால் கோகுலத்தில் கல் மழை பெய்ததாகவும், கண்ணன் அதைத் தண்ணீர் மழையாக மாற்றிக் கருணை புரிந்ததாகவும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் பாடுகிறார்.

"கடுவாய்ச சினவெங்கண் களிற்றினுக்குக்
கவளமெடுத்துக் கொடுப்பவன் போல்
அடி வாயுறக்கையிட்டு எழப்பறித்திட்டு
அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை,
கடல்வாய்ச் சென்று மேகம்
கவிழ்ந்திறங்கிக் கதுவாய்ப்பட
நீர் முகந்தேறி எங்கும்
குடவாய் பட நின்று மழை பொழியும்
கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே"

என்கிறார் பெரியாழ்வார்.

கற்களில் ஆண் கற்கள், பெண் கற்கள் மற்றும் அலிக்கற்கள் இருப்பதாக நமது பெரியவர்கள் வகைப்படுத்தியுள்ளார்கள். இவைகளைப் பற்றி விரிவாகப் பிறகு பார்ப்போம்.

மயிலாடுதுறை அருகிலுள்ள ஆக்கூர் தலத்து இறைவனான தோன்றியப்பர் ரேகைகளற்ற (அலிக் கற்களால்) சுயம்புவாக உருவெடுத்துள்ளது வரலாறு.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி-திருக்கோவிலூர் சாலையில் ரிஷிவந்தியத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு அர்த்த ஜாமத்தில் தேன் அபிஷேகம் செய்யும் போது பாணப் பகுதியில் அம்பிகை உருவம் தோன்றுவதும், தேன் முற்றிலுமாக வடிந்த பிறகு அம்பிகை உருவம் மறைந்து விடுவதும் தினம் பல்லாயிரக்கணக்கானோர் தரிசிக்கும் உண்மை.

விழுப்புரம் திருமாத்தூர் அபிராமேஸ்வரர்-முத்தாம்பிகை அம்மன் திருக்கோயிலுள்ள திருவட்டப் பாறை பற்றி இப்போது பார்ப்போம்.

இத்தலத்திலுள்ள வட்டப் பாறை முன் நின்று பொய் சொல்லியவர்கள் கண் இழந்தும், தலை வெடித்தும், பாம்பு கடித்தும் மாய்ந்து போவார்கள் என்பது பலர் கண்கூடாகப் பார்த்த சரித்திர நிகழ்ச்சிகள்.

ஒரு முறை வட்டப் பாறை முன் பொய் சத்தியம் செய்து விட்டு, "வட்டப் பாறை தேவதை என்னைக் கொத்தி விடுமோ?" என்று கிண்டல் பேசிவிட்டுச் சென்றவனை, 8 மைல் தூரம் துரத்திச் சென்று ஒரு நாகம் தீண்டிக் கொன்றது. தீண்டிய இடத்தில் (விழுப்புரம்-செஞ்சி பாதையில் உள்ள தாங்கல்)-பாம்பின் தலையும், முத்தாம்பிகை அம்மன் காலடியில் பாம்பின் வாலும் கல்லாக மாறி இன்றும் பக்தர்கள் வழிபடும் தலமாக உள்ளது.
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் Empty
PostSubject: Re: கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல்   கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் Icon_minitimeThu May 20, 2010 3:27 pm

1. 21.5.2007 தேதியிட்ட டெக்கான் கிரானிக்கள் தின இதழில் பதிவான செய்தி பற்றி பார்ப்போம்.

காட்மாண்டுவிற்கு 133 கி.மீ. வடக்கில் உள்ள டோலகா மாகாணம் ஜிரி நகரில் உள்ள பீம்சன் கோயில். இக்கோயிலில் உள்ள தெய்வ(கல் சிலைக்கு)த்திற்கு வியர்க்கும்போதெல்லாம் நாட்டுக்கும் அரச குடும்பத்திற்கும் கெடுதல் வந்து விடுமாம். இதற்கு உதாரணமாகப் பல நிகழ்ச்சிகளைச் சொல்கிறார்கள்.

1990 இல் வியர்த்த பிறகு, ஷா குடும்ப ஆட்சி முடிவிற்கு வந்தது. 2001 இல் (இரவில்)வியர்த்த பிறகு, அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருடன் ,அரசரும், இராணியும் கொல்லப்பட்டனர். 2005-ல் வியர்த்த பிறகு, அரசர் ஞானேந்திராவின் அரசு புரட்சிப் படையால் கவிழ்ந்தது.

2. சூரசம்ஹாரத்தில் வேல் வாங்கும் விழாவின் போது(மட்டும்) வியர்த்துப் போகும் (சிக்கல்) சிங்காரவேலன்.

(குறிப்பு : இது பற்றி எழுத்தாளர் சுஜாதாவின் கருத்துக்கள்--14.6.2007 குங்குமம் வாசகர் கேள்வி-- சமீபத்தில் நேபாளத்தில் இருக்கும் பீமேஸ்வர சிலைக்கு வியர்த்ததாக செய்தி வந்தது. சிக்கல் சிங்காரவேலருக்கும் வருடந்தோறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் வேல் வாங்கும்போது வியர்க்கும். இதற்கும் அறிவியல் ரீதியாகக் காரணம் ஏதாவது உண்டா?

சுஜாதாவின் பதில் : அறிவியல் ரீதியாகப் பார்த்தால் கல் வியர்க்காது. கல்லுக்குள் ஈரம் சிறைப்பட்டிருந்தால் அது வெளிப்பட்டிருக்கலாம். எப்படியும் சூரசம்ஹாரத்தின்போது கூட்டத்தில் மனிதர்களுக்கு வியர்க்கும். அது அறிவியல் ரீதியாகச் சாத்தியமே.)

3. கோழிகுத்தியிலுள்ள வியாச ராஜர் பிரதிஷ்டை செய்த தட்டினால் "சரிகமபதநி" இசை பாடும் சப்தஸ்வர ஆஞ்சநேயர்.

4. கடலூர்-சிதம்பரம் சாலையில் 13 கி.மீ. தொலைவில் உள்ள ஆலப்பாக்கத்தில் இருக்கும் திரிச்சோபுரம் ஆலயத்தில் உள்ள 1200 வருடங்கள் பழமையான , அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட, சப்தஸ்வரங்களை எழுப்பும் தட்சிணாமூர்த்தி விக்கிரஹம்.

5. விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் சாளக்கிராமக கற்கள், நேபாள நாட்டின் கண்டகி நதியில்கிடைக்கும். இயற்கையிலேயே ஒரு சிறிய பள்ளத்துடன் சங்கு சக்கர அமைப்புடன் பல நிறங்களில் கிடைக்கும் புனிதமாக வழிபடப்படும் தெய்வீகக் கற்கள் இவை.

6. கோவை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள குறிச்சிக்குளக்கரையில் கோயில்கொண்டிருக்கும் பொங்காளியம்மன் தனது தீவிரமான பக்தர் பொன்னுசாமியின் கனவில் தோன்றி, ஆகாயத் தாமரை படர்ந்த தனது குளக்கரையைச் சுத்தம் செய்யச் சொன்னதால், தனியாளாகக் குளத்தில் இறங்கி 24 நாட்களில் 60 சதவிகிதம் குளத்தைச் சுத்தப்படுத்தினார் பொன்னுச்சாமி. யூ.ம. 19.8.2007

இத்துடன் கற்களைப் பற்றிய தேடலும், ஆய்வும் முடிவுக்கு வருகிறது.
Back to top Go down
Sponsored content





கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் Empty
PostSubject: Re: கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல்   கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் Icon_minitime

Back to top Go down
 
கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பெயரில் என்ன இருக்கிறது?
» காதலும் தேடல்... வழ்கையும் தேடல்
» அவன் கற்றது என்ன? பெற்றது என்ன? இழந்தது என்ன?
» மனநிறைவு - ஒரு தேடல்
» == Tamil Story ~~ தேடல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: