BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்-ஐ.நாவுக்கு இலங்கை எச்சரிக்கை Button10

 

 உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்-ஐ.நாவுக்கு இலங்கை எச்சரிக்கை

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்-ஐ.நாவுக்கு இலங்கை எச்சரிக்கை Empty
PostSubject: உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்-ஐ.நாவுக்கு இலங்கை எச்சரிக்கை   உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்-ஐ.நாவுக்கு இலங்கை எச்சரிக்கை Icon_minitimeWed May 26, 2010 1:11 pm

உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்-ஐ.நாவுக்கு இலங்கை எச்சரிக்கை



உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் புலிகளுக்கு எதிரான கடைசிகட்ட போரின்போது ராணுவம் தமிழர் பகுதியில் உள்ள வீடுகள், மருத்துவமனைகள்,​​ பள்ளிகள் மீது பயங்கர தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தது.

இதில் பெரும் மனித உரிமைமீறல் நடைபெற்றதாகவும்,​​ அதற்கு இலங்கை அரசே காரணம் என்றும் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குற்றம்​ சாட்டப்பட்டுள்ளது. ​மேலும் இலங்கை ராணுவம் நடத்திய இந்த கொடூரத்தை தடுத்து நிறுத்த ஐ.நா.வும் தவறிவிட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து இது குறித்து விசாரிக்க ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க ஐ.நா. முடிவு செய்துள்ளது.

இந் நிலையில் ​அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ்​​நிருபர்களிடம் பேசுகையில்,

புலிகளுடனான போரின் போது எங்களது நாட்டு ராணுவத்தால் மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து இலங்கை அரசே விசாரிக்க முடிவெடுத்துள்ளது.​ இந்நிலையில் இதன் மீது நம்பிக்கை இல்லாமல் ஐ.நா.​ விசாரிக்க முயல்வது சரியல்ல.

இலங்கை ராணுவத்தின் மீது எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க உயர் குழுவை ஐ.நா.​ அமைப்பதென்பது சட்டரீதியாகவும்,​​ தார்மிகரீதியாகவும் நியாயமானதல்ல.​ இதனால் இலங்கை மக்கள் மத்தியில் ஐ.நா. குறித்து அதிருப்திதான் ஏற்படும்.

புலிகளுடனான போரினால் 30 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டு தற்போதுதான் லேசாக வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளது.​ இந்நிலையில் இலங்கை மீதான விசாரணை என்ற ஐ.நாவின் நடவடிக்கை நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது தொடர்பாக ஐ.நா.​ பொதுச் செயலாளர் பான் கீ மூன்,​​ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரை விரைவில் சந்தித்துப் பேசுவேன். பான் கீ மூனை சந்திக்கும்போது இலங்கை உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்துவேன்.

இலங்கை அரசு விசாரணை நடத்தவுள்ள நிலையில் ஐ.நா.​ தலையிடுவது விசாரணையில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.



study study study study study study study study study study
Back to top Go down
http://wwww.myacn.eu
 
உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்-ஐ.நாவுக்கு இலங்கை எச்சரிக்கை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!!!
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» அமெரிக்க ராணுவத்தினருக்கு பின்லேடன் புது எச்சரிக்கை
» எனக்கு இந்த புருஷன் வேண்டாம்...என்ன கட்டாயப்படுத்தாதீங்க...
» கத்தியை தீட்ட வேண்டாம் , புத்தியை தீட்டுங்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: