BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதிருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் Button10

 

 திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் Empty
PostSubject: திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்   திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் Icon_minitimeWed May 26, 2010 11:43 pm

அறத்துப்பால்




கடவுள் வாழ்த்து


1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.



2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.



3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.


4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.



5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார்
மாட்டு.



6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்
வார்.


7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல்
அரிது.


8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.


9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.


10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.


****************************************************
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் Empty
PostSubject: திருக்குறள் வான்சிறப்பு   திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் Icon_minitimeThu May 27, 2010 12:06 am

வான்சிறப்பு




11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.


மழை திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் Hi_link பெய்வதனாலேயே உலக
உயிர்கள் வாழ்கின்றன. ஆதலால் மழையே உயிர்களுக்கு அமிழ்தம்

என்று
உணரத்தக்கதாகும்.




12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம்
மழை.




உண்பவர்களுக்குத் தகுந்த பொருள்களை விளைவித்துத் தந்து, அவற்றைப்
பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக (பருகும் நீராக) விளங்குவதும் மழையே
ஆகும்.



13.விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.




மழை காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற இப் பரந்த உலகில்
பசி நிலைத்து நின்று உயிர்களை வாட்டும்.




14. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.



மழை என்னும் வருவாயின் வளம் குறைந்தால், பயிர் செய்யும் உழவரும் ஏரால்
உழுதலைச் செய்யமாட்டார்கள்.





15.
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.




காலத்தில் பெய்யாது உலகில் வாழும் உயிர்களைக் கெடுப்பதும் மழை. அப்படி
கெட்டவற்றைப் பெய்து வாழச் செய்வதும் மழையே ஆகும்.





16.விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.




வானிலிருந்து மழைத்துளி வீழ்வது நின்றுவிட்டால், உலகில் பசும்புல்லின்
தலையைக் காண்பதுகூட அரிதாகிவிடும்.



17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.



மேகமானது கடல்நீரை முகந்து சென்று மீண்டும் மழையாகப் பெய்யவிட்டால்,
அப்பெரிய கடலும் தன் அளவில் குறைந்து போகும்.






18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.


மழை முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்தில் வானோர்க்காக நடத்தப்படும்
திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறாது.




19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.




மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்தில் பிறருக்காகச்
செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டும் நிலையாமற்
போய்விடும்.



20.நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது
ஒழுக்கு.


நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை
இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது.



******************************************************
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் Empty
PostSubject: திருக்குறள் 3. நீத்தார் பெருமை   திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் Icon_minitimeThu May 27, 2010 12:19 am

3. நீத்தார் பெருமை



21.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.


விளக்கம்:


வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைபிடித்து, ஆசையைத் துறந்தவர்களின் பெருமையைப்
போற்றிச் சிறப்பித்துச் சொல்வதே நூல்களின் சிறப்பாகு








22.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.



விளக்கம்:


உலகப் பற்றுக்களை விட்டொழித்தவரின் பெருமையை அளந்து சொல்வதானால், உலகில்
இதுவரை இறந்தவர்களைக் கணக்கெடுப்பது போலதாகும்.





23.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.



விளக்கம்:



இப்பிறவி, மறுபிறவி என்னும் இரண்டின் கூறுகளையும் தெரிந்து, இவ்வுலகில்
அறநெறியை மேற்கொண்டு வாழ்பவர்களின் பெருமையே உயர்ந்ததாகும்.





24.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர்
வித்தது.




விளக்கம்:



அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிற யானைகளை அடக்கிக் காப்பவன் எவனோ,
அவனே மேன்மையான சொர்க்கத்திற்குச் செல்ல தகுதியானவன்.







25.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.




விளக்கம்:


ஐம்புலன்கள் மூலமாக எழுகின்ற ஆசைகளை தவிர்த்தவனுடைய வலிமைக்கு, அகன்ற
வானுலகின் தலைவனான இந்திரனே போதிய சான்று ஆவான்.




26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.






விளக்கம்:

செய்வதற்கு அரியதாக உள்ள செயலை செய்து
முடிப்பவரே பெரியவர். அப்படிச் செய்ய இயலாதவர் சிறியவர்.




27. சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.


விளக்கம்:

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று
கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம்
உள்ளது.




28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.


விளக்கம்:

நிறைவான மொழிகளையே சொல்லும் சான்றோரின்
பெருமையை, உலகத்தில் நிலையாக விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே
காட்டிவிடும்.




29.. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.


விளக்கம்:

நல்ல குணம் என்கிற குன்றின்மேல்
ஏறிநின்ற சான்றோரால், சினத்தை ஒரு கணம் கூட வைத்துக கொள்ள முடியாது.




30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக
லான்.



விளக்கம்:

எல்லா வகையான உயிருக்கும் செம்மையான
அருளை மேற்கொண்டு நடப்பதானால், அந்தணர் எனப்படுவோர் அறவோர்
என்றழைக்கப்படுகிறார்.



***************************************************
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் Empty
PostSubject: திருக்குறள் 4. அறன் வலியுறுத்தல்   திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் Icon_minitimeThu May 27, 2010 12:29 am

4. அறன் வலியுறுத்தல்


31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.



விளக்கம்:

அறமானது சிறப்பைத் தரும்.
செல்வத்தையும் தரும். ஆகையால் அறத்தைவிட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு
எதுவுமில்லை என்கிறார் வள்ளுவர்.




32. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.


விளக்கம்:

அறநெறியொடு வாழ்வதைக் காட்டிலும்
உயிருக்கு நன்மையானதும் இல்லை. அறநெறியைப் போற்றாமல் மறத்தலைக் காட்டிலும்
கேடானதும் இல்லை.




33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

விளக்கம்:

நம்மாலே முடிந்த வகைகளில் எல்லாம்,
முடியக் கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயலை இடைவிடாமல் தொடர்ந்து செய்து
வருதல் வேண்டும்.





34...மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.



விளக்கம்:

தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும்
அவ்வளவே அறம் எனப்படும்; மற்றவையெல்லாம் வெறும் ஆரவாரத் தன்மை கொண்டவை




35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.





விளக்கம்:

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும்
நான்கிற்கும் ஒரு சிறிதும் இடம் தராமல் ஒழுகிவருவதே அறம் ஆகும்.






36.. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.



விளக்கம்:

'பின் காலத்தில் பார்ப்போம்' என்று
தள்ளி வைக்காமல், அறத்தை அன்றே செய்க; அது இறக்கும் காலத்திலே அழியாத்
துணையாகும்.







37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.



விளக்கம்:

சிவிகையை (பல்லக்கு) சுமப்பவனோடு,
அதனில் செல்பவன் ஆகியோரிடையே , 'அறத்தின் வழி இதுதான்' என்று கூறவேண்டாம்.





38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.



விளக்கம்:

செய்யத் தவறிய நாள் என்றில்லாமல்
ஒருவன் அறம் செய்வானானால், அதுவே வாழ்நாள் முடியும் வழியை அடைக்கும்
கல்லாகும்.





39. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.


விளக்கம்:

அற வாழ்வில் வாழ்வதானால் வருவதே
இன்பமாகும்; மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா; அவற்றால் புகழும் இல்லை.






40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.


விளக்கம்:

ஒருவன் தன் வாழ்நாளில் செய்யவேண்டியது
எல்லாம் அறமே. அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச்செயலே.




************************************************
Back to top Go down
http://wwww.myacn.eu
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் Empty
PostSubject: Re: திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்   திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் Icon_minitimeSun May 30, 2010 11:07 am

5. இல் வாழ்க்கை



41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.


விளக்கம்:

இல்லறத்தில் வாழ்பவன் என்பவன், பிற அற இயல்பையுடைய முத்திறத்தார்க்கும் நல்வழியில் நிலையான துணையாவான்.




42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.



விளக்கம்:

துறவியர்க்கும், வறுமைப்பட்டோர்க்கும், தனக்குத் தொடர்புடைய இறந்தவர்கட்கும் இல்வாழ்வினனே துணையாவான்.




43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.


விளக்கம்:

தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் பேணுதல் இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும்.



44.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.



விளக்கம்:

பழிக்குப் பயமும், உள்ளதைப் பிறர்க்குப் பகுத்து கொடுத்து உண்ணும் இயல்பும் உடையதனால், வாழ்க்கை வழிக்கு எப்போதுமே குறைவு இல்லை.



45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.




விளக்கம்:

கணவன் மனைவியருக்குள் அன்பும் பிணைப்பும், அறநெறிப் படி நிகழ்ந்து வருவதே, இல்லற வாழ்க்கையின் பண்பும், பயனும் ஆகும்.



46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்.


விளக்கம்:

அறநெறிப்படியே இல்வாழ்க்கையை ஒருவன் நடத்திவருவானானால், அவன் வேறு நெறியிலே போய்ப் பெறுவது என்ன?



47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.



விளக்கம்:

அறநெறியின் தன்மையோடு இல்வாழ்க்கை வாழ்பவனே, வாழ்வு முயற்சியில் ஈடுபடுபவர்களுள் எல்லாம் தலைசிறந்தவன் ஆவான




48. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.



விளக்கம்:

பிறரையும் அறநெறிப்படி நடக்கச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை வாழ்வதானது, தவம் செய்பவர்களின் நோன்பைவிட வலிமையானது ஆகும்.



49. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.



விளக்கம்:

இல்லற வாழ்க்கையே சிறந்த அறம் என்று சான்றோர் கூறுகின்றனர். அதிலும் பிறரைப் பழித்துப் பேசாமல் இருப்பது இன்னும் சிறப்பாகும்.





50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

விளக்கம்:

உலக நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப்படுவான்.

***********************************************************************************************************
Back to top Go down
http://wwww.myacn.eu
Sponsored content





திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் Empty
PostSubject: Re: திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்   திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் Icon_minitime

Back to top Go down
 
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்
» திருக்குறள்
» தினமொரு திருக்குறள்
» தினமொரு திருக்குறள்
» தினமொரு திருக்குறள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: