BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஇலங்கையின் இயற்கை வளங்கள் Button10

 

 இலங்கையின் இயற்கை வளங்கள்

Go down 
AuthorMessage
KUTTY_MA

KUTTY_MA


Posts : 40
Points : 105
Join date : 2010-03-14
Age : 36
Location : srilanka

இலங்கையின் இயற்கை வளங்கள் Empty
PostSubject: இலங்கையின் இயற்கை வளங்கள்   இலங்கையின் இயற்கை வளங்கள் Icon_minitimeMon Mar 15, 2010 5:42 am

இயற்கை வளங்கள் சுண்ணாம்பு கல், காரீயம், கனிய மணல், இரத்தினங்கள், பொஸ்பேற்றுகள், களீ,நீர் மின்சாரம் போன்றன இலங்கையில் காணப்படும் இயற்கை வளங்கள்.அதோடு நிலப்பயன்பாடுகளாவன விவசாயம் செய்யத்தக்க நிலம் : 14 சதவீதம், நிலையான பயிர் : 15 சதவீதம், நிலையான புல்வெளிகள் : 07 சதவீதம், காடுகளும் மரச்செறிவுகளும் :32 சதவீதம், ஏனையவை : 32 சதவீதம் (1993 இல்) , நீர் பாசனமுள்ள நிலங்கள் : 5,500 சதுர.கிலோ மீற்றர் (1993 இல்) சூழல் – காடழிப்பு மண்ணரிப்பு சட்டவிரோத வேட்டையினாலும், நாகரீகத்தினாலும், வனவிலங்குகள் ஆபத்துக்குள்ளாகியிருத்தல், அகழ்வு நடவடிக்கைகளினாலும், அதிகரித்து வரும் மாசடைவினாலும், கரையோர தொழிற்சாலைக் கழிவுகளினாலும், கழிவு நீர் கலத்தலாலும், நன்னீர் வளங்கள் மாசடைதல் கழிவு அகற்றல் கொழும்பில் காற்று மாசடைதலட தன்மை உள்ளது. இலங்கை ஆறுகள் புவியரல் ஆள்கூற்று முறைகளைப்பின்பற்றி இலங்கைக்கென உருவாக்கப்பட்டதே இலங்கை ஆள்கூறு ஆகும். இலங்கையில் அதியுயர் மலையான பீதுறுதாலகால மலையின் உச்சியை தொடக்கமாக கொண்டமைக்கப்பட்டு காட்டீசியன் முறையில் அமைக்கப்பட்டதாகும். இவ்வமைப்பில் ஒவ்வோர் அலகும் ஒரு மீட்டர் அளவினைக்குறிக்கின்றது. பீதுறுதாலகால மலையின் உச்சியை மையமாகக் கொள்ளாமல் (0,0) இலங்கையில் எந்தபாகத்தினதும் ஆள்கூறு நேர் பெறுமானமாக வரக்கூடியதாக வசதியாகவும் (200000, 200000) எவ்வறு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பீதுறுதாலகால மலையின் உச்சியில் இருந்து இலங்கையின் எந்தவொரு நிலப்பரப்பும் மேற்கிலோ, தெற்கிலோ 200 கிலோ மீட்டருக்குக்குறைவான தூரத்திலேயெ உள்ளன. ஆறுகளும் குளங்களும் இலங்கைத் தீவானது பல ஆறுகளையும், குளங்களையும் கொண்டுள்ளது. மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் இத்தீவின் ஆறுகள் இயற்கையாக உருவாகின்றன. ஆனால் குளங்கள் அனைத்தும் அக்காலத்து அரசர்களினால் நிர்மானிக்கப் பட்டவையாகவே உள்ளன. இலங்கையை பொருத்தவரை இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் 101 ஆறிகள் உள்ளன. இவற்றுள் முக்கியமானவை 32 ஆறுகளாகும். மத்தியமலைநாட்டில் உருவாகும் இவ் ஆறுகள் தாழ்நிலங்களினூடாக கடலை அடைகின்றன. இலங்கையின் மிக நீளமான ஆறான மகாவலி கங்கை 330 கீலோமீற்றர் நீளமுடையது. மேலும் மகாசேனன் கட்டிய மின்னேரியா குளத்தை குறிப்பிடலாம். இது உருவாக்கப்பட்ட காலம் (274-301 கி.பி) ஆகும். அக்காலங்களில் அணைக்கட்டுக்கள் மூலம் மழை நீரானது சேகரீகச்கப்பட்டு பின்னர் வரட்சிக் காலங்களில் மக்கள் தேவைக்காக பயன்படுத்தப்பட்டனர். இது அக்கால அரசர்களின் கடின உழைப்பு மற்றும் தேசத்தின் மீது கொண்ட பற்று என்பவற்றை எடுத்துக்காட்டுகின்றது. 12 ஆம் நூற்றாண்டில் மகா பராக்கிரமபாகு கட்டிய பராக்கிரம சமூத்திரம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும். இவ்வாறு இலங்கையின் இயற்கை வளங்கள் காணப்பட்டன.
Back to top Go down
 
இலங்கையின் இயற்கை வளங்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இயற்கை !!
» இலங்கையின் புவியியல்
» இலங்கையின் புதிய அமைச்சரவை
» இலங்கையின் எதிர்ப்பை நிராகரித்தார் பான் கி மூன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: