BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅவர்கள் பார்வையில் Button10

 

 அவர்கள் பார்வையில்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

அவர்கள் பார்வையில் Empty
PostSubject: அவர்கள் பார்வையில்   அவர்கள் பார்வையில் Icon_minitimeSun Jun 20, 2010 3:59 am

" எனக்கு
முகம் இல்லை.
இதயம் இல்லை.
ஆத்மாவும் இல்லை.
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன.
சமையல் செய்தல்
படுக்கை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவைகளே எனது கடமைகள் ஆகும்.
கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள்
எப்போதும் எனது
உடலையே நோக்குவர்.
கணவன் தொடக்கம்
கடைக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்".



-sankari -
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

அவர்கள் பார்வையில் Empty
PostSubject: ஒரு விதவையின் பொட்டு   அவர்கள் பார்வையில் Icon_minitimeSun Jun 20, 2010 5:34 am

ஒரு விதவையின் -
நெற்றி சுடும் பொட்டு;

பெண்ணின் அடையாளத்தை
சிவந்து காட்டும் பொட்டு;

வெற்றியின் உச்சத்தை
பறையறிவிக்கும் -
ஒற்றை திலகம் பொட்டு;

குடும்ப பெண்களின் அழகிற்கு
இன்னொரு -
ஆபரணம் துறந்த அழகு பொட்டு;

நெற்றிக் குளிர்ச்சியில் -
புத்தி திருத்தும் -
செஞ் சூரணம் பொட்டு;

ஸ்டிக்கரில் ஒளிந்து
மடிந்து போன -
கலாச்சார சீர்குலைவு பொட்டு;

பத்தோ இருபதோ காசுக்கு
பிழைப்பு நடத்தும் ஏழைகளின்
ஒற்றை வியாபாரம் பொட்டு;

நீட்டியும்
சுருக்கியும்
குறுக்கியும்
வண்ண வண்ணமாய் ஒளிர்ந்துக் கொண்டாலும்

பழைய சாந்து பொட்டின் வாசனை மட்டும் -
நாசிகளை ந
னைத்துக் கொண்டே மறைகிறது!





நன்றி

வித்யாசாகர்
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

அவர்கள் பார்வையில் Empty
PostSubject: yen kathal   அவர்கள் பார்வையில் Icon_minitimeSun Jun 20, 2010 5:38 am

வறண்டு கிடக்கின்ற

பாலைவனத்து வெளியினூடே

காய்ந்து நிற்கும்

ஒற்றைமர கிளையின் மீது

சுடுமணல் காற்றிலேறி

பற்றிக்கொண்ட பறவை போல

ஒட்டிக்கொண்டது

உன்மீதான

எனக்கான காதல
்...!




நன்றி


பாலாஜி.ச.இமலாதித்தன்


Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

அவர்கள் பார்வையில் Empty
PostSubject: Re: அவர்கள் பார்வையில்   அவர்கள் பார்வையில் Icon_minitimeSun Jun 20, 2010 5:40 am

உன்னிடம்

சொல்லாத வார்த்தைகளே

என்னை காதல் கொள்ளும்போது

நான் சொல்லிவிட்ட வார்த்தைக்கு

நீ காதல் அனுமதி

தர மறுத்து

வீணாய் எனையேன் கொல்கிறாய்...?


----o0o----


உன்னை காணாத

ஒவ்வொரு வினாடியும்

வீணாய் போகிறதே யென்று

வருத்தத்துடன்

உரையாடிக்கொண்டிருக்கிறது

கடிகார முட்கள்...!


----o0o----


காதல் தவறில்லை

என்றுரைத்த

என் நண்பனிடம்

கோபப்பட்டத்தை

தவறென்று உணர்கிறேன்

இன்று

உன்னை கண்டபின்னால்...!


----o0o----


காதல் மறுப்பை

பெருமிதமாய் பேசித்திரியும்

பெரியோர்கள் அறிவார்களா

பிறப்பின் அடித்தளமே

காதலென்று...!


----o0o----


நீ என்னை

காதல் செய்ய மறுக்கும்

இக்கணத்தில்

என் தமனியும் சிரையும்

சிறைபட்டுக் கிடக்கும்

இதய போராட்டத்தை

உணர்வாயோ...?


----o0o----


நான் பேருந்து படியினில்

தொற்றிக்கொண்டு

பயணம் செய்து வரும்

காலைநேர சாலையெங்கும்

உன் மீதான காதலும்

என்னோடு தொற்றிக்கொண்டு

பயணிக்கிறது

பேருந்தை விட்டு

நீ கீழறங்கி

சென்ற பின்பும்...!


----o0o----


காதல் இல்லையென்று

சுற்றித்திரிந்த

நாட்களையெல்லாம்

காட்சிப் பொருளாய்

நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருக்கிறேன்

என் காதலியே

உன்னிடம் காண்பிப்பதற்காய்...!


----o0o----


கனவு காணும்போது

தேவதை வருவாளென்று

நண்பன் சொன்னது

இன்று

பொய்த்துப்போனது

நீ அருகில் வரும்போதேல்லாம்

கனவு வருவதால்...!


----o0o----


கண்ணுக்குள் பேசி தீர்த்த

வார்த்தைகள் யாவும்

உதடு வழியே

உமிழப்படும் போது

கவிதையாகி விடுவதாய்

நீ சொன்னாயே

அது உண்மைதானோ...!


----o0o----


உன்னை நான்

காணாது போய் இருந்தால்

மீண்டிருப்பேன்

இன்று

உன்னை கண்டதினால்

காணமல் போய்விட்டேன்

இதுதான் காதலோ...!




]b]நன்றி


பாலாஜி.ச.இமலாதித்தன்

[/b]
Back to top Go down
Sponsored content





அவர்கள் பார்வையில் Empty
PostSubject: Re: அவர்கள் பார்வையில்   அவர்கள் பார்வையில் Icon_minitime

Back to top Go down
 
அவர்கள் பார்வையில்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உலகம் என் பார்வையில்
» உன் பார்வையில் ஓராயிரம்
» கவியரசு கண்ணதாசனின் பார்வையில் 'காதல்'
» எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பார்வையில் எழுத்தாக்கங்கள்..!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: