BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஇராவணன் - சொல்லப் படாதவை Button10

 

 இராவணன் - சொல்லப் படாதவை

Go down 
4 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

இராவணன் - சொல்லப் படாதவை Empty
PostSubject: இராவணன் - சொல்லப் படாதவை   இராவணன் - சொல்லப் படாதவை Icon_minitimeFri Jun 25, 2010 7:16 am


மேட்டுக்குடித் தனத்தையும் அவர்களால் ஒடுக்கப் பட்டோரின் போராட்டத்தையும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தயாரிப்பில் படமாக எடுத்தால் இப்படித்தான் இருக்குமோ? என வருத்தப் பட வைத்து விட்டார் இயக்குனர் மணிரத்னம். வீரா என்ற ஒடுக்கப் பட்ட வர்க்கத்தை சேர்ந்த கதா நாயகன், ராகினி என்ற மேட்டுக்குடியில் பிறந்த பெண், இவள் மேட்டுக்குடித் தனமுடைய அரசாங்க(அரசியல்வியாதிகளின்) அடிமையான போலீஸ் தேவின் மனைவி. இவர்கள் மூவரை மையப் படுத்தி நகர்கிறது படம்.

வீரா ஏன் ஒடுக்கப் படுகிறான். அவன் ஏன் தீவிரவாதி என அறிவிக்கப் பட்டான் என்பதற்கு பெரிதாய் ஒன்றும் விளக்கம் இல்லை.

விடுதலைப் புலிகளாகட்டும், அது போன்ற வேறு எந்த அமைப்பாகட்டும் ஏதோ ஒரு உரிமைப் பறிக்கப் படுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் ஒடுக்கப் படுவதை எதிர்த்து நிற்கிறார்கள். மக்களின் பார்வை அவர்களின் நியாயம் பக்கம் திரும்பும்.

எங்கே அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைத்து விடுமோ என அஞ்சும் அரசியல்வாதிகள் அவர்களின் அரசியல் தந்திரத்தின் மூலம் அந்த அமைப்புகள் பற்றி மக்களிடையே ஒரு தவறான அபிப்ராயம் ஏற்படுத்த முயல்வர். உதாரணத்திற்கு பொது மக்கள் அதிகமுள்ள இடங்களில் குண்டு வைப்பது, இரயில் தண்டவாளங்களைத் தகர்ப்பது போன்றவற்றை நீதிக்காக போராடும் எந்த ஒரு அமைப்பும் செய்யாது.

ஆனால் அவற்றை இந்த அரசியல்வாதிகளே அரங்கேற்றுவர். மக்கள் பலர் கொல்லப் படுவர். கேட்டால் இது அந்த அமைப்பினரின் தீவிரவாத செயல், அவர்கள் ஒடுக்கப் பட வேண்டும் என அறிக்கை விடுவர். மக்களுக்கு அது போன்ற செய்திகளை நம் விளம்பர செய்தி ஊடகங்களும் கொஞ்சம் கூட கூச்சமின்றி போட்டுக் காட்டி அந்தந்த அமைப்புகள் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

இவற்றை சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளும் நம் அரசியல்வாதிகள் அவர்களின் கையாட்களான காவல்துறை, இராணுவம் கொண்டு அவர்களை அழிக்கப் புறப்பட்டு விடும். இது போன்ற அரசியல்வியாதிகளின் அடக்கு முறைகள், அவர்களின் அயோக்யத்தனங்கள் அனைத்தும் இந்தப் படத்தில் சொல்லப் படாமல் மறைக்கப் பட்டிருக்கின்றன (ஒரு வேளை சொல்லப் பட்டிருந்தால் இந்தப் படத்தையும் அடக்கியிருப்பார்களோ என்னவோ?).


படத்தின் துவக்கக் காட்சிகளில் வீராவின் ஆட்கள் காவல்துறையினர் சிலரை கட்டிப் போட்டு தீ வைக்கின்றனர். இங்கு ஒரு விடயம் சொல்லியாக வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால் இது மிகப் பெரிய தவறாகவேத் தெரியும். தவறும் கூடதான். இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் உண்மை நிலை என்ன? இது போன்ற போராட்ட அமைப்புகளைப் பொறுத்த வரையில் அவர்கள் காவலர்கள் அல்ல. அவர்களின் கூட்டத்தை அழிக்க வந்த எதிரிகள். அவ்வளவே. இதை நான் நியாயப் படுத்த விரும்பவில்லை. குற்றம்தான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அவர்க்ளை அப்படி ஒரு செயல் செய்யும் அளவிற்கு மாற்றியது இந்த அரசியல் தந்திரிகள்.

அவர்களின் அடக்கு முறைகளுக்கு பலிகடாவாக்கப் படுவது இந்த காவலர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் இது போன்ற போராட்ட அமைப்பினர். ஆனால் இது குறித்து தெளிவான விளக்கமில்லாமல் ஒரே ஒரு காட்சியில் வீரா ஆவேசமாகப் பேசும் போது வரும் இடைச் செறுகல் வச்னம் போல "அவங்க கத்தியை எடுத்தாங்க நாங்களும் எடுத்தோம்" என அழுத்தமில்லாமல் ஒளிவு மறைவாக சொல்லி விட்டிருக்கிறார்.

போராட்டங்களின் போது போலீஸிடமோ, ராணுவத்திடமோ அந்த எதிர் அமைப்பை சேர்ந்த பெண் சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதையும், அவர்களின் அட்டூழியங்களையும் கூட மிக சுலபமாக அழுத்தமின்றி சொல்லி விட்டிருக்கிறார். போர் புரியுமிடத்தில் எதிரியின் தங்கையை மட்டும் தூக்கிக் கொண்டு மற்றவர்களை விட்டு விடும் அளவுக்கு அக் காவலர்களில் பலர் நல்லவர்களாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றனர். சிலர் ஆந்தப் பெண்ணை சீரழிக்கும் கெட்டவர்களாக சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள்.

உண்மையில் போராட்டங்களில் அப்படி நடக்குமா? இலங்கையில் எவ்வளவுப் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப் பட்டிருக்கிறது? இவற்றையெல்லாம் அழுத்தமாக சொல்ல முடியாத அளவுக்கு மணிரத்னம் ஒன்றும் சாதாரன இயக்குனர் அல்ல.

ஆனால் சொல்லாததற்கு காரணம் என்னவாக இருக்கும்? நிச்சயம் அரசியல் வாதிகள் மீதான பயமே. அப்படி சொல்லப் பட்டிருந்தால் இன்று இந்தப் படம் வெளி வந்திருக்காது.

ராமாயணக் கதையில் கூட ராவணன் நல்லவன் என எண்ணுபவன் நான். அந்த வகையில் இந்த ராவணனும் நல்லவனே. ஆனால் அந்த வீரா பாத்திரத்திற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கத் தவறிய (அ) பயந்த மணிரத்னத்தால் அந்த ராவணன் பெரிதாக மனதில் பதியவில்லை.

மற்றபடி தங்கையை சீரழித்ததற்காக காவலன் ஒருவனின் மனைவிக் கடத்தல், பின் அப்பெண் மீதுக் காதல், அந்தப் பெண்ணை வைத்தே நாயகன் அழிக்கப் படும் "சுப்ரமணியபுரம்" க்ளைமேக்ஸ் என படம் முழுக்க கமர்சியலாக வந்திருக்கிறது. வேறொன்றும் சொல்லிக் கொள்வதற்கு இல்லை.
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

இராவணன் - சொல்லப் படாதவை Empty
PostSubject: ராவணன் புகார்!   இராவணன் - சொல்லப் படாதவை Icon_minitimeSun Jun 27, 2010 7:28 am

ராவணன் திருட்டு விசிடி... கமிஷனரிடம் சுஹாஸினி புகார்!இராவணன் - சொல்லப் படாதவை Crying

ராவணன் திருட்டு கதை... சிவனிடம் ராமர் புகார்!இராவணன் - சொல்லப் படாதவை Sun_11
Back to top Go down
GoodPayan

GoodPayan


Posts : 167
Points : 235
Join date : 2010-06-30
Age : 39
Location : Chennai

இராவணன் - சொல்லப் படாதவை Empty
PostSubject: Re: இராவணன் - சொல்லப் படாதவை   இராவணன் - சொல்லப் படாதவை Icon_minitimeWed Jun 30, 2010 2:42 pm

உங்கள் கருத்தை நான் முழுவதுமாக ஏற்கமுடியாது.. ஏனெனில் இந்த படத்தை பொறுத்தவரை மணிரத்னம் எடுத்து கொண்ட கதை களத்தை பலரும் புரிந்துக் கொள்ளவில்லை.. நீங்கள் உட்பட.. வீரனாகத்திகழும் இன்னொருவனின் மனைவி மேல் ஒருவனுக்கு ஏற்படும் ஈர்ப்பு, தீயவர்கள் என நம்பப்படுபவர்களிடம் காணப்படும் அன்பை ஒரு பெண் உணர்தல், கடமையை நிறைவேற்ற எந்த வழியில் போனாலும் தவறில்லை என்று நினைக்கும் ஒரு அதிகாரியின் இறுக்கம், இந்த மூன்றுமே அவர் கையாண்டிருக்கும் களம்.. அதில் மணிரத்னம் வெற்றி பெற்று இருக்கிறார் என்பதே நிஜம்.

அதிலும் அவர் ராமாயணத்தை இன்னொரு கோணத்தில் தர முயற்சித்து இருக்கிறார். அவ்வளவே. அவர் நினைத்த படைப்பை அவர் தந்து இருக்கிறார். பலரால் அவர் சொல்ல நினைத்ததை உணர முடியவில்லை என்பதே உண்மை. நீங்கள் சொன்னவாறு ஒடுக்கப்பட்டோரின் வலியை கூற வந்த படம் இது இல்லை. அரசியால்வாதிக்கு பயந்து இருந்தால் மணிரத்னத்தால் 'இருவர்' படத்தை எடுத்திருக்க முடியாது தோழி..

ஒடுக்கப்பட்டோரின் கதைக் களத்தை அவர் எடுக்கும் பொழுது அவரின் தைரியத்தை நீங்கள் நிச்சயம் பாராட்டுவீர்கள். இந்து கடவுளான ராமரை பல இடங்களில் அவர் விமர்சிக்கும் தைரியம் உங்கள் கண்களில் புலப் படவில்லை என்பது துரதிர்ஷ்டமே..

நான் சொன்ன களத்தை மனதில் வைத்து இன்னொரு முறை படம் பாருங்களேன்.. அன்புத் தோழியே, எனது கருத்தில் தவறு இருந்தால் மன்னியுங்கள்.. என்னைத் திருத்துங்கள்
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

இராவணன் - சொல்லப் படாதவை Empty
PostSubject: Re: இராவணன் - சொல்லப் படாதவை   இராவணன் - சொல்லப் படாதவை Icon_minitimeThu Jul 01, 2010 6:03 am

1.வீரனாகத்திகழும் இன்னொருவனின் மனைவி மேல் ஒருவனுக்கு ஏற்படும் ஈர்ப்பு --முதலில் பிறர் மனைவியை ஒரு வீரன் [போராளி] ஒருவனுக்கு ஈர்ப்பு ஏற்படுவதாக காட்டுவதே கேடுகெட்டதனம். போராளிகளை ஒழுங்கீனமானவர்களாக சித்தரிப்பதன் மூலம் உரிமைகளுக்கான போராட்டங்கள் மீதான நம்பிக்கைகளை இழக்கச் செய்யும் எண்ணத்தின் வெளிப்பாடே இது.கதாநாயகன் பழங்குடி தலைவன் வீராவின் தங்கை வெண்ணிலா தன்னை காவல்துறையினர் கற்பழித்துவிட்டதாக கதறும் போது கூட எந்தவித சலனமுமில்லாமல் இல்லை படம் பார்க்கும் போது, இதற்க்கு காரணமே மணிரத்தினத்தின் புத்திசாலித்தனமான [மோசமான] வீரனாகத்திகழும் இன்னொருவனின் மனைவி மேல் ஒருவனுக்கு ஏற்படும் ஈர்ப்பு
எனும் கதை அமைப்பே.--


2.தீயவர்கள் என நம்பப்படுபவர்களிடம் காணப்படும் அன்பை ஒரு பெண் உணர்தல் --நீங்கள் கூறும் இந்த கருத்தை மணிரத்தினம் நன்றாகவே படம் பிடித்திருப்பார் ,"கடவுளே அவர்களை (பழங்குடிகள்) கெட்டவர்களாகவே காட்டு. ஏன் எனக்கு இரக்கத்தை கொடுக்கிறாய். எனக்கு மீண்டும் கோபத்தை கொடு” என்கிறார் சாய்ந்த பிரமாண்ட விஷ்ணு சிலை முன்.அனால் வீரவை ஹீரோவாக காட்டவேண்டும் என்பதற்காக காட்சி அமைப்பில் பல இடங்களில் வீரா மீது ராகினிக்கு ஈர்ப்பு வருவது போல் அமைத்து படத்தின் போக்கையே விடுதலைப் போராட்டமா? காதலா? என்ற கேள்வியில் காதலே முக்கியம் என தீர்ப்பளிக்கிறார், படத்தின் தொய்வுக்கு இதுவும் ஒரு காரணம்.--

3.கடமையை நிறைவேற்ற எந்த வழியில் போனாலும் தவறில்லை என்று நினைக்கும் ஒரு அதிகாரியின் இறுக்கம் --இதுவரை தமிழ் திரைப்படங்களில் இப்படிப்பட்ட காவல்துறை அதிகாரிகளை காட்டியதே இல்லையா? MGR மற்றும் நம்பியார் காலத்தில் இருந்தே இதுபோன்ற காவல் துறை அதிகாரிகள் உள்ளனர்.மணிரத்தினம் புதிதாக உருவாக்கி வெற்றி பெற்ற கதாபாத்திரம் அல்ல நண்பரே இந்த ஹேமந்த்.--

இந்த மூன்றுமே அவர் கையாண்டிருக்கும் களம்.. அதில் மணிரத்னம் வெற்றி பெற்று இருக்கிறார் என்பதே நிஜம்.அதிலும் அவர் ராமாயணத்தை இன்னொரு கோணத்தில் தர முயற்சித்து இருக்கிறார். அவ்வளவே. அவர் நினைத்த படைப்பை அவர் தந்து இருக்கிறார். பலரால் அவர் சொல்ல நினைத்ததை உணர முடியவில்லை என்பதே உண்மை.--வால்மீகி எழுதி கம்பர் மொழி பெயர்த்த இராமாயண இராமன் இராவணனை கொன்று சீதையை மீட்டு உலகிற்கு சீதை கற்பானவள் என நிரூபிக்க யாஹம் செய்ய சொல்வார், ஆனால் மணிரத்னமோ ஒரு படி மேலே போய் தேவ் பிரகாஷ் மனைவியை சந்தேகப்பட்டதே எதிரியான பழங்குடி வீராவை அழிக்க தான் என புது விளக்கம் தந்து மொக்கையை கூர்மையாக்கி இருக்கிறார் என்பதே நிஜம்.--

நீங்கள் சொன்னவாறு ஒடுக்கப்பட்டோரின் வலியை கூற வந்த படம் இது இல்லை.அரசியால்வாதிக்கு பயந்து இருந்தால் மணிரத்னத்தால் 'இருவர்' படத்தை எடுத்திருக்க முடியாது தோழி.--தைரியத்தை விட திறமையே முக்கியம்.கதை அமைப்பு அதைவிட முக்கியம்.இருவர் கதையில் மாற்றம் இன்றி வந்ததால் மணிரத்தினம் பயப்படவில்லை.மேலும் இருவர் சென்சார் செல்லும் முன்பு அனுமதி பெறவேண்டிய இடங்களுக்கு சென்று வந்த பின்புதான் சென்சாருக்கு சென்றது.--

ஒடுக்கப்பட்டோரின் கதைக் களத்தை அவர் எடுக்கும் பொழுது அவரின் தைரியத்தை நீங்கள் நிச்சயம் பாராட்டுவீர்கள். இந்து கடவுளான ராமரை பல இடங்களில் அவர் விமர்சிக்கும் தைரியம் உங்கள் கண்களில் புலப் படவில்லை என்பது துரதிர்ஷ்டமே.--படத்தின் வெற்றிக்கு காரணமான அந்த இடங்கள் எது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.--

நான் சொன்ன களத்தை மனதில் வைத்து இன்னொரு முறை படம் பாருங்களேன்.. அன்புத் தோழியே, எனது கருத்தில் தவறு இருந்தால் மன்னியுங்கள்.. என்னைத் திருத்துங்கள்--மீண்டுமொருமுறை இந்த படத்தையா? Sad வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பது இது தான் Embarassed--
Back to top Go down
GoodPayan

GoodPayan


Posts : 167
Points : 235
Join date : 2010-06-30
Age : 39
Location : Chennai

இராவணன் - சொல்லப் படாதவை Empty
PostSubject: Re: இராவணன் - சொல்லப் படாதவை   இராவணன் - சொல்லப் படாதவை Icon_minitimeThu Jul 01, 2010 3:05 pm

//முதலில் பிறர் மனைவியை ஒரு வீரன் [போராளி] ஒருவனுக்கு ஈர்ப்பு ஏற்படுவதாக காட்டுவதே கேடுகெட்டதனம்.//
அந்த ஈர்ப்பு புனிதத்துவம் என்று நான் கூறவில்லை நண்பரே. ஆனால் உலகில் நடைபெறாத ஒன்றை அவர் கூறவில்லை. தன் மனைவியை தவிர இன்னொரு பெண்ணின் மீது ஈர்ப்பினை கொள்ளாத மனிதர்கள் உங்களை போல் மிகக் குறைவே. அந்த ஈர்ப்பை மிகக் கேவலமாக செயல் படுத்தாமல் இருத்தலே மனிதனாக இருப்பதற்கு போதுமானது. பெரும்பாலான மனிதர்களின் மனதில் குப்பை உள்ளது. அதை வெளிக்காட்டினால் தான் நாற்றம் எடுக்கும். மிகக் சிறந்த நடிப்பாற்றல் உடையவனே இந்த உலகில் நல்லவனாக பெயர் வாங்குகிறான்.
//விடுதலைப் போராட்டமா? காதலா? என்ற கேள்வியில் காதலே முக்கியம் என தீர்ப்பளிக்கிறார்//
விடுதலை போராட்டம் இந்தப் படத்தில் எங்கே கையாளப் பட்டிருக்கிறது, காதலிடம் தோற்றுப் போக.. இது ஒரு முறைத் தவறிய காதலை சொல்லும் படமே.. அதில் ஏன் உங்களுக்கு குழப்பம்..
//மணிரத்தினம் புதிதாக உருவாக்கி வெற்றி பெற்ற கதாபாத்திரம் அல்ல நண்பரே இந்த ஹேமந்த்//
கதாப்பத்திரங்களை உருவாக்க மணிரத்னம் தெய்வமா என்ன.. ஹேமந்த் கெட்டவரல்ல. ஆனால் மனைவியின் மன வலியையும் பொருட்படுத்தாத, தனது எதிரியை வெல்லும் வெறி மற்றும் வைராக்கியம் உடைய பாத்திரம் ஓரளவுக்கு புதிதே..
//மணிரத்னமோ ஒரு படி மேலே போய் தேவ் பிரகாஷ் மனைவியை சந்தேகப்பட்டதே எதிரியான பழங்குடி வீராவை அழிக்க தான் என புது விளக்கம் தந்து மொக்கையை கூர்மையாக்கி இருக்கிறார் என்பதே நிஜம்//
கூர்மையக்கியதே இன்னொரு கோணம் தானே நண்பரே..
//மேலும் இருவர் சென்சார் செல்லும் முன்பு அனுமதி பெறவேண்டிய இடங்களுக்கு சென்று வந்த பின்புதான் சென்சாருக்கு சென்றது//
மணிரத்னம் படம் என்பதால் தான் நீங்கள் சொன்ன மேலிடமும் சிலத் திருத்தங்களுடன் அனுமதித்தது.. MGR பாத்திரம் தான் கலைஞரின் பாத்திரத்தை விட உயர்வாகக் காட்டப்பட்டிருந்தது என்பதை நீங்கள் மறுக்கவில்லையே.. அந்த தைரியம் போதாதா..
//படத்தின் வெற்றிக்கு காரணமான அந்த இடங்கள் எது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்//
வெற்றிப் படம் என்று நான் வக்காலத்து வாங்கவில்லை. ஹேமந்த் பாத்திரம் ராமரை குறிக்கிறது என்பது உண்மையெனில் ராமரை விமர்சிப்பதும் நிஜமே.. ராவணனை உயர்த்தியிருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா.. நீங்கள் சொன்ன பிரமாண்ட விஷ்ணு சிலை காட்சியே போதுமானது..
//வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பது இது தான்//
படத்தின் களத்தை புரிந்துக் கொள்ளவில்லையெனில் எந்தப் படமும் வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவதை போலத்தான்.. அதனால் தான் பலருக்கு அன்பே சிவம் போன்ற படம் கூட வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவதாகத் தோன்றியது.. அதற்கென நான் படங்களை ஒப்பிடவில்லை.. களங்களை புரிந்துக் கொள்ளாததின் முடிவை உணர்த்தக் கூறினேன்..
நண்பரே.. எனது கருத்தை மதித்து இந்த அளவிற்கு அதனை விமர்சித்ததற்கு மிக்க நன்றி.. மிக்க மகிழ்ச்சி.. நான் ஒரு அரைவேக்காடாக இருந்தால் மன்னித்து விடுங்கள்.என்னை திருத்துங்களேன்..
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

இராவணன் - சொல்லப் படாதவை Empty
PostSubject: Re: இராவணன் - சொல்லப் படாதவை   இராவணன் - சொல்லப் படாதவை Icon_minitimeThu Jul 01, 2010 4:44 pm


goodpayan நண்பரே நீங்கள் யார் என்று தெரியவில்லை.ஆனால் உங்கள் கருத்தை நானும் எற்றுகொள்ளுகின்றேன் .
முற்றிலும் ஒரு வித்தியாசமான கோணத்தில் ராமன்-இராவணன்-சீதா கதாபத்திரங்களை நோக்கி அதனை செப்பமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர்.ஒரு கதையை இப்படி கட்டுடைப்பு செய்ய ஒரு அசாத்தியமான பரந்த அறிவு அவசியம்.அதை திரைப்படமாக எடுக்க மனோதிடம் வேண்டும்.இது இரண்டும் மணிரத்தினத்திடம் இருக்கிறது.இதுவரை இருந்த கோணத்தில் இருந்து கதையை அணுகுவதை விட இந்த கோணத்தில் கதையை நோக்கும் பொது படம் வெகு சுவாரசியமாக இருக்கும்.



இராவணன் - சொல்லப் படாதவை 20894210
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

இராவணன் - சொல்லப் படாதவை Empty
PostSubject: Re: இராவணன் - சொல்லப் படாதவை   இராவணன் - சொல்லப் படாதவை Icon_minitimeFri Jul 02, 2010 5:53 am

நண்பரே உங்களுக்கு முதலில் என் நன்றி.இங்கு ஒரு நல்ல விவாதம் நடக்க அடித்தளம் அமைத்ததற்கு.இப்போது தான் எனக்கு ப்ளோகில் எழுதவில்லை போரமில் எழுதுகிறோம் என்ற உணர்வே வருகிறது.

//முதலில் பிறர் மனைவியை ஒரு வீரன் [போராளி] ஒருவனுக்கு ஈர்ப்பு ஏற்படுவதாக காட்டுவதே கேடுகெட்டதனம்.//
அந்த ஈர்ப்பு புனிதத்துவம் என்று நான் கூறவில்லை நண்பரே. ஆனால் உலகில் நடைபெறாத ஒன்றை அவர் கூறவில்லை.

-->நீங்கள் பழங்குடி மக்கள் வாழ்க்கையில் பிறன்மனை நோக்கும் வழக்கம் உண்டா? அப்படிப்பட்டவனை பழங்குடி மக்களின் தலைவனாகவே காட்டியுள்ளார்,மணிரத்தினம்.

தன் மனைவியை தவிர இன்னொரு பெண்ணின் மீது ஈர்ப்பினை கொள்ளாத மனிதர்கள் உங்களை போல் மிகக் குறைவே. அந்த ஈர்ப்பை மிகக் கேவலமாக செயல் படுத்தாமல் இருத்தலே மனிதனாக இருப்பதற்கு போதுமானது. பெரும்பாலான மனிதர்களின் மனதில் குப்பை உள்ளது. அதை வெளிக்காட்டினால் தான் நாற்றம் எடுக்கும். மிகக் சிறந்த நடிப்பாற்றல் உடையவனே இந்த உலகில் நல்லவனாக பெயர் வாங்குகிறான்.

-->> நீங்கள் கூறும் இந்த கருத்து சரியே ஆனால் இந்த கதை களத்திற்கு பொருந்தவில்லை என்பதே உண்மை.

//விடுதலைப் போராட்டமா? காதலா? என்ற கேள்வியில் காதலே முக்கியம் என தீர்ப்பளிக்கிறார்//
விடுதலை போராட்டம் இந்தப் படத்தில் எங்கே கையாளப் பட்டிருக்கிறது, காதலிடம் தோற்றுப் போக.. இது ஒரு முறைத் தவறிய காதலை சொல்லும் படமே.. அதில் ஏன் உங்களுக்கு குழப்பம்..

-->> நீங்கள் படத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள் நண்பரே.படம் தொடங்கியவுடனே பழங்குடியினருக்கும் காவல் துறையினருக்கும் உள்ள போராட்டம் , காவல்துறையினர் மொத்தமாக எரித்துக்கொல்லபடுவது.அதன் தொடர்ச்சியாக வடஇந்திய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே வீரவை என்கவுன்ட்டர் செய்து பழங்குடியினரை அடக்க வருவது, வீரா ராகினியை கடத்துவது போன்ற காட்சிகள் பழங்குடியினரின் போராட்டத்திற்காகவா? இல்லை காதலுக்காகவா?

//மணிரத்தினம் புதிதாக உருவாக்கி வெற்றி பெற்ற கதாபாத்திரம் அல்ல நண்பரே இந்த ஹேமந்த்//
கதாப்பத்திரங்களை உருவாக்க மணிரத்னம் தெய்வமா என்ன.. ஹேமந்த் கெட்டவரல்ல. ஆனால் மனைவியின் மன வலியையும் பொருட்படுத்தாத, தனது எதிரியை வெல்லும் வெறி மற்றும் வைராக்கியம் உடைய பாத்திரம் ஓரளவுக்கு புதிதே..

-->>கதையின் நாயகியை வைத்தே நாயகனை கொள்வது தமிழ் துறை உலகத்திற்கு மிக பழையது.சமீபத்தில் வந்த சுப்ரமணியபுரம் இதே படத்திலேயே உச்சகட்ட காட்சி இதைவிட வழிமையாக சொல்லப்பட்டுள்ளது.

//மணிரத்னமோ ஒரு படி மேலே போய் தேவ் பிரகாஷ் மனைவியை சந்தேகப்பட்டதே எதிரியான பழங்குடி வீராவை அழிக்க தான் என புது விளக்கம் தந்து மொக்கையை கூர்மையாக்கி இருக்கிறார் என்பதே நிஜம்//
கூர்மையக்கியதே இன்னொரு கோணம் தானே நண்பரே..

-->> மொக்கையையா?

//மேலும் இருவர் சென்சார் செல்லும் முன்பு அனுமதி பெறவேண்டிய இடங்களுக்கு சென்று வந்த பின்புதான் சென்சாருக்கு சென்றது//
மணிரத்னம் படம் என்பதால் தான் நீங்கள் சொன்ன மேலிடமும் சிலத் திருத்தங்களுடன் அனுமதித்தது.. MGR பாத்திரம் தான் கலைஞரின் பாத்திரத்தை விட உயர்வாகக் காட்டப்பட்டிருந்தது என்பதை நீங்கள் மறுக்கவில்லையே.. அந்த தைரியம் போதாதா..

-->>அது மணிரத்தினத்தின் தைரியம் அல்ல கலைஞரின் பெருந்தன்மை.

//படத்தின் வெற்றிக்கு காரணமான அந்த இடங்கள் எது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்//
வெற்றிப் படம் என்று நான் வக்காலத்து வாங்கவில்லை. ஹேமந்த் பாத்திரம் ராமரை குறிக்கிறது என்பது உண்மையெனில் ராமரை விமர்சிப்பதும் நிஜமே.. ராவணனை உயர்த்தியிருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா.. நீங்கள் சொன்ன பிரமாண்ட விஷ்ணு சிலை காட்சியே போதுமானது..

-->>பழங்குடியினர் விஷ்ணுவை வழிபடுவதாக காட்டியதே அபத்தம்.ஹிந்தி வியாபாரத்திற்காக அமைக்கப்பட்ட்ட சிலை அது.மேலும் நீங்கள் குறிப்பிடும் அந்த காட்சி திரைகதையின் சருக்கலையே காட்டும்.உங்களுக்காக மீண்டும் என் கருத்து, நீங்கள் கூறும் இந்த கருத்தை மணிரத்தினம் நன்றாகவே படம் பிடித்திருப்பார் ,"கடவுளே அவர்களை (பழங்குடிகள்) கெட்டவர்களாகவே காட்டு. ஏன் எனக்கு இரக்கத்தை கொடுக்கிறாய். எனக்கு மீண்டும் கோபத்தை கொடு” என்கிறார் சாய்ந்த பிரமாண்ட விஷ்ணு சிலை முன்.அனால் வீரவை ஹீரோவாக காட்டவேண்டும் என்பதற்காக காட்சி அமைப்பில் பல இடங்களில் வீரா மீது ராகினிக்கு ஈர்ப்பு வருவது போல் அமைத்து படத்தின் போக்கையே விடுதலைப் போராட்டமா? காதலா? என்ற கேள்வியில் காதலே முக்கியம் என தீர்ப்பளிக்கிறார், படத்தின் தொய்வுக்கு இதுவும் ஒரு காரணம்.

//வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பது இது தான்//
படத்தின் களத்தை புரிந்துக் கொள்ளவில்லையெனில் எந்தப் படமும் வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவதை போலத்தான்.. அதனால் தான் பலருக்கு அன்பே சிவம் போன்ற படம் கூட வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவதாகத் தோன்றியது.. அதற்கென நான் படங்களை ஒப்பிடவில்லை.. களங்களை புரிந்துக் கொள்ளாததின் முடிவை உணர்த்தக் கூறினேன்..

-->>சிறிய திருத்தம் நண்பரே , படத்தின் களத்தை புரிந்துக் கொள்ளும் வகையில் அமைக்காதது இயக்குனரின் தவறே.அன்பே சிவம் படத்தை ராவணனுடன் ஒப்பிடவே வேண்டாம். அது வாழ்வியல் நெறிகளையும் யதார்த்தத்தையும்[இரண்டின் வித்தியாசத்தை] கூற எடுக்கப்பட்ட படம் , கமர்சியல் படமே அல்ல, ராவணன் போல் 100 கொடி பட்ஜெட்டில்.

நண்பரே.. எனது கருத்தை மதித்து இந்த அளவிற்கு அதனை விமர்சித்ததற்கு மிக்க நன்றி.. மிக்க மகிழ்ச்சி.. நான் ஒரு அரைவேக்காடாக இருந்தால் மன்னித்து விடுங்கள்.என்னை திருத்துங்களேன்.

-->>உங்களுடன் விவாதித்ததில் மிகவும் மகிழ்ச்சி.மேலும் பல இழைகளில் உங்களுடன் விவாதிக்க ஆர்வமாக உள்ளது.
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

இராவணன் - சொல்லப் படாதவை Empty
PostSubject: Re: இராவணன் - சொல்லப் படாதவை   இராவணன் - சொல்லப் படாதவை Icon_minitimeFri Jul 02, 2010 6:02 am

முற்றிலும் ஒரு வித்தியாசமான கோணத்தில் ராமன்-இராவணன்-சீதா கதாபத்திரங்களை நோக்கி அதனை செப்பமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர்.ஒரு கதையை இப்படி கட்டுடைப்பு செய்ய ஒரு அசாத்தியமான பரந்த அறிவு அவசியம்.

-->கதையை மட்டும் கட்டுடைப்பு செய்ய வில்லை.BOX OFFICE எனப்படும் பணப்பெட்டியையும் உடைத்து விட்டார் மணி.

அதை திரைப்படமாக எடுக்க மனோதிடம் வேண்டும்.இது இரண்டும் மணிரத்தினத்திடம் இருக்கிறது.இதுவரை இருந்த கோணத்தில் இருந்து கதையை அணுகுவதை விட இந்த கோணத்தில் கதையை நோக்கும் பொது படம் வெகு சுவாரசியமாக இருக்கும்

-->சுவாரசியமாக இருந்திருந்தால் படம் வெற்றிபெற்றிருக்கும்[ஒரு மொழியிலாவது-தமிழ், தெலுங்கு அல்லது ஹிந்தி].குறைந்த பட்சம் இவ்வளவு எதிர்ப்பையாவது சந்தித்து இருக்காது.

படம் பார்த்தீர்களா?
Back to top Go down
Sponsored content





இராவணன் - சொல்லப் படாதவை Empty
PostSubject: Re: இராவணன் - சொல்லப் படாதவை   இராவணன் - சொல்லப் படாதவை Icon_minitime

Back to top Go down
 
இராவணன் - சொல்லப் படாதவை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» என்ன சொல்லப் போகிறாய் - கவிதை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: