BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகாணாமல் போனவன் - ஜப்பானிய சிறுவர் கதை Button10

 

 காணாமல் போனவன் - ஜப்பானிய சிறுவர் கதை

Go down 
AuthorMessage
Tom Cruise




Posts : 149
Points : 448
Join date : 2010-06-30
Age : 32
Location : pondicherry

காணாமல் போனவன் - ஜப்பானிய சிறுவர் கதை Empty
PostSubject: காணாமல் போனவன் - ஜப்பானிய சிறுவர் கதை   காணாமல் போனவன் - ஜப்பானிய சிறுவர் கதை Icon_minitimeMon Jul 05, 2010 11:56 am

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி,காட்டுல வயசான தாத்தாவும் பாட்டியும் இருந்தாங்க. தினமும் காட்டுல இருக்கிற மரங்களை வெட்டி, விறகாக்கி அதை பக்கத்து கிராமத்தில வித்து வந்தார் தாத்தா. ஒரு நாள் மதியம் ரொம்ப களச்சு போய் சாப்பிட உக்காந்தார். பாட்டி அவருக்கு

கேழ்வரகு களி கொடுத்து அனுப்பி இருந்தாங்க. களிய கையில எடுத்ததும் களி
தவறி கீழ விழுந்து உருண்டு ஓடிடுச்சு. பாவம் தாத்தா, அந்த தள்ளாத வயசுல களிய துரத்திட்டு ஓடினார். களி ஒரு பொந்துக்குள்ள விழுந்துடுச்சு. அது எலி பொந்து போல இருந்துச்சு.அய்யோ இனி சாப்பாட்டுக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சார்.நல்ல பசி வேற. அப்ப திடீர்னு ஒரு அழகான எலி எட்டி பாத்து..”மிக்க நன்றி தாத்தா” அப்படின்னு சொல்லுச்சு.அட எலி பேசுதேன்னு பாத்தாரு.”நல்லா சாப்பிடுங்க எலி. அழகா இருக்கீங்களே” ன்னு சொன்னாரு. எலி சிரிச்சிட்டு..”நீங்க எங்க அரண்மனைக்கு வரீங்களா?”ன்னு கேட்டுச்சு.

“இந்த சின்ன பொந்துக்குள்ள நான் எப்படி வர முடியும்”ன்னு தாத்தா கீழ உக்கார்ந்துகிட்டாரு. கால் வலி இருந்துச்சு போல. “என் வாலை பிடிச்சிக்கோங்க தாத்தா.கண்ணை மூடிக்கோங்க” ன்னு சொல்லுச்சு எலி. வாலை பிடிச்சிகிட்டார்.கண்ணை மூடிக்கிட்டார்.

எங்கயோ பறக்கற மாதிரி இருந்துச்சு தாத்தாவுக்கு. “தாத்தா வாங்க வாங்க” அப்படி சத்தம் கேட்டு கண்ணை த் தொறந்தார் தாத்தா. எலிக்களோட அரண்மனை தான் அது.நிறைய தங்கம் இருந்தது. எலிகள் சமைத்துக்கொண்டு இருந்தது. சில எலிகள் ஓடி ஆடி விளையாடிட்டு இருந்துச்சு. சில எலிகள் சாப்பாட்டு பொருள்களை எங்கிருந்தோ எடுத்துட்டு வந்துச்சு. எங்க பாத்தாலும் தங்கமா இருந்துச்சு. பெண் எலி ஒன்னு வந்து “தாத்தா உங்களுக்கு பசிக்கும், இந்தாங்க சாப்பாடு” ன்னு சாப்பாடு கொடுத்தது. எலிகள் எல்லாம் பாட்டு பாடிட்டு இருந்துச்சு..

“நாங்கள் இங்கே எலிகள்
நல்ல நல்ல எலிகள்
பூனை சத்தம் வேண்டாமே
எங்கும் அமைதி வேண்டுமே
திலக்கலக்கா திலக்கலக்கா”

தாத்தா பாட்டு கேட்டுகிட்டே சந்தோஷமா சாப்பிட்டார். ராஜா போல இருந்த எலி ஒன்னு தாத்தாவுக்கு மூட்டை நிறைய தங்கம் கொடுத்து அனுப்பிச்சாம்.மறுபடியும் அதே எலி வாலை புடிச்சிக்கிட்டு,கண்ணை மூடிகிட்டு பறந்து அவர் வீட்டுக்கு வந்துட்டார்.

வீட்டுக்கு வந்த தாத்தா, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பாட்டிகிட்ட சொன்னாரு. தங்கத்தை எல்லாம் காண்பிச்சாரு.பக்கத்து வீட்டில இருந்த ஒருத்தன் இதை எல்லாம் கேட்டான். அதே பொந்திற்கு போய் ஒரு களி உருண்டைய போட்டான்.அதே எலி வந்துச்சு, அதே போலவே அவனை அவங்க அரண்மனைக்கு கூட்டிட்டு போச்சு.

“நாங்கள் இங்கே எலிகள்
நல்ல நல்ல எலிகள்
பூனை சத்தம் வேண்டாமே
எங்கும் அமைதி வேண்டுமே
திலக்கலக்கா திலக்கலக்கா”

எலிகள் பாடும் சத்தம்.அரண்மனையில எங்க பாத்தாலும் தங்கமா இருந்துச்சாம். இவனுக்கு பேராசை. ஒரு மூட்டை தங்கம் மட்டும் பத்தாது, இதை எல்லாம் எடுத்துக்கலாம்ன்னு யோசிச்சான்.பெண் எலி இவனுக்கு சாப்பாடு எடுத்து வரும் போது “மியாவ் மியாவ்” என சத்தம் போட்டான். எல்லா எலியும் பயந்து எங்க போச்சுன்னே தெரியல.கொஞ்ச நேரத்தில ஒரு எலியும் அரண்மனையில் இல்ல. எல்லா தங்கத்தையும் அள்ளி எடுத்தான். ஆனா அங்கிருந்து எப்படி வெளிய போறாதுன்னு தெரியல.இருட்டா மாறிடுச்சு. கத்தி அழுது பாத்தான். ஒருத்தரும் வரல.அவனை காணம்னு இன்னும் கூட தேடிட்டி இருக்காங்க.பாவம்.
Back to top Go down
 
காணாமல் போனவன் - ஜப்பானிய சிறுவர் கதை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» காணாமல் போன கனவுகள்!
» ~~Tamil Story ~~ ஆடுகள் காணாமல் போகின்றன
»  சின்னு மரம் - சிறுவர் கதை
» வியாதிகள் இல்லாத சிறுவர் உலகம்!
» ~~ Tamil Story ~~ தென்னாப்பிரிக்கா நாட்டு சிறுவர் நாடோடிக் கதை: பூமியின் கதை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Tamil Novel & Tamil Short Stories-
Jump to: