BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்! Button10

 

 அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!

Go down 
AuthorMessage
Tom Cruise




Posts : 149
Points : 448
Join date : 2010-06-30
Age : 32
Location : pondicherry

அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்! Empty
PostSubject: அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!   அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்! Icon_minitimeTue Jul 27, 2010 10:53 am

அதோ பார்; எல்லோரும் நடந்து
செல்கிறார்கள்,
நான் மட்டுமே
நீயின்றி இறந்து செல்கிறேன்!
உலகம் கைகாட்டிய
ஆயிரம் காரணங்களுக்கிடையே நீ
பிரிந்து விட்டாய் -
உனை மறக்க இயலாத ஒற்றை காரணத்தால்
நினைத்து நினைத்துருகி -
நாணற்றுப் போகிறேன் நான்!
உனக்கொன்று தெரியுமா..
உனக்காக நான் சிந்தாதக் கண்ணீரெடுத்து
உலகத்தையே நனைத்துவிடலாம்;
உனக்காகக் கனக்கும் இதயத்தில்
மலைகனமும் தாங்கிக் கொள்ளலாம்!
உனை உச்சரிக்காத பொழுதுகளை
மரணத்தை நோக்கிய பயனமெனலாம்;
நீயில்லாத வாழ்க்கையை – நான்
இறந்தும் -
வாழ விதித்த; விதி எனலாம்!
உன்னை காணாத பொழுதை
குருட்டு நகர்வெனலாம்;
உனை பிரிந்த தவிப்பை சொல்ல
வார்த்தையின்றி -
மௌன சோகம் கொள்ளலாம்!
உன்னிடம் பேசாத ஒரு வார்த்தையை
எனக்குக் கிடைக்காத நிம்மதி எனலாம்;
உன்னிடம் பேசி பேசி தீர்த்ததில்
இன்னும் ஏழு ஜென்மம் இருப்பினும் -
உனை நினைத்தே கடந்துப் போகலாம்!
உனை சந்திக்காத நாட்களை
நான் வாங்காத சிரிப்பெனலாம்;
நீயின்றி வாழும் நிலையை
என் பாவத்தின் சம்பளமென்று கொள்ளலாம்!
நீ அழைக்காத என் பெயரை
யாரும் அழைக்காத தனிமையிலிருந்து மாய்த்துவிடலாம்;
உன் குரல் கேட்டு விழிக்காத பொழுதை
நான் வாழாத நாட்களென்று -
நாளேட்டில் குறித்துக் கொள்ளலாம்!
நீயின்றி நீயின்றி அழும்
அழைக்கெல்லாம் எவர் வந்து
என்னை சமாதானம் செய்வார் -
நான் அழுது அழுது ஒழிந்த பின்
வேண்டுமெனில் -
உன் நினைவால் பயித்தியமானேனென்பார்!
உன் இதய குருதி கொண்டு
என் நினைவை அழித்துக் கொள்; பெண்ணே
நீயில்லாத வாழ்வை -
நானும் வாழப் போவதில்லை;
இறந்தேன் என்றே எண்ணிக் கொள்ளடிப் பெண்ணே!
Back to top Go down
 
அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை...
» ~~ நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்~~
» நான் பாரதியார்
» உன்னருகில் நான் வரவே..
» நான் ரசித்த கவிதை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: