BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்?.  Button10

 

 ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்?.

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்?.  Empty
PostSubject: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்?.    ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்?.  Icon_minitimeWed Aug 04, 2010 6:34 am

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்?.



இந்த கேள்வியை சில பிரபலங்களிடம் கேட்டால்- ஒரு கற்பனை.

ஒபாமா: எல்லாம் ஒரு மாற்றத்திற்கு தான்

ஜியார்ஜ் புஷ்: கோழி ரோட்டை கிராஸ் பண்ணியதைப் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. கோழி ரோட்டில் எங்க பக்கமா இல்லையா என்பது தான் கேள்வி. கோழி ஒண்ணு எங்க பக்கமா இருக்கணும் இல்லை எதிர் தரப்பா இருக்கணும். நடு வழியெல்லாம் ஒத்து வராது.

பில் கேட்ஸ்: நாங்க இப்போ தான் சிக்கன்2008 ஐ ரிலீஸ் பண்ணியிருக்கோம். இந்த கோழி ரோட்டை மட்டும் கிராஸ் பண்ணாது. முட்டை போடும் உங்க டாகுமெனட்ஸ்ஐ பையில் பண்ணும். இந்த சிக்கன் 2008 கிராஷ் ஆகவே ஆகாது.

ஐனஸ்டைன்
: கோழி ரோட்டைக் கடந்ததா அல்லது ரோடு கோழியன் கால்களுக்கு கீழே கடந்து சென்றதா?

நியூட்டன்: எனது மூன்றாவது விதிப்படி ஒவ்வொரு ரோட்டின் ஒரு பக்கத்திறகு எதிர புறம் இருந்ததால் கோழி ரோட்டை கடந்து சென்றது

கருணாநிதி: நான் இலங்கைத் தமிழர்களுக்கு அதரவாக ஏற்பாடு செய்திருந்த மனித சங்கிலியில் கலந்து கொள்ள கோழியும் பஙகேற்க ரோட்டை கடந்து சென்றிருக்கலாம். என்னே இந்த கோழியின் தமிழ் பற்று.

ஜெயலலிதா: இந்த மாதிரி கோழிகளை ரோட்டைக் கடக்க செய்து அதனால் விளையும் ஆபத்துகளால் சட்ட ஒழுங்கு முறையைக் காக்க தவறிய கருணாநிதி பதவி விலக வேண்டும்.

சீமான்: நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு ஆதரவாக உலகத் தமிழர் அனைவரும் கடல் கடந்து இலங்கை செல்ல வேண்டும் என்பதை சுட்டக் காட்டும் முகமாக கோழி ரோட்டைக் கடந்து சென்றது என்பேன்.

வடிவேலு: கடந்துட்டான்யா கடந்துட்டான்யா கறி சமைச்சு சாப்பிடாலும்னு கோழியை எடுக்கப் போனா இந்த நாதாரி கோழி ரோட்டைக் கடந்து போயிடுச்சே இப்போ நான் என்ன பண்ணுவேன்?

விவேக்: இந்த தமிழ் நாட்டு மக்களைத் திருத்தவே முடியாதா? கோழியை ரோட்டை கிராஸ் பண்ண விட்டா மழை வரும்னு நம்புறாங்களே? எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தமாட்டாங்கீளாடா?

கமல ஹாஸன்: ஹா ஹா ஹா நான் தசாவதாரம் படத்தில 10 வேஷத'தில நடிச்சாலும் நடிச்சேன் ரோட்டைக் கடந்து போறது கோழி இல்லை கமல ஹாஸன் தான் கோழி வேஷத்தில போறாருங்கறாங்க.

ரஜனி காந்த்: கண்ணா கோழி ரோட்டைக் கடந்தாலும் சரி அல்லது ரோடு கோழியைக் கடந்தாலும் சரி நான் எப்போ அரசியலுக்கு வருவேன்னு யாராலும் சொல்ல முடியாது.


ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்?.  With_r56
Back to top Go down
 
ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்?.
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இதுவும் கடந்து போகும்....
» கோழி வறுவல்
» கோழி சூப்
» கொங்கு கோழி வறுவல்
»  தேன் கோழி கபாப்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: