lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: ***பெண்*** Sat Aug 07, 2010 3:43 am | |
| பெண்ணை மலராக காற்றாக மேகமாக உவகைப் படுத்தாதே!
அது அவளை முள்ளாக புயலாக அடை மழையாக மாற்றி விடும்!
பெண் என்ற அடிமைச் சொல்லையும் ஆண் என்ற ஆதிக்கச் சொல்லையும் விட்டொழி!
பெண் என்பவள் ஆளுமைக்குட் பட்டவள் அல்ல இதை முதலில் பெண்ணே நீ புரிந்து கொள்!
உன் மனதில் பதியப்பட்ட அடிமைத் தனங்களின் ஆணி வேரைப் பிடுங்கி எறிந்து விட்டு வா!
உலகம் உனக்கும் சொந்தம் தான்!
நன்றி, முருகவேல். | |
|