BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி  Button10

 

 ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி

Go down 
3 posters
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி  Empty
PostSubject: ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி    ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி  Icon_minitimeTue Oct 26, 2010 4:39 am

ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி




எந்திரன் படத்தின் சிறப்பு பற்றியும் அதன் வரலாறு காணாத வெற்றி பற்றியும் அனைத்து ஊடகங்களும் பத்திரிக்கைகளும், பதிவர்களும் எழுதி தள்ளி கொண்டு உள்ளனர். அதுவும் அமெரிக்காவில் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்து (டைட்டானிக், அவதார் போன்ற படங்களுக்கு சவால் விடும் வகையில்?) வசூலை கொட்டி உள்ளதாக பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆங்கில படங்கள் அமெரிக்கா முழுவதும் பல்லாயிரம் தியேட்டர்களில் வெளியிட பட்டு பெற்ற வசூலை எந்திரன் சில தியேட்டர்களில்(100 க்கும் குறைவான) மட்டும் வெளியிட பட்டு வசூலை குவித்து சாதனை புரிந்திருக்க வேண்டும்.

தற்போது எந்திரன் படம் ஹாலிவுட்டையும் அதனையும் தாண்டி அமெரிக்க அதிபர் வரை கலக்கிய செய்தியை யாரும் வெளியிட வில்லை.நம்ப முடியவில்லையா? ஆனால் அது தான் உண்மை!அமெரிக்க வரலாற்றில் இது வரை இல்லாதவாறு, முதன் முதலாக ஒரு வளரும் நாட்டு படம் வசூல் சாதனையில் முதலிடம் பிடித்தது ஒபாமா காதுக்கு போகாமலா இருக்கும்?. இந்த செய்தியை கேட்டதும் முதலில் அவர் அதிர்ந்து போயிருக்கிறார். ஏற்கனவே உற்பத்தி தொழில் வேலை வாய்ப்புகள் சீனாவுக்கும் சேவை தொழில் வேலை வாய்ப்புகள் இந்தியாவிற்கும் சென்று கொண்டிருப்பதால் அமெரிக்க வேலை வாய்ப்பு குறைவதோடு இறக்குமதி அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கால கட்டத்தில் அமெரிக்கா, உலகுக்கே பெரிய அளவில் ஏற்றுமதி செய்து வரும் தொழில் ஹாலிவுட் படங்களாக தான் இருக்கும்(ஆயுதம் மற்றும் மென்பொருள் புராடெக்ட்ஸ் தவிர). தற்போது தமிழ் படத்தால் அதற்கும் ஆப்பு வந்து விட்டதால் அவுட்சோர்சிங்க்கு தடை விதிப்பது போல் தமிழ் படத்துக்கும் தடை விதிக்கலாமா என்று யோசித்து வருவதாக தெரிகிறது.இவ்வாறு தடை விதித்தால் உண்மையான நஷ்டம் அடைய போவது படத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்காத அமெரிக்க ரசிகர்கள் தான்!

இந்த தடை Sun Picturesக்கு படத்துக்கு மட்டும் பொருந்துமா? அல்லது ரஜினி படத்துக்கு மட்டும் பொருந்துமா என்று தெரியவில்லை. எப்படியும் ஒபாமா அடுத்த மாதம் இந்தியாவிற்கு வரும் போது தன் எதிர்ப்பை தமிழக அரசு நிச்சயம் தெரிவிக்கும் என்று தெரிகிறது..(இந்த படத்தின் உண்மையான வெற்றிக்கு காரணம் ஐஸ்வர்யா ராய் கட்டியிருந்த சேலையின் அழகு தான் போன்ற உண்மைகளை Goody nd Navinesh போன்றவர்கள் அமெரிக்க அதிபருக்கு உணர்த்தினால் நன்றாக இருக்கும்.)

இது ஒருபுறமிருக்க அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகள் எல்லாம் எந்திரன் வெற்றியால் அரண்டு போய் உள்ளனர். என்னடா இது பன்னாட்டு கம்பெனியிக்கும் எந்திரன் வெற்றிக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கீறிற்களா? பன்னாட்டு கம்பெனியினர் தங்களது நுகர்வு கலாச்சாரத்தை வளரும் நாடுகள் மீது திணிக்க ஹாலிவுட் படங்களை தான் முக்கிய ஆயுதமாக பயன் படுத்துகிறார்கள். தற்போது எந்திரன் வெற்றி ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்கி உள்ளது. இனி ஹாலிவுட் படங்களை தமிழ் படங்களோடு போட்டி போட முடியுமா என்று சந்தேகம் தலை தூக்கி உள்ளது.

இனி தமிழ் படங்கள் ஹாலிவுட்டை ஆக்கிரமித்தால் வளரும் நாடுகளுக்கு தங்கள் கலாச்சாரத்தை திணிக்க வேறு ஒன்றை தேட வேண்டுமே என்ற கவலையில் இருக்கிறார்கள்.(சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஹாலிவுட் நிறுவனக்களை விட அழகாக இந்த வேலையை செய்யும் என்று யாரோ கூறுவது கேட்கிறது) அவர்கள் கவலை அடைவதோடு நிற்காமல் தமிழ் படங்களை உலகளவில் தடை செய்ய ஒபாமாவுக்கு தங்களது பலம் வாய்ந்த லாபிகள்(lobby) மூலம் முயன்று வருகிறார்கள். அமெரிக்காவில் கூடிய விரைவில் தேர்தல் வருவதால் அதிபருக்கு கிடைக்கும் அழுத்தத்தின் அளவும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

அமெரிக்கா என்றால் முதலாளித்துவம் தானே. லாபத்துக்காக எந்த மாற்றத்தையும் உடனடியாக உணர்ந்து கொண்டு செயல் படுபவர்கள் தானே அமெரிக்க முதலாளிகள். தமிழ் படங்களின் இந்த அசுர வளர்ச்சியை கண்டு ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் டைரக்டர்கள் மற்றும் தமிழ் நடிகர்கள் வீடுகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். உதாரணமாக கடுமையான முயற்சிக்கு பிறகு ஹாலிவுட்டின் முன்னனி நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் தமிழ் இயக்குனர் முருகதாசை வளைத்து விட்டது.

இது ஒருபுறமிருக்க இந்த வருட ஆஸ்கார் விருது தங்களுக்கு கிடைக்கும் என்று தவம் இருந்து கொண்டிருந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் நினைப்பில் எந்திரன் படத்தின் ஆங்கில் 3-D பதிப்பு மண்ணை வாரி போட்டு விட்டது. ஒட்டு மொத்த ஆஸ்கார் விருதுகளையும் எந்திரன் வாங்கி குவிக்க போவதை பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கை தட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டு விட்டனர் ஹாலிவுட்டின் முன்னனி கலைஞர்கள்!.

அது மட்டுமல்ல அவதார் படத்தின் அடுத்த பாகத்தை எப்படி எடுக்கலாம் என்று ஜேம்ஸ் கேமரூன் நினைத்திருந்தாரோ அதே ஓட்டத்தில் அதைவிட சிறப்பாக எந்திரன் வெளிவந்து விட்டதை கண்டு அதிர்ந்து போய் உள்ளார் கேமரூன். சாதாரணமாக ஒரு படம் எடுக்க பல வருடங்கள் சிந்திக்கும் கேமரூன், தன் சிந்தனை எல்லாம் செயல் வடிமாக எந்திரன் வெளிபடுத்தி விட்டதால் புது கதை பற்றி சிந்தித்து படம் எடுக்க இன்னும் பல காலம் பிடிக்கும்.

இதைவிட முத்தாய்ப்பான செய்தி massachusetts institute of technologyயின் Robotics துறை தலைவர் கூறியிருக்கும் செய்தி. பல ஆண்டுகளாக பற்றி மண்டையை பிய்த்து கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தவரின் பல கேள்விகளுக்கு எந்திரன் படத்தில் ரஜினி காந்த் செய்யும் ஆராய்ச்சியை பார்த்த பின்பு விடை தெரிந்து விட்டதாம். ஆக எந்திரன் ஒரு படம் அல்ல. பல்கலைகழகங்களுக்கே வைக்க வேண்டிய பாடம் இதே பல்கலை கழகத்தை சேர்ந்த Disaster Management Instituteஇன் பேராசிரியர்கள் சுனாமிக்கான மூல காரணத்தை கண்டு பிடிக்க முடியாமல் திணறிய போது, கமலின் தசாவதாரம் படம் மூலம் தில்லை வாழ் அந்தணர்களை சோழ மன்னன் கொடுமை படுத்தியதும், நாராயண மூர்த்தியை கடலில் போட்டதும் தான் சுனாமிக்கான மூல காரணம் என்பதை String Theory மூலம் அறிவியல் பூர்வமாக நிருபித்து அறிவியல் அறிஞ்சர்களிடம் பாராட்டை பெற்றது உங்களுக்கு நினைவிருக்களாம்.

உலகம் முழுதும் இவ்வாறாக எந்திரன் கலக்கி கொண்டு இருந்தாலும் இந்தியாவில் டிக்கெட் விலை காரணமாக ஏழை மக்களால் இந்த படத்தை பார்க்க முடியவில்லை. இன்றைய தேதியில் எந்திரன் படத்தை பார்க்காதவர்களை பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் உள்ள தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை பார்ப்பது போல் கேவலமாக பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எந்திரன் படத்தை பார்ப்பதையும் இன்றைய உணவு, தொலைகாட்சி போன்று அடிப்படை தேவையாக மாறி உள்ளதால் தமிழக அரசு மொத்தமாக மார்க்கெட் விலைக்கு எந்திரன் டிக்கட்டுகளை வாங்கி மானிய விலையில் ஒரு ரூபாய்க்கு ஒரு டிக்கெட் என்று ஏழைகளுக்கு வினியோகிப்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

ரஜினி காந்த இவ்வாறாக ஹாலிவுட்டையே கலக்கி தமிழக சூப்பர் ஸ்டார் அந்தஸ்திலிருந்து ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்து விட்டார் என்றால் பொய்யாகாது.

பின் குறிப்பு: எல்லோரும் எந்திரன் பற்றி பெரிதாக பில்ட் அப் கொடுத்து எழுதுகிறார்களே. நானும் முயன்றால் என்ன? என்று நினைத்ததால் தான் இந்த பதிவு. பெரும்பான்மையான செய்திகள் கற்பனை தான்(இதை போடா விட்டால் இதையும் உண்மை செய்தியாக வலையுளகில் உலா வந்து விட போகிறது என்ற பயம்?). எந்திரன் படம் பார்த்தேன் கிராபிக்ஸ் நிச்சயம் உலக தரத்தில் இருந்தது.








Back to top Go down
GoodPayan

GoodPayan


Posts : 167
Points : 235
Join date : 2010-06-30
Age : 39
Location : Chennai

ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி  Empty
PostSubject: Re: ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி    ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி  Icon_minitimeSun Nov 14, 2010 4:43 pm

Machi.. Engal Purinjikitu, Endhiran la edhu engala kavarnthadhu nu ulagathuku theria paduthina unnai ninacha pullarikuthu machi.. Nanben da nee......






























( Enna panrathu.. ippadi parattalana, innoru post la innum enga manathai vaangiruvaan.. )
Back to top Go down
charles




Posts : 14
Points : 37
Join date : 2010-05-22

ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி  Empty
PostSubject: Re: ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி    ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி  Icon_minitimeSun Nov 14, 2010 8:05 pm

dai machi neeum navinum ma hahaha................super appu superb........................ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி kikikikikikkikikikikஉண்மைகளை Goody nd Navinesh போன்றவர்கள் அமெரிக்க அதிபருக்கு உணர்த்தினால் நன்றாக இருக்கும்.hhhhehehehe
Back to top Go down
Sponsored content





ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி  Empty
PostSubject: Re: ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி    ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி  Icon_minitime

Back to top Go down
 
ஒபாமாவை அதிர வைத்த எந்திரன் வெற்றி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அதிர வைக்கும் நோய் !
» ~~ ப்ரிஜ்ஜில் வைத்த பொருட்களை சாப்பிடுவது தவறா?~~
» எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!!!
» எந்திரன் ~~ சிறுகதைகள்
» எந்திரன் Nothing but Graphics...Special !!!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: