BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~பூச்சூடினாயா என்று கேட்டவனே!~~ Button10

 

 ~~பூச்சூடினாயா என்று கேட்டவனே!~~

Go down 
AuthorMessage
Swaarasya
Administrator
Administrator
Swaarasya


Posts : 683
Points : 1718
Join date : 2010-05-08
Location : WonderLanD

~~பூச்சூடினாயா என்று கேட்டவனே!~~ Empty
PostSubject: ~~பூச்சூடினாயா என்று கேட்டவனே!~~   ~~பூச்சூடினாயா என்று கேட்டவனே!~~ Icon_minitimeSat Nov 20, 2010 7:41 am

எல்லா அம்மாக்களும்
உறங்கப்போகிற பொழுது
கடவுள் விழித்துக் கொள்கிறார்
ரகசியம் புதைந்துகிடக்கும்
அம்மாச்சியின் சுருக்குப்பைகளை
தொலைக்காட்சிப் பெட்டியில்
தேடித் தேய்கின்றன நர்சரி விரல்கள்

அதிர்கிற ஒவ்வொரு பறையிலும் தேடுகிறேன்
அடிமாடாக கடன்காரன் இழுத்துச்சென்ற
என் வீட்டுக் காளைகளை.

ஆம்புலன்ஸ் சத்தமின்றி
கடக்க முடியவில்லை
ஓரிரவையேனும்.

சாராயவாடை பீடிநாற்றம்
வியர்வை வீச்சம் என
புடைசூழ வருகிற நீதான்
திட்டுகிறாய் பூ வைத்து வராததற்கு.

எல்லா பரபரப்பையும்
கேலி செய்கிறான்
சாலையோரவாசி.

வழக்கமாக அப்பாவுடன்
சித்தாள் வேலைக்கு வருகிற
முத்துப்பேச்சி மகளுக்கும்
எனது முகச்சாடை.

திருடன் தூக்கி எறிகிற
எல்லா பர்சுகளிலும்
இருக்கத்தான் செய்கிறது
ஏதாவது ஒரு பெண் படமும்
ஒருசில விசிட்டிங் கார்டுகளும்.

தொட்டுப்பேசும் நம் சந்திப்புகளில்
சந்தேக நிழல் படர விடுகிறார்
சற்றுமுன்
கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்
நட்பு குறித்து
வாய்கிழியப் பேசிய பேராசிரியர்.


~~பூச்சூடினாயா என்று கேட்டவனே!~~ 1194605cbz0yxuila
Back to top Go down
 
~~பூச்சூடினாயா என்று கேட்டவனே!~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» விமர்சனம் என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! - பெண்ணியா
» இந்த நாளில் தமிழன் விழ்ந்தான் என்று வரலாற்றில் எழுதப்படக்கூடாது..
» ~~ Tamil Story ~~ 'நேற்று’- என்று ஒன்று இருந்தது
» முத்துசாமிக்கு என்ன மனக்குறை என்று எனக்கு தெரியாது-ஜெயலலிதா
» மணி ரத்னம் இயக்கியுள்ள ராவணன் படத்துக்கு பல விருதுகள் குவியும் என்று கூறினார் வைரமுத்து.

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: