BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஇப்படித்தான் இன்று வன்னிக் காதல் Button10

 

 இப்படித்தான் இன்று வன்னிக் காதல்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

இப்படித்தான் இன்று வன்னிக் காதல் Empty
PostSubject: இப்படித்தான் இன்று வன்னிக் காதல்   இப்படித்தான் இன்று வன்னிக் காதல் Icon_minitimeWed Mar 17, 2010 7:22 am

இப்படித்தான் இன்று வன்னிக் காதல்
கண்ணா..... வருவாயா.......?
காதல் முத்தம் தருவாயா.....?
உன்னைப் பார்த்த மயக்கம்.
இன்னும் போகவில்லை.
விழியில் தவழும் கண்ணீர்.
விரைவில் ஆறாய் மாறும்.
புவியில் வாழ்ந்த காலம்.
பூவாய் மாறிப் போகும்.

புயலே........... புயலே...........!
ஏன் இந்தக் கோபம்.
கடலே........... கடலே...........!
ஏன் இந்தத் தாகம்.
என் காதல் உடைந்து
கல்லறை வாசல் செல்கிறது. - உன்
பாதம் பட்ட இடமெல்லாம்
படுத்து உறங்குகிறேன் இன்று.
பண்ணிசை மன்னனே...... உன்
பாட்டு என்னிடம்............!!!

மழையே.......... மழையே........!
ஏன் இந்த சோகம்.
மனமே............ மனமே............!
ஏன் இந்த வாதம்.
வாழ்வில் ஒரு படி
வாழவில்லை என் காதல்.
பூவின் மணம் போல்
பூக்க வில்லை நம் காதல்.
தேனே.......நீ........ எங்கே.......?
தேடுகிறேன்........உன் பாதம்...!!

விதியே...........விதியே..........!
ஏன் இந்தக் கோலம்.
சதியே.......... சதியே...........!
ஏன் இந்தப் பாவம்.
திரி கொண்ட தேசம்
தீர்ப்புக் கிடைக்கவில்லை இன்னும்
வெறி கொண்ட வேதம்
வெந்து போனது எம் தேசம்
மனமே.......... நீ உள்ள தூரம்
என்னை அழைக்க மறந்து விடாதே ...!!

எரி குண்டே ....... எரி குண்டே.......!
ஏன் இந்த நாசம்
வான் குண்டே......வான் குண்டே......!
ஏன் இந்த அகோரம்.
கூடு விட்டு கூடு வந்த
நம் காதல் சேர முன்.
என் இதயத்தைப் பறித்துவிட்டாயே.
இதயமில்லாக் குண்டே.....
இனி என் வாழ்வு
இருட்டுக்குள் சங்கமம் தனா...?...?...?
Back to top Go down
 
இப்படித்தான் இன்று வன்னிக் காதல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» காதல்-சங்கம் மருவிய காலம் முதல் இன்று வரை...
» ~~ Tamil Story ~~ கிஷான்னு ஒரு காதல் கிறுக்கனும், அருணானு ஒரு காதல் கிறுக்கியும்
» இன்று......... 25.6...
» இன்று... 26.6....
» இன்று ஒரு தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: