BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in*~*கிளாமராக நடிப்பதில் தவறில்லை! - டாப்ஸி*~* Button10

 

 *~*கிளாமராக நடிப்பதில் தவறில்லை! - டாப்ஸி*~*

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

*~*கிளாமராக நடிப்பதில் தவறில்லை! - டாப்ஸி*~* Empty
PostSubject: *~*கிளாமராக நடிப்பதில் தவறில்லை! - டாப்ஸி*~*   *~*கிளாமராக நடிப்பதில் தவறில்லை! - டாப்ஸி*~* Icon_minitimeSun Apr 10, 2011 2:59 am

கிளாமராக நடிப்பதில் தவறில்லை! - டாப்ஸி



*~*கிளாமராக நடிப்பதில் தவறில்லை! - டாப்ஸி*~* Tapasee-pannu-396


கோடம்பாக்கத்தின் சூப்பர் நிலவு டாப்ஸி 'வந்தான் வென்றான்' இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படுகுஷியில் இருந்தார். குஷிக்குக் காரணத்தை அவரே சொன்னார்.

"என்னோட தெலுங்கு படத்தை பார்த்துட்டு ரஜினி சார் 'யார் இந்தப் பொண்ணு'ன்னு தேடிக்கிட்டே இருந்திருக்கிறார். 'ஆடுகளம்' தமிழ்ல என்னைப் பார்த்ததும் 'அட இந்தப் பொண்ணு'ன்னு சர்ப்பரைஸாகிட்டார். என்னைப் பார்த்ததும் கை குலுக்கி 'குட் ஒர்க்'ன்னு பாராட்டினார். அதை அப்பப்ப நினைச்சு சந்தோஷப்பட்டுப்பேன்" என்றார்.

ஜீவாவோட ஸ்டில்ஸ்ல நல்லா நெருக்கம் காட்டியிருக்கீங்களே..?

இதென்ன பொறாமையான கேள்வி! படத்துக்கும் என் கேரக்டருக்கும் அப்படியொரு இன்டிமஸி தேவைப்பட்டது. ஜீவாவும் நானும் சேர்ந்து ஸ்பாட்ல அப்படியொரு கூத்தடிப்போம். நான் வசனம் பேசும்போது தப்பா பேசிட்டா அவ்வளவுதான் ஷாட் முடிஞ்சதும் விழுந்து விழுந்து சிரிச்சு என்னை டென்ஷன் பண்ணுவார். என்னன்னு தெரியாம முழிப்பேன். அப்புறம் டைரக்டர் அண்ணன் வந்து அதுக்கு அர்த்தம் சொல்வார். எனக்கு ரொம்ப தர்மசங்கடமா போயிடும்.

அமிதாப் கூட நடிக்கிறீங்களாமே..?

அப்படி ஒரு சான்ஸ் வந்தது. ஆனா என்னால தேதி குடுக்க முடியல. தெலுங்குப் படம், 'வந்தான் வென்றான்'ன்னு பிஸியாகிட்டேன். அதுக்குள்ள 'இந்திக்குப் போயிட்டேன். படம் ஹிட்டு'ன்னு என்னமா நியூஸ் பரவுது!

ப்யூட்டி கான்டஸ்ட்ல கலந்துகிட்டீங்களே, அடுத்து முயற்சி பண்ணினா உலக அழகி பட்டத்தை ஜெயிக்கலாமே..?

2008ல 'மிஸ் இண்டியா' போட்டியில கலந்துக்கிட்டேன். அதுல அழகிய புதுமுக அழகிப் பட்டமும் பெஸ்ட் ஸ்கின் ப்யூட்டின்னும் இரண்டு அவார்டு கிடைச்சது. அதாவது வெள்ளாவி பொண்ணுன்னு 2008லேயே சொல்லிட்டாங்க ஜி.

மோகன் பாபுவோட படத்துல நடிக்கிறதுல ஏதோ தகராறுன்னு செய்தி வந்ததே?

அய்யோ... அதெல்லாம் ஒண்ணும் கிடையாது.

தெலுங்கில் மட்டும் கிளாமராக நடிக்கிறீர்களே?

அதிகமான ரசிகர்களிடம் நம்மை கொண்டு செல்வது கிளாமர் வேடங்கள்தான். அதற்காக வெறும் கிளாமர் வேடங்களில் மட்டும் நடிக்க மாட்டேன். நடிப்புக்கும் ஸ்கோப் இருக்கும் வேடங்களைதான் நான் தேர்வு செய்து நடிக்கிறேன்.

ரசிகர்களின் ஆதரவை பெற்றால்தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். சினிமாவில் நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. அதற்குள் என்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இது எனது ஆரம்பக் கட்டம். அதனால் கிளாமராக நடிப்பதில் தவறில்லை. ஆனால், கிளாமர் தற்காலிகமானதுதான் என்பதும் எனக்கு தெரியும். முதலில் என்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு விருது பெறும் வகையிலான வேடங்களில் நடிப்பேன்.
Back to top Go down
 
*~*கிளாமராக நடிப்பதில் தவறில்லை! - டாப்ஸி*~*
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை...

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: