BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபுதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Button10

 

 புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்

Go down 
2 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Empty
PostSubject: புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்   புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Icon_minitimeThu Mar 18, 2010 6:22 am

புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் C17das10[img][/img]
புதிய தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய சட்டப் பேரவை.
சென்னை, மார்ச் 17: புதிய சட்டப் பேரவையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (2010-2011) வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.

நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்கிறார். மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டம், வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2010-2011-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை புதிய சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக, சட்டப் பேரவை மண்டபத்தை தயார் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

பல்வேறு சலுகைகள்: தமிழக சட்டப் பேரவைக்கு 2011-ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, இப்போது தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையே,தேர்தல் முன்பு திமுக அரசு தாக்கல் செய்யும் முழுமையான நிதிநிலை அறிக்கையாக இருக்கும். எனவே, அதில் ஏராளமான சலுகைகளும், அறிவிப்புகளும் வெளியாகும் எனத் தெரிகிறது. "மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கு தனித் திட்டத்தை மாநில அரசு உருவாக்கும்' என கூறப்படுகிறது.

நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கு முன்பாக, வணிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் நிதியமைச்சர் க.அன்பழகன் ஆலோசனை நடத்தினார்.

ஒருவார இடைவெளிக்குப் பின்...பென்னாகரம் இடைத் தேர்தலை முன்னிட்டு, நிதிநிலை அறிக்கை மீதான விவாதத் தேதி மாற்றி அமைக்கப்படும் என்று தெரிகிறது.

நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. இதன்பின், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பென்னாகரம் இடைத் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்கின்றனர். இதனால், ஒருவார இடைவெளிக்குப் பின் அதாவது மார்ச் 26-ம் தேதிக்குப் பிறகு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்பின், துறை வாரியாக மானியக் கோரிக்கைகளும் அவற்றின் மீதான விவாதமும் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

பேரவை மண்டபம் தயார்: நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் வகையில், சட்டப் பேரவை மண்டபம் தயாராகி உள்ளது. மண்டபத்தில் தரை மற்றும் சுவர் விரிப்புகளை அமைக்கும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.

இதனிடையே, கோட்டையில் உள்ள சட்டப் பேரவைச் செயலகத்தில் இருந்து கோப்புகள், முக்கிய புத்தகங்கள் அடங்கிய தளவாடச் சாமான்கள் புதிய சட்டப் பேரவைக்குக் கொண்டு வரப்படுகின்றன. புதிய சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை என்பதால் அனைத்து தரப்பினரிடமும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Empty
PostSubject: TN Budget-2010-2011 // பட்ஜெட்-2010-2011   புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Icon_minitimeFri Mar 19, 2010 3:16 pm

-வரி விலக்கு, வரிக் குறைப்பு சலுகைகள் 1.4.2010 முதல் அமலுக்கு வரும்.

-ஆணிகள், வாசர்கள், மொசைக் சிப்ஸ்கள், பிளாஸ்டிக் புகைப்படச் சட்டங்கள் மீதான வரி 4 சதவீதமாக குறைப்பு

-அரவாணிகள் நலனுக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு

-திடக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு வரி விலக்கு.

-கோவையில் தகுதி படைத்த பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் ஒதுக்கீடு.

-வழக்கறிஞர் நல நிதிக்கு ரூ. 2 கோடி

-எம்.கே.தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாடும்.

-ரூ. 100 கோடியில் 1100 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

-திண்டுக்கல்லில் விருப்பாச்சி கோபால் நாயக்கருக்கு நினைவிடம் அமைக்கப்படும்.

-செங்கோட்டையில் தியாகி வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டப்படும்.

-நெல்லையில், அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த ஒண்டி வீரருக்கு நினைவிடம் அமைக்கப்படும்.

-ஓமந்தூர் கிராமத்தில், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு மணி மண்டபம் கட்டப்படும்.

-உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு.

-கோவையில் ரூ. 20 கோடியில் செம்மொழித் தமிழ்ப் பூங்கா அமைக்கப்படும்.

-இலங்கை தமிழர் நலனுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு

-வரும் கல்வியாண்டு முதல் தமிழ் வழி பொறியியல் கல்வி அறிமுகம்.

-வரி வருவாயில் தென் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கீடு குறைப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

-மேலும் 22 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படும். நூல்களின் எண்ணிக்கை, பயன்கள், சிறப்புகளுக்கேற்ப மரபுரிமையர்க்கு பரிவுத் தொகை வழங்கப்படும்.

-அரசு அலுவலகங்களை கம்ப்யூட்டர்மயமாக்கவும், நெட்வோர்க்குக்குள் கொண்டு வரவும் ரூ. 22 கோடி ஒதுக்கீடு

-ஆற்றுப் படுகைகளில் தேக்கு மரம் வளர்க்கும் திட்டத்திற்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு.

-பனை வாரியம் கொள்முதல் செய்யும் பதநீருக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 10 ஆக அதிகரிக்கப்படும்.

-ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ. 394 கோடி ஒதுக்கீடு

-ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவிக்கு ரூ. 198 கோடி ஒதுக்கீடு

-பொறியியல் படிக்கும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும்.

- 20,000 ஆதி திராவிட, பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

-விசைத்தறி நெசவாளர்களுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்திற்காக ரூ. 78 கோடி ஒதுக்கீடு.

-சாலை விபத்துகளை தடுக்கும் திட்டத்திற்கு ரூ .40 கோடி ஒதுக்கீடு

-சென்னை கோயம்பேட்டில் புதிய கழிவு நீர் சுத்திக்கரி�பு மையம் அமைக்கப்படும்

-வரி நிலுவைகளை தீர்வு செய்ய புதிய திட்டம்

-பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ரூ. 459 கோடி ஒதுக்கீடு
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Empty
PostSubject: Re: புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்   புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Icon_minitimeFri Mar 19, 2010 3:17 pm

-மீனவர் நலனுக்கு ரூ. 193 கோடியில் திட்டங்கள்.

-முதியோர், ஆதரவற்றோருக்கு மாத உதவித் தொகை வழங்க ரூ. 1,002 கோடி ஒதுக்கீடு

-பள்ளிகளில் வாரம் 3 முட்டைகள் வழங்க திட்டம். இதற்காக ரூ. 178 கோடி ஒதுக்கீடு

-சென்னை அண்ணா சாலையில் ரூ. 500 கோடியில் புதிய மேம்பாலங்கள்

-தென் மாவட்ட மன நோயாளிகள் சிகிச்சை பெற வசதியாக அரசு மன நல மருத்துமனை தேனியில் ரூ. 10 கோடியில் அமைக்கப்படும்.

-மாற்றுத் திறனாளி மாணவர்கள் உயர் கல்வி படிக்க கல்விக் கட்டணம் ரத்து

-9045 சத்துணவு மையங்கள் அமைக்க ரூ. 178 கோடி ஒதுக்கீடு.

-மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்களுக்கு ரூ. 176 கோடி ஒதுக்கீடு. அவர்களுக்கான மாத உதவித் தொகை ரூ. 400 ஆக அதிகரிப்பு

-மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உதவி செய்ய ரூ. 124 கோடி ஒதுக்கீடு.

-இலவச காஸ் அடுப்புத் திட்டத்திற்கு ரூ. 140 கோடி ஒதுக்கீடு

-புதிதாக 50,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்.

-நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வாழும் மகளிரைக் கொண்ட சுய உதவிக் குழுக்களை அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

-சென்னை ராஜிவ் காந்தி சாலையில் மேம்பாலம் கட்டப்படும்

-அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு ரூ. 508 கோடி ஒதுக்கீடு

-ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு.

-ஒகனேக்கல் குடிநீர்த் திட்டம் 2015ம் ஆண்டு முடிவடையும்.

-குடிநீர் வழங்கல் திட்டங்களுக்கு ரூ. 1183 கோடி ஒதுக்கீடு.

-இந்திரா காந்தி வீட்டு வசதித் திட்டத்தின் கீழான உதவி ரூ. 60,000 அதிகரிக்கப்படும்.

-கர்ப்பிணி்ப் பெண்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச அயோடின் கலந்த உப்பு வழங்கும் திட்ட

-ரூ. 500 கோடியில் அண்ணா சாலையில் மேம்பாலங்கள் கட்டப்படும்.

-கோவையில் ரூ. 284 கோடி செலவில் புதிய மேற்கு வெளிவட்டச் சாலை அமைக்கப்படும். மேலும் கோவை-மேட்டுப்பாளையம் இடையே நான்கு வழிசாலை அமைக்க ரூ.40 கோடி ஒதுக்கீடு

-ஓலைக் குடிசைகளை அகற்றி நிரந்தர கான்க்ரீட் வீடுகளாக மாறறும் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்திற்கு ரூ. 1800 கோடி ஒதுக்கீடு.

-பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்திற்கு ரூ. 300 கோடி. ஏழைப் பெண்களுக்கு ரூ. 25,000 திருமண உதவித் தொகையாக வழங்கப்படும்
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Empty
PostSubject: Re: புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்   புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Icon_minitimeFri Mar 19, 2010 3:17 pm

-36 புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.

-அனைத்து ஊராட்சிகளிலும் திருமண மண்டபங்கள் அமைக்கப்படும்.

-ரூ. 2500 கோடியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்.

-வணிக சின்னம் இடப்பட்ட காபி தூள், மாவு, பொடி, ஈர மாவு ஆகியவைகளுக்கு வரிகுறைப்பு அளிக்கப்படுகிறது

-தையல் ஊசி, கத்தரிக்கோல், பட்டன், பெயிண்ட் பிரஷ் ஆகியவற்றுக்கும் வரி குறைப்பு

-கைத்தறியில் பயன்படும் ஜரிகைக்கு கொள்முதல், விற்பனை வரி ரத்து

-திடப்பொருளில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு வரிவிலக்கு

-சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 600 கோடி

-இலவச தொலைக்காட்சி் திட்டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு. நடப்பாண்டில் 44 லட்சத்து 88 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும்.

-கோவையில் சாலை சீரமைப்புத் திட்டங்களுக்கு ரூ. 284 கோடி ஒதுக்கீடு.

-3000 பேருந்துகள் வாங்க ரூ. 250 கோடி

-தமிழக சாப்ட்வேர் நிறுவனங்களின் ஏற்றுமதி தொடர்ந்து ஏறுமுகம்.

-2008-09ல் ரூ. 36,650 கோடியாக சாப்ட்வேர் ஏற்றுமதி இருந்தது.

-மானாமதுரையில் வீடியோகான் தொலைக்காட்சி மின்னணுப் பொருள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவப்படும்.

-விழுப்புரத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

-சிறு தொழில் துறைக்கு ரூ. 98 கோடி ஒதுக்கீடு
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Empty
PostSubject: Re: புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்   புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Icon_minitimeFri Mar 19, 2010 3:18 pm

-ரூ. 17 கோடி மதிப்பீட்டில் 150 பேர் தங்கும் வசதியுடன் கூடிய புற்று நோய் சிகிச்சை மையம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தொடங்கப்படும்.

-மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மயக்க மருந்தியல் துறை இந்தியாவிலேயே மிகப் பெரிய துறையாகும். இது வரும் நிதியாண்டில் உயர் மையமாக தரம் உயர்த்தப்படும்.

-திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

-சுகாதாரத் துறைக்கு ரூ. 3889 கோடி ஒதுக்கீடு.

-கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 750 கோடி ஒதுக்கீடு.

-108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு ரூ. 79 கோடி ஒதுக்கீடு.

-மீனவர்கள் பயன்படுத்தும் ஐஸ் கட்டிகளுக்கு வரி விலக்கு

-கடல் அரிப்பு தடுப்புத் திட்டப் பணிகளுக்கு ரூ. 200 கோடி

-இறக்குமதி சர்க்கரைக்கு ஓராண்டுக்கு வரி விலக்கு

-பாக்குமர இலை தட்டு, தொன்னை மீதான வரி ரத்து

-அரசு கல்லூரிகளில் எம்.ஏ, எம்.எஸ்.சி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து.

-புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் 4 அரசு கலை, 7 தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்படும்.

-மேலூரில் பாலிடெக்னிக் தொடங்கப்படும்.

-விழுப்புரத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு விரிவாக்க மையம் உருவாக்கப்படும்.

-மாணவர்களுக்கு ரூ. 10 கோடியில் ஆங்கில டிக்ஷனரி வழங்கப்படும்

-மதுரையில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.

-ரூ. 68 கோடியில், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், ஈரோடு மாவட்டங்களில் படிக்கும் பாரதம் திட்டம்.

-2000 நடுநிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் வழங்க ரூ. 50 கோடி ஒதுக்கீடு.

-5000 பள்ளிகளில் ரூ. 85 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

-125 உயர் நிலைப் பள்லிகள் மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

-நகர்ப்புறங்களில் குடிசைகளை அகற்றி அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்ட ரூ. 300 கோடி

-200 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்

-ரூ. 120 கோடியில் 2000 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்.

-காவல்துறைக்கு ரூ. 2962 கோடி நிதி ஒதுக்கீடு.

- மிளகு, சீரகம், சோம்பு, பொடி வகைகளுக்கு வரி விலக்கு. பொடி வகைகளுக்கான மூலப் பொருட்களுக்கும், சோற்றுக் கற்றாழை மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கும் வரி விலக்கு
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Empty
PostSubject: Re: புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்   புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Icon_minitimeFri Mar 19, 2010 3:19 pm

-தமிழகத்தில் தீவிரவாதம் தலையெடுக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

-சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்

-இலங்கையில் அரசியல் அதிகாரப் பகிர்வு விரைவில் ஏற்பட மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

-முகாம்களில் உள்ள தமிழர்கள் விரைவில் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்ப மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கூடுதலாக 4.5 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யும் வகையில் ஏரிகள் புனரமைப்பு

-விவசாயிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்படுகின்றன.

-முல்லைப் பெரியாறு அணை ஆய்வுக் குழுவை ஏற்பதில்லை என்ற தமிழக அரசின் முடிவில் மாற்றம் இல்லை

-உணவு மானியத்திற்கு ரூ. 3750 கோடி ஒதுக்கீடு.

-நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு

-காவிரியில் கதவணை அமைக்க ரூ. 193 கோடி ஒதுக்கீடு

-நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ. 200 கோடி

-தாமிரபரணி, நம்பியாறு ஆறுகள் இணைப்புக்கு ரூ. 126 கோடி

-பரம்பிக்குளம், ஆழியாறு கால்வாயை சீராக்க ரூ. 127 கோடி

-ரூ. 439 கோடியில் ஏரிகள், குளங்கள் புனரமைப்புத் திட்டம்.

-ரூ. 609 கோடியில் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

-கோவை ஆவின் பால் பண்ணை நவீனமயமாக்கப்படும்.

-மாற்றுத்திறன் படைத்தோருக்காக முதல்வர் கருணாநிதி மேற்பார்வையில் தனித் துறை

-விவசாய சுய உதவிக் குழுக்களுக்கு உதவ ரூ. 10 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு.

2010-11ல் கூடுதலாக 10 ஆயிரம் விவசாய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.

-விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு ரூ. 295 கோடி மானியம்.

-2010-11ல் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ. 140 கோடி

-கரும்பு விவசாயிகளுக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டு ரூ. 1650 மற்றும் அரவைக் கூலி மற்றும் போக்குவரத்து செலவு உள்பட ரூ. 2000 ஆக வழங்கப்படும்.

-செம்மை நெல் சாகுபடித் திட்டம் 6.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படும்.

-சன்னரக நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ. 1,100 வழங்கப்படும்

-சொட்டு நீர்ப்பாசனத் திட்டம் 77,000 ஏக்கர் நிலத்தில் விரிவுபடுத்தப்படும்.

-விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 891 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது

-இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ. 2,500 கோடி பயி்ர் கடன் வழங்கப்படும்
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Empty
PostSubject: Re: புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்   புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Icon_minitimeSun Mar 21, 2010 1:47 pm

super karthis Very Happy flower flower flower
Back to top Go down
Sponsored content





புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Empty
PostSubject: Re: புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்   புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் Icon_minitime

Back to top Go down
 
புதிய சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நாளை நமதே
» நாளை நமதா?
» தமிழக இசுலாமிய ஆட்சியாளர்கள்
» நேற்று இன்று நாளை - ஏ.ஏ.ஹெச்.கே.கோரி
» இன்று புகைப்பவருக்கு நாளை என்பது இல்லை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS-
Jump to: