arun. Administrator
Posts : 2039 Points : 6412 Join date : 2010-06-22
| Subject: ~~ கண்ணாடி மனம்~~® Tue Nov 29, 2011 9:33 am | |
| கண்ணாடி மனம்
* எதையேனும் மறைத்தல் என்பது பொய்மையின் இயல்பு!
* பிறர் அறியாமல் செய்ய விரும்புவது எப்போதும் நல்லவையாய் இருப்பதில்லை!
* வெளிப்படையாக செய்வதற்கில்லை ஒருபோதும்... குற்றங்களையும் துரோகங்களையும்!
* களவாடத்தான் கண்மறைக்கும் இருளும் சுயமுகத்தை மறைக்கவே முகமூடி நிழலும் தேவையாகிறது இங்கே!
* மறைந்து திரியும் காதலும் மணம் முடித்த பிறகே ஊரறிய வலம் வருகிறது!
* ஒளி ஊடுருவும் கண்ணாடி போல ரகசியம் அறியாதது அல்லது அறிய வேண்டிய தேவையும் இல்லாதது உண்மையும், அன்பும் மன்னித்தலும்!
* ரசம் பூசப்படாத கண்ணாடியில் உன் முகத்தை பார்க்க இயலாதுதான்!
* ஆனால், அதற்கான அவசியமும் இருக்காது... எதிர்படும் முகங்களோடு பரஸ்பரம் பார்வையை பரிமாற முடியும் என்பதால்! | |
|