இழிந்தோர் செவிதனில்
இடியென முழங்கும் பட்டாசே ..!
தமிழ் மீது இடைவிடா அக்கறை
பேனும் சக்கரையே..!!
எத்திசையும் உங்கள்
கவிதை மணம் வீசட்டும் !!!
மொழியில்லை சொல்லில்லை,என்
நெஞ்சத்தின் வாழ்த்தினை சொல்ல.. .
உள்ளத்தின் உணர்வுகளை
ஒருமுகமாய்க் குவிக்கின்றேன் ...!..
Karthikeyan Loganathan என்னும் புது கவிதைக்கே கவிதையா ?
எனவார்த்தைகள் எனைக் கண்டுசிரித்தன!!!...
இப்படி இன்னும் எத்தனையோ எத்தனையோ ....
எழுதிக் கொண்டே போனால் மறந்துவிடுவேன்..
தங்களை வாழ்த்த ....
பிறந்தநாள் வாழ்த்துக்கள் !