எமது நண்பர்கள் எழுதிய கவிதைகள் உங்கள் பர்வைக்கு
ramKL:
இரவுகளில் உறக்கத்தை மட்டுமே
கொண்டிருந்த என் விழிகளின்
தூக்க நேரத்தை புரட்டி போட்ட BTC யே நீ வாழ்க ...
priyamudan:
கருப்பு போர்வைக்குள்...
கண்சிமிட்டும் மின்மினிகள் உழைத்திட்ட கதிரவன்...
உறங்கிட சென்றுவிட்டான்... உலகத்தின் வெளிச்சத்தினை... உள்ளத்தில் மறைத்து வைத்தான்.
Karthis:
நிலா நிலா ஓடிவா
இரவின் மடியில் பாடிவா
நில்லாமல் ஓடிவா
நட்சத்திரம் கொண்டுவா
new_dust:
மந்திரனும் தந்திரனும்
கண் விழித்து காத்திருப்பர்..!
சந்திரனும் இல்லை என்றால்.,
விண்ணதிர கூத்தடிப்பர்..!
இந்திரனுக்கு மட்டுமல்ல..,
உழைக்கும் எந்திரனுக்கும்..,
ஓய்வு கேக்கும் இரவு !!
மந்திரன் காவு கொடுத்து
ஆவி எடுப்பான்,
தந்திரன் சாவு கொடுத்து
சாவி திறப்பான் !!
new_dust:
மாலை நேரத்தில்.,
வாடி உதிரும் பூக்களுக்கு
ஆறுதலாய்., நான் இருக்கிறேன்
என மரத்தில்.,மீதி இருக்கும்
பூக்கள் மலரும் இரவு !!
இது பூக்களுக்கு மட்டுமல்ல...,
மனித உயிர்களுக்கும் !!
இரவு தானே,உயிர் பலி நிறைய
வாங்குகிறது..,இரவில் தானே.,
புதிய உயிரும் மலர்கிறது !?!
இது இறைவனின்
சமநிலை சமதர்ம கோட்பாடு !!
sindhu:
இரவு கண்ட கனவு மறந்து
போகலாம் . ஆனால் இதயத்தில் ஒருவர் தொட்ட நினைவு
என்றும் மறைவதில்லை
Ajaykumar:
அன்பே நான் வானமாக
இருந்தாலும் ,என்னை சுற்றி நிறைய
நட்சதிரகள் இருக்கின்றன ,
ஆனால் எங்க இருந்தாலும் என் கண்களுக்கு நீ தான் தெரிகிறாய்
என் அன்பு கருவாச்சி
rulespuchandi:
இரவாக நான் இருளாய்
சூரியனும் சந்திரனும்
என்னை கைவிட்டாலும்
கைவிடாத விடிவெள்ளியாய் நீ !!
என்றும் என்னுடன் !!!
Ajaykumar:
வானமாக நான்
அதில் நிலவாக நீ
நட்சத்திரமாக உன் தங்கைகள்
பிறகு ஏன் எரிச்சலாக
வந்தார் உன் தந்தை
ஏறிகல்லாக ...!!!
Ajaykumar:
சூரியனாக வாழ்கிறேன் நான்
பூமியாக வாழ்கிறாய் நீ !
எப்படி வந்தது என்பது தெரியவில்லை நமக்குள் வந்த காதல் எனும் சூரியன் !!!
anbuselvi20052000:
உயிர்களுக்கு உணவளிக்க
உணர்வுகளுக்கு உயிர்கொடுக்க
ஒளிதந்து உலா வந்த சூரியன்
ஓய்வு எடுக்க தேடும் மடிதான் இரவு
கண் சிமிட்டும் மின்மினியை வான் வீதியில் ஒளிரும் விண்மீன்கள்
மேக கூட்டத்தில் மறைந்து விளையாடும் வட்ட பந்தை நிலா
வளர்ந்தும் தேய்ந்தும் வடிவம் காட்டும்
உழைத்து ஓடாய் தேய்ந்த உழைப்பாளர்
குடும்பத்தோடு குதூகலித்து நிலா சோறு உண்டு மகிழும் நேரம்
இருள் என்னும் துன்பம் நீங்கி
ஒளி என்னும் வாழ்வு மலரும் !!
வாழ்வியல் தத்துவத்தை
வழங்கும் காலம் இரவு
sigamani:
BTC முகம் பார்க்காத நாளெல்லாம்
அமாவாசை இரவாகி போனது…
அவள் கண் விழிகளில் இல்லாத போதை....இரவு வரும் BTC நண்பர்களிடம் ….தினமும் இரவுக்காக காத்திருக்கிறோம் கணிபொரியுடன்
இரவு நேரம் தானே பெஸ்ட் தமிழ் சாட் ரூமில் நட்சத்திரங்கள் உதிக்கும்
( நான் குறிப்பிடும் நட்சத்திரங்கள் நம் கிரிகெட் வீரர்கள் )
lavanya:
வானம் எனும் தேர்வு தாளில் நான்
எழுதுய நகரும் விடைகள் நட்சத்திரங்கள் சரியாய் மதிப்பது
AruNesh:
நட்சத்திரம் -- இரவு பனியில் நனைந்த நிலா பெண்ணின் தும்மலில் சிதறிய முத்துக்களா நீங்கள் ?
Kanchana sugi:
காதோடு அவள் செய்த குறும்பு
"சத்தம் செய்யாதே முத்தம் செய்"
இமைகள் தூங்கிய போதும்
அவன் இதயம் கேட்கும்
"மீண்டும் ஒரு இரவு அவளுடன்"
அவன் இரவில் கேட்ட புது மெல்லிசை
அவள் இதழ் "சிரிப்பு"
kaviasmi1:
இரவாக ரம்யா BTC யை நீ
அரவணைத்தால்…. இரவின் மடியினிலே விண்மீன்ககளாய்
நாங்கள் ஜொலித்திடுவோமே !!
Greentamilan:
எத்தனை விடியல் வந்தாலும் நாம் உறங்குவது இரவின் மடியில் தான் எத்தனை மீன்கள் இருந்தாலும் ...
நம் கண்ணுக்கு ஜொலிக்கும் மீன்
விண்மீண் தான் ...
karthis:
கடவுளின் காலடிச்சத்தங்கள்
இரவின் நட்சத்திரங்கள்
பகலின் சிதறல்களாய்...
kaviasmi1:
இறைவன் முதலில்
படைத்தது எழுதுகோல்..
கல்வியின் பெருமையைக்
கூறும் அளவுகோல்..
நமை கற்கத் தூண்டும்
தூண்டுகோல்..
கல்வியே ஞானத்தின்
திறவுகோல்..
சாதிக்க பிறந்த பெண்ணே!
அந்த சாதனைக்கு தேவை
கல்வி தானே!மூலையில் முடங்கிடாதே பெண்ணே!
மூளையாய் செயல்படதேவை கல்வி
அறிவெனும் ஒளியை
மிளிரச் செய் பெண்ணே!
அறியாமை இருளை
அகற்றிவிடு பெண்ணே!
புறஅழகை மட்டும்
மெருகேற்றாதே பெண்ணே!
அகஅழகை கல்வியினால்
மெருகேற்றிடு பெண்ணே!
பார்வையை தாழ்த்தி
நடந்திடு பெண்ணே!
கல்வியினால்
தன்னம்பிக்கையை
நிமிரச்செய் பெண்ணே!
அடுப்பூதும் இல்லத்தரசியாகவும்
இருந்திடு பெண்ணே!
ஆகாயத்தில் பறந்திடவும்
முயற்சி செய் பெண்ணே!
ஆபாசப் பார்வையிலிருந்து
உனைக் காத்துகொள் பெண்ணே!
அடக்குமுறையை எதிர்த்து போரிடவும் துணிந்து நில் பெண்ணே!
kaviasmi1:
கல்வி கற்க செல்பவர்
திரும்பும் வரை..
அவர் இறைவனின் பாதையிலே..
பெண்ணே.. புறப்படு கல்வி கற்க..
நீயும் அப்பாதையிலே..
Giragan Scarlet Pimpernal:
காதலுக்கு கண் இல்லை
என்று சொல்வார்கள் ..!!!
ஆனால் நான் காதலித்ததே உன் கண்ணை பார்த்து தான் ..!!!
thamarai:
இருளின் நிறத்தைக் கண்டுபிடிக்க முயன்றோம் நாம் அன்று….
ஜன்னலின் சிறுதுளையில்
நுழைந்த நிலாக்கீற்றைக்
கூட அடைத்து சுற்றிசுற்றி
பார்த்தாய் நீ….
நம் நான்கு கண்கள் மட்டும்
பளிங்காய் ஒளிர்ந்தன
மூக்குத்தி! என்றாய்
சிறு ஒளியாம் அதனை கழற்றி
ஒளித்து வைத்தேன்
thamarai:
இருட்டின் நிறம்
அருகிவிட்டது
கண்ணுக்குத்தெரியா
கருநீலத்தில் மூழ்கி
கிடக்கும் அவ்வமயம்
அறியாது உன் நகம் என் மீது
பட்டதில் கிளர்ந்த பேர்சுடரில்
இருள் சட்டென போயே போய்
விட்டது எப்போதாவது இருளின் நிறம்
கண்டுபிடிப்போமா நாம்?