இந்த வார கவிதை நேரம் நிகழ்ச்சியில் எங்களை மகிழ்வித்த “இசை” கவிதைகள் உங்களையும் மகிழ்விக்கட்டுமே ...
New _dust :
என் முன்னே.,
நீ நடக்கும் பொழுது
தரை அதிரும் இசை.,
என் மனதில் வரப்போகும்
பூகம்பத்தின் முன்னறிவிப்போ ?!
Karthis:
இசை-
அனைவரையும் மயக்கும்..,
அறிய இயலா
பெர்முடா முக்கோணம் !!
பனித்துளி:
ஒவ்வொரு லயமும் ஸ்வரமும்
இசைதான்.,
இதயத்தின் ஒலி போல !!
piraimathi:
குயிலின் குரல்,
அலையின் ஆரவாரம் ,
இடியின் முழக்கம்,
ஆர்ப்பரிக்கும் கடல் ,
குழந்தையின் மழலை ஒலி,
கொட்டும் மழையின் சத்தம் ,
எல்லாமே இசை ஆகும் ,
ஒலிகள் இல்லா உலகம் இல்லை..
அவை ஒவ்வொன்றும் ,
ஒரு செய்தியைச் சொல்லும் ,
இனிமையான ஒலிகள் எல்லாம் இசை தானே !
-
புன்னகை :
இசை என் உயிரானாய்....
என் மூச்சானாய்....
இசை என்ற ஒன்று என் வாழ்கையில் இல்லை என்றால்
நான் நானாக இல்லை ...
savithakk:
இசை என்பது ஒரு இன்பமான வலி
அது நம்மை தாக்கினாலும் வலிக்காது
இசையை வர்ணிக்க வார்த்தைகள் தான் வேண்டும் என்பதில்லை
இசியி இசை இருந்தாலே போதும்
savithakk:
மனிதன் உருவாக்கியது தான் இசை
மனிதனின் மன அமைதிக்கு நல்
மருந்தும் இசையே ...
இசை என்பதொரு மென்பொருள்...
அந்த இசை இல்லா வாழ்க்கை
உப்பில்லா பண்டம் தான் ....
அந்த இசையை அனைவரும் சுவைத்து தான் பார்ப்போமே ...
keerthana:
உன்னுடன் சேர்ந்து நடக்க
ஆரம்பித்த பிறகுதான்
சாலை ஓர மரங்களிலிருந்து
உதிரும் பூக்களின்
மௌனத்திலும் நான்
இசை கேட்க ஆரம்பித்தேன்..
Ramya:
இசை எனும் இரண்டு எழுத்து மாயம்
நம் கவலைகளை மறக்கச் செய்யும் மந்திரம்
சுருதியும் லயமும் சேர்ந்தால் இசை (பாடல்)
முயற்சியும் உழைப்பும் சேர்ந்தால் இசை (புகழ்)
தாலா ட்டிலே தொடங்கி ஒப்பாரியில் முடியும்
நம் வாழ்க்கையில் எல்லாமே இசை தான்
இசைக்கு மயங்காதவர் எவரும் இல்லை
துன்பமோ துயரமோ இசை எனும் மாயம்
எல்லாவற்றியும் மாற்றி இன்பத்தை மட்டுமே
வாரி வாரி வழங்கும் இனிய மந்திரம் தான் இசை
Arunesh:
இசை ,
முத்தமிழில் ஒன்று ,
ஆனால் இன்று
மற்ற இரண்டையும் வென்று ,
அனைவரின் செவி வழி சென்று
தானே சிறந்தவன் என்று ,
தழைத்தோங்கி நின்று
இறுதியில் ...
உன்னை மட்டுமல்ல ..
அந்த விண்ணையும் முட்டும் ..
vrreddy:
இசை என்ப கவி என்ப யாம் இயம்பும் உணர்வென்ப
யமை இன்று மகிழ்வித்த நட்பென்க..எனினும்
பாடற்க இலக்கணம் அறியாமல் ஏனெனில் : அஹ்ரினம்
பாடலின் பாடாதல் நன்று
veekay:
இமை மூடி
இதயம் வருடும்
மயிலிறகு இசை
மேகம் மூடும்
மலையாய்
சோகம் மூடும்
சுகம் இசை
ரம்யமான சூழலில்
namathu ரம்யா பாடலும்
அருமையான இசையே
இசைக்கு இந்த இசைக் குயிலின் வரிகள் BTC ..யின் இனிய இசையை இதயம் வருடியதே...என்று .கூறுவதற்கும் காரணமும் இந்த இனிய இசையே.....
Anbuselvi:
இசை
வசைபாடுபவர்களையும் இசைய வைக்கும்
மந்திரம் இசை
மனசோர்வுகளை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் மருந்து
ஐந்தறிவு முதல் ஆறறிவுள்ள அனைவரையும் மயக்கும் மாயம்
தெய்வீக உணர்வினைக் கொடுக்கும்
விண்ணில் பறக்கும் விசையை அளிக்கும் வித்து i
அன்னையின் தாலாட்டில் i l தொடங்கி
ஆவி அடங்கும் வரை வாழ்க்கையில் இணைந்திருப்பது i
ஒவ்வொரு ஒலியும் இசையின் வடிவமே
இசையோடு இணைந்து வாழ்வோம்
பிறரோடு இசைந்தும் வாழ்வோம்