BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசுஜாதா (எழுத்தாளர்) Button10

 

 சுஜாதா (எழுத்தாளர்)

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 40
Location : srilanka

சுஜாதா (எழுத்தாளர்) Empty
PostSubject: சுஜாதா (எழுத்தாளர்)   சுஜாதா (எழுத்தாளர்) Icon_minitimeFri Mar 26, 2010 1:09 pm

சுஜாதா (மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

பிறப்பு எஸ்.ரங்கராஜன்
மே 3 1935
திருவல்லிக்கேணி, சென்னை, இந்தியா


இறப்பு பெப்ரவரி 27 2008 (அகவை 72)
சென்னை, இந்தியா

புனைப்பெயர் சுஜாதா


தொழில் பொறியாளர், எழுத்தாளர்


நாடு இந்தியர்


துணைவர் சுஜாதா ரங்கராஜன்


பிள்ளைகள் கேசவா பிரசாத், ரங்கா பிரசாத்


வாழ்க்கைக் குறிப்பு

ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கவுன்சில் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை உருவாக்க முக்கியக் காரணராக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இந்த எந்திரத்தை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.


புனைபெயர்

இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி.ரங்கராஜனுடன் குழப்பம் ஏற்பட்டதால் தன் மனைவி பெயரை, 'சுஜாதா', தன் புனைப்பெயராக வைத்துக்கொண்டார்.கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.


ஆக்கங்கள்

நாவல்
பதவிக்காக
ஆதலினால் காதல் செய்வீர்
பிரிவோம் சந்திப்போம்
அனிதாவின் காதல்கள்
எப்போதும் பெண்
என் இனிய இயந்திரா
மீண்டும் ஜீனோ
நிலா நிழல்

கரையெல்லாம் செண்பகப்பூ
யவனிகா
கொலையுதிர் காலம்
வசந்த் வசந்த்
ஆயிரத்தில் இருவர்
பிரியா
நைலான் கயிறு
ஒரு நடுப்பகல் மரணம்
மூன்று நிமிஷம் கணேஷ்
காயத்ரி
கணேஷ் x வஸந்த்
அப்ஸரா
மறுபடியும் கணேஷ்
வீபரீதக் கோட்பாடுகள்
அனிதா இளம் மனைவி
பாதிராஜ்யம்
24 ரூபாய் தீவு
வசந்தகாலக் குற்றங்கள்
வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
கனவுத்தொழிற்சாலை
ரத்தம் ஒரே நிறம்
மேகத்தைத் துரத்தினவன்
நிர்வாண நகரம்
வைரம்
ஜன்னல் மலர்
மேற்கே ஒரு குற்றம்
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
நில்லுங்கள் ராஜாவே
எதையும் ஒருமுறை
செப்டம்பர் பலி
ஹாஸ்டல் தினங்கள்
ஒருத்தி நினைக்கையிலே
ஏறக்குறைய சொர்க்கம்
என்றாவது ஒரு நாள்
நில் கவனி தாக்கு
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
பெண் இயந்திரம்
சில்வியா


குறுநாவல்

"ஆயிரத்தில் இருவர்"
"தீண்டும் இன்பம்"
"குரு பிரசாத்தின் கடைசி தினம்


சிறுகதை

ஸ்ரீரங்கத்துக் தேவதைகள்

நாடகம்

Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு
கடவுள் வந்திருந்தார்

கட்டுரை

கணையாழியின் கடைசி பக்கங்கள்
கற்றதும் பெற்றதும் [பகுதி 1-5]
கடவுள் இருக்கிறாரா
தலைமை செயலகம்
எழுத்தும் வாழ்க்கையும்
ஏன் ? எதற்கு ? எப்படி ?
சுஜாதாட்ஸ்
இன்னும் சில சிந்தனைகள்
தமிழ் அன்றும் இன்றும்
உயிரின் ரகசியம்
நானோ டெக்னாலஜி
கடவுள்களின் பள்ளத்தாக்கு
ஜீனோம்
திரைக்கதை எழுதுவது எப்படி

திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்

காயத்ரி
கரையெல்லாம் செண்பகப்பூ
ப்ரியா
விக்ரம்
வானம் வசப்படும்
திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்

காயத்ரி
கரையெல்லாம் செண்பகப்பூ
ப்ரியா
விக்ரம்
வானம் வசப்படும்
ஆனந்த தாண்டவம்

பணியாற்றிய திரைப்படங்கள்

ரோஜா
இந்தியன்
ஆய்த எழுத்து
அந்நியன்
பாய்ஸ்
முதல்வன்
விசில்
கன்னத்தில் முத்தமிட்டால்
சிவாஜி த பாஸ்
செல்லமே

மறைவு

உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29.02.2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில
் நடைபெற்றன.
Back to top Go down
 
சுஜாதா (எழுத்தாளர்)
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» 'எழுத்துக்கலை' பற்றி சுஜாதா
» எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பார்வையில் எழுத்தாக்கங்கள்..!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: