BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகாதல் கவிதைகள் Button10

 

 காதல் கவிதைகள்

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 42

காதல் கவிதைகள் Empty
PostSubject: காதல் கவிதைகள்   காதல் கவிதைகள் Icon_minitimeFri Mar 26, 2010 5:53 pm

தேடல்

எல்லைக்குட்ப்பட்ட
ஆசைகளின் விளிம்பில்..
உனக்கும் எனக்குமான
இடைவெளியை இட்டு நிரப்ப
வார்த்தைகளையும்..
இன்னபிற.. பொருள் தரும்..
குறிப்பறிவித்தல்களையும்..
தேடி.. தேடியே..
கழிகிறது காலம்.
சமயங்களீல்
சொல்லப்படாத வார்த்தைகளை மீறி..
பார்வைகளின் அர்த்தப் பிரவகிப்பில்
நனைகிறோம்.. நாம்.
உதடுகளில்.. ஊனமும்..
மொழி பேசத் துடிக்கும்
கருவிழிகளும் என..
பெருமூச்சில் ஓங்கிக் கலந்து..
கரைகிறது..
நம் எல்லையற்ற நேசம்


நீ, நான், நிலா


நான் நிலாவைப் பார்க்கும்
அதே நேரத்தில்தான்
நீயும் பார்க்கிறாய் நிலாவை..
நான் பார்ப்பதை நீயும்..
நீ பார்ப்பதை நானும்
பார்க்க முடியாமல் தவிப்பதைப்
பார்த்தே கிடக்கிறது நிலா.

புதையல்

நேசப்புதையல் தேடிப்
புறப்பட்ட
நெடும் பயணத்தில்
வழிப்போக்கர்களாய்
வந்தவர் கோடி..
வழிகாட்டியாய் வந்தது..
நீ மட்டுமே!


நினைவுகளே!

உன்னை நினைக்கையில்
நினைத்துக் கொண்டிருக்கையில்
நினைத்துக் கொண்டே இருக்கையில்
உன்னை நினைப்பதைத் தவிர
வேறொன்றுமில்லை
நான் நினைப்பதற்கு!


போதுமடி!

போதும்.. போதுமென
கிறு கிறுக்கிறேன் நான்..
என் உடல் பொருள்.. ஆவியின்
அத்தனை வாயிலும்..
வழிந்து கொட்டுகிறது..
வரிந்து.. வரிந்து..
நீ ஊட்டிய பிரிவு!
Back to top Go down
 
காதல் கவிதைகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» காதல் கவிதைகள்
» தமிழ் கவிதைகள்
» ஹைக்கூ(க்) கவிதைகள்
» ~~ Tamil Story ~~ கிஷான்னு ஒரு காதல் கிறுக்கனும், அருணானு ஒரு காதல் கிறுக்கியும்
» இரு ஹைக்கூ கவிதைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: