சோம்பேறித்தனம் தான் நம்முடைய மிகப்பெரிய எதிரி - நேருஜி
நம்முடைய எதிரியையும் நாம் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் - காந்திஜி
அப்பாவி அரசு : அப்படின்னா சோம்பேறித்தனத்தை நேசிக்கணுமா?
***
நம்ப தலைவருக்கு பொருளாதாரம் பற்றி ஒன்னுமே தெரியலையே.....
ஏன்?
பணவீக்கத்தை குறைக்கறதுக்கு அயோடெக்ஸ் தடவலாம்னு பேசியிருக்காரு!
***
[manage]
கூலவி கொட்டினா வலிக்கும் ....
தேள் கொட்டினா வலிக்கும் ....
ஆனா
முடி கொட்டினா வலிக்குமா ??????
---- தத்துவ ரீதியா யோசிப்போர் சங்கம்
***
[manage]
ஸௌத் இண்டியால நார்த்தங்காய் கிடைக்குதே
நார்த் இண்டியால ஸௌத்தங்காய் கிடைக்குமா
***
[manage]
பஸ் : உன்னால மட்டும் எப்படி வேகமா போக முடியுது ....
ராக்கெட் : உனக்கு பின்னால பத்தவச்சா அப்போ தெரியும்
***
அடர்ந்த காட்டில்..
"ஏண்டா.. ஷூ மாட்டிக்கிறே?"
"புலி நம்மைப் பார்த்து துரத்துச்சினா! அதுக்குத்தான்"
"புலியை விட வேகமா ஓடிடுவியோ?"
"புலியை விட வேகமா ஓடணும்னு அவசியம் இல்ல. உன்னை விட வேகமா ஓடினாலே போதும்!"
***
[manage]
பெண்: டாக்டர் என்னோட வீட்டுக்காரர் 1 லிட்டர் பெட்ரோல் குடிச்சிட்டார்.
டாக்டர் : 60கிலோமீட்டர் ஓடச்சொல்லுங்க சரியாப்போயிடும்.
***
[manage]
''மன்னா! தங்களைப்பற்றி நான் பாடிய பாடலில்
தங்களுக்குப் பிடிக்காதது எதுவோ?''
''வேறென்ன... பைத்தியம்தான்
***
நிறுவனம் ஒன்றில் புதிதாக வேலையில் சேர்ந்த ஒருவர், தனக்கு டீ தேவை என்று கூற போனை எடுத்து பணியாளருக்கு டையல் செய்தார். ஆனால் அது தவறாக வேறு எண்ணிற்கு சென்றுவிட்டது.
.
போன் எடுக்கப்பட்டதும்,
புதியவர் : உடனடியாக எனக்கு டீ கொண்டு வா.
மறுமுனையில் : நீ யாரிடம் பேசுகிறார் என்று உனக்குத் தெரியுமா?
புதியவர் : தெரியாது
மறுமுனையில் : இந்த நிறுவாகத்தின் இயக்குநர்.
புதியவர் : நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?
மறுமுனையில் : இல்லை
புதியவர் : அப்பாடா.. நன்றி!
***
[manage]
மிஸ்டர் மொக்கை முதன் முறையாக விமானத்தில் சென்றார்..அவருக்குப் பக்கத்தில் ஒரு வெளி நாட்டுக்காரர்.. அவர் அடிக்கடி பணிப்பெண்ணைக் கூப்பிட்டு ஏதாவது சொல்லுவார்..
விளக்கு ரொம்ப கூசுகிறது..உடனே நிறுத்து...
ஏசி குளிர்கிறது உடனே நிறுத்து..
கொஞ்ச நேரம் கழித்து, அவர் மொக்கையிடம் சொன்னார்.. எஞ்சின் சத்தம் ஜாஸ்தியா இருக்குல்ல..?
உடனே மொக்கை அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார்.. தயவு செய்து அதையும் ஆஃப் பண்ண சொல்லிராதீங்க சார்..!
***