Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: கோணாசணம் Wed Mar 31, 2010 12:38 pm | |
| உடம்பை முடிந்தளவிற்கு ஒரு கோணத்திற்கு வளைப்பதால் இந்த பெயர் வந்தது. செய்முறை : 1. பாதங்கள் இரண்டையும் இரண்டடியில் தள்ளி வைக்கவும்.
2. கைகள் பக்கவாட்டில் தொங்கிய நிலையில் இருக்கட்டும்
3. தலைக்கு மேலே இரு கைகளையும் உயர்த்தி இரண்டையும் இணைத்துக் கொள்ளவும். 4. விரல்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து கோர்த்து கொள்ளவும்.
5. இரண்டு கைகளினது புஜங்களும் காதினை தொட்ட வண்ணம் இருக்கட்டும். 6. உடலை வலது பக்கம் சாய்த்து சில வினாடிகள் இருக்கவும்.
7. மெதுவாக நேராக வரவும்
8. இப்போது இடது பக்கம் சாய்ந்து சில விநாடிகள் இருக்கவும்.
9. மெதுவாக நேராக வரவும்.
சுவாசம்
இயல்பான சுவாசம் எடுத்து விடவும் நேர அளவு
10 முதல் 20 வினாடிகள் ஆரம்பத்தில் வளைந்த நிலையில் நிற்கவும். படிப்படியாக நேரத்தை அதிகரித்து ஒரு நிமிட நேரம் வளைந்து நிற்கப் பழகவும். இரண்டு மூன்று முறை தொடர்ந்து செய்யலாம்.
மனோநிலை
இடுப்பு ஒரு பக்கம் இழுபட்டு இருப்பதையும் மறுபக்கம் நன்றாக வளைவதையும் அவதானிக்கவும்.
குறிப்பு
முழங்கால்கள் மடியக் கூடாது. தோள்பட்டை நெஞ்சு முன்னால் வரக் கூடாது. பலன்கள்
1. இறுக்கமான முதுகுபுறம் உள்ளவர்களுக்கு நல்லது. 2. ஒரு புறம் இறுகி மறுபுறம் வயிறு தளர்வதால் வயிற்று பகுதி தசைகள் தொய்வு ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும். ....... | |
|