Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: தெளிவு பாரதியார் Thu Apr 01, 2010 1:03 am | |
| எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின் ஏழைமை யுண்டோடா? - மனமே! பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின் புத்தி மயக்கமுண்டோ?
உள்ள தெலாமோ ருயிரென்று தேர்ந்தபின் உள்ளங் குலைவ துண்டோ? - மனமே! வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின் வேதனை யுண்டோடா?
சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின் செய்கையுந் தேர்ந்துவிட்டால், - மனமே, எத்தனை கோடி யிடர்வந்து சூழினும் எண்ணஞ் சிறிதுமுண்டோ?
செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத் தேவ னுரைத்தனனே; - மனமே! பொய்கரு தாம லதன்வழி நிற்பவர் பூதல மஞ்சுவரோ?
ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க் கச்சமு முண்டோடா? - மனமே! தேன் மடை யிங்குத் திறந்தது கண்டு தேக்கித் திரிவமடா! | |
|