BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inவாழைப்பழம் குணமாக்கும் வியாதிகள் Button10

 

 வாழைப்பழம் குணமாக்கும் வியாதிகள்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

வாழைப்பழம் குணமாக்கும் வியாதிகள் Empty
PostSubject: வாழைப்பழம் குணமாக்கும் வியாதிகள்   வாழைப்பழம் குணமாக்கும் வியாதிகள் Icon_minitimeMon Apr 05, 2010 9:48 am

வாழைப்பழம் குணமாக்கும் வியாதிகள்


வாழைப் பழம் என்பது மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் பழம் என்ற போதிலும், அதில் இருக்கும் சத்துகளும், மருத்துவ குணங்களும் வேறு எந்த பழத்திலும் இருக்காது. பல்வேறு நோய்களுக்கு வாழைப்பழம் மருந்தாகவும் அமைகிறது.

அதாவது, நெஞ்செரிப்பு நோய் உள்ளவர்கள், வாழைப் பழம் சாப்பிடலாம். வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் விரைவில் குணமாகிவிடும்.உடற்பருமனாக இருப்பவர்களும், மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கும் வாழைப் பழம் பயன்தரும். அதாவது உடற் பருமனாக இருப்பவர்கள் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு நிலையான தன்மைக்கு கொண்டு வருவதால் உடற்பருமன் குறைவதாக அந்த மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஒல்லியான தேகம் கொண்டவர்கள் தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும் என்றும் அறியப்படுகிறது. தினமும் ஒருவர் ஒரு வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் அவருக்கு இயற்கையாக ஏற்படும் பல வியாதிகள் உண்டாகாது என்பது பலரும் அறிந்தது.அல்சர் எனப்படும் குடற்புண் ஏற்பட்டவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது. பொதுவாக நமது மண்ணில் விளையும் மரம் வாழை மரமாகும். எனவே, இது நமது உடலுக்கு ஏற்றப் பழமாகவும் கருதப்படுகிறது.

ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால் கிடைக்கும் சக்தியை விட, வாழைப் பழத்தின் மூலமாக நமது உடலுக்கு ஏராளமான சத்துகளும், நன்மைகளும் கிடைக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. உடலின் தட்பவெப்பநிலையை சீராக வைப்பதிலும் வாழைப்பழம் அதிகம் உதவுகிறது. வெப்பமான பகுதியில் வேலை செய்பவர்களும், உடல் சூடு கொண்டவர்களும் வாழைப் பழம் சாப்பிடலாம். வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் என்ற பெயரும் உண்டு.ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்த நோய் தாக்கியவர்களுக்கு வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் விரைவில் நீங்கும் என்பது தெளிவாகிறது. புகைப்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அதனை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்கு வாழைப்பழம் உதவிகரமாக இருக்கும்.

வாழைப்பழத்தில் அதிகமாக இருக்கும் B6, B12, புகைப்பிடிப்பதால் ஏற்படும் நிகோடினை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதற்கு உதவும். இதனால் எளிதாக புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம். காலையில் சிலரால் எழுந்திரிக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இதனை காலை தூக்க நோய் என்று குறிப்பிடுவோம். இதற்கு அவர்கள் ஒவ்வொரு உணவு இடைவேளைக்கு ஒரு முறை வாழைப் பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.

வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது. எனவே ரத்த சோகை இருப்பவர்களும், கர்பிணிகளும் வாழைப் பழத்தை சாப்பிடுவது நல்ல பலன் தரும். வாழைப் பழத்தில் குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடியுமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் தெரிவிக்கிறது. எனவேதான் அந்த காலத்திலேயே, வெற்றிலையுடனும், சாமிக்குப் படைக்கவும், தாம்பூலம் வைத்துக் கொடுக்கவும் இவ்வளவு சிறப்பு வாய்ந்த வாழைப் பழத்தை பயன்படுத்தியுள்ளனர். எனவே இந்த பழத்தை சாப்பிடும்போது பலருக்கும் நல்ல பயன் கிடைக்கும் என்ற சிந்தனையோடு வாழையின் பயன்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாமும் வாழையின் பயனை அடைவோம்
Back to top Go down
http://wwww.myacn.eu
 
வாழைப்பழம் குணமாக்கும் வியாதிகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» வாழைப்பழம்
» வியாதிகள் இல்லாத சிறுவர் உலகம்!
» இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: HEALTH & BEAUTY SPECIAL-
Jump to: